நாம் கருத்துபரிமாருவது நம் மனதின் வெளிப்பாடாக பல வேளைகளில் அமைந்துவிடும்!
ஒரு தனிமனிதனின் தவறையோ, குற்றத்தையோ பகிரங்க படுத்தி விவாதம் செய்வதற்க்கானதல்ல ஊடகம்!
பொதுவாழ்வில் உள்ளவர்களின் கொள்கைகளை, கொள்கை சறுக்கல்களை, சந்தர்ப்பவாதங்களை, அயோக்கியத்தனங்களை தட்டி கேட்கலாம், அதை விமர்சிக்கலாம்....இதனால் சம் மந்தப்பட்டவர்கள் தங்கள் தவறு களை சரி செய்து கொள்ளலாம்.....மாற் றம் ஏற்படலாம்....சமுதாயத்தில். ..ஏன் உலக அளவில் நாம் கண்டுவருவது இத்தைகைய நடை முறைகள்!!!அதுவே ஊடகத்தின் சிறப்புகளில் ஓன்று!
நாம் ஒரு இயக்கத்தையோ, கட்சியையோ, அதன் கொள்கைகளையோ அல்லது முடிவுகளையோ வைத்து விமர்சிக்கும்போது அதனை வெறுப்பாகவும், தனிமனித தாக்குதல் போலவும் வியாக்கியானம் செய்வது, அவர்களின் பக்குவத்தையும், மனப்பாங்கையுமே வெளிச்சம் போட்டு காட்டுகிறது!
நாம் சொல்வதில் கோளாறு உள்ளது என்று நினைப்பவர்கள் முதலில் தங்கள் புரிதலில் உள்ள கோளாறை சரி செய்வது நன்று.....
# நாம் எதை சொல்கிறோம், செய்கிறோம் என்பதற்கு மட்டுமே நாம் பொறுப்பு...உங்கள் புரிதல்களுக்கு அல்ல!!!
Comments
Post a Comment