Skip to main content

இத்தா


இத்தா




"இத்தா" (காத்திருத்தல்) என்பது விவாகரத்து பெற்ற மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு இஸ்லாம் அறிவுறுத்தும் பாதுகாப்பு வளையமாகும்.
 
விவாகரத்து பெற்ற பெண்கள் மூன்று மாதங்களும், கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதங்களும் பத்து நாட்களும், கர்ப்பமான பெண்கள் விவாகரத்து பெற்றாலோ, கணவனை இழந்தாலோ  குழந்தையை ஈன்றேடுக்கும்வரை மறுமணம் புரியாமல் “இத்தா” இருக்கவேண்டும் என இஸ்லாம் அறிவுறுத்துகிறது....
 
 
// திருகுரான் சூரத்துல் தலாக் 65:4 - மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும், ´இத்தா´(வின் தவணை) மூன்று மாதங்களாகவும், தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய (´இத்தா´வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும், மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான். //
 
விவாகரத்து பெற்ற பெண்ணிற்கு மூன்று மாதங்களை அறிவுறுத்துவது அவள் குழந்தை பேறு பெறவில்லை என்ற தெளிவுக்காகவும், மட்டுமல்லாமல் அந்த வேளையில் அவர்களுக்குள் இணக்கம் ஏற்ப்பட வாய்ப்பு ஏற்படலாம் என்பதற்காகவே, அதனாலையே கர்ப்பமான பெண்கள் பிள்ளை பெறுவது வரை காத்திருக்கவேண்டும் எனவும் சொல்லப்படுகிறது. மூன்று மாதங்கள் இத்தா மாதவிடாய் ஏற்படாத பெண்களுக்கும் பொருந்தும்.
 
// திருகுரான் சூரத்துல் தலாக் 2:228 - தலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும்; அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின், தம் கர்ப்பக் கோளறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது. ஆனால் பெண்களின் கணவர்கள் (அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதன் மூலம்) இணக்கத்தை நாடினால், (அத்தவணைக்குள்) அவர்களை (மனைவியராக)த் திருப்பிக்கொள்ள அவர்களுக்கு அதிக உரிமையுண்டு. கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு; ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு. மேலும் அல்லாஹ் வல்லமையும்; ஞானமும் மிக்கோனாக இருக்கின்றான். //
 
 
ஆனால், கணவனை இழந்த பெண்ணிற்கு நான்கு மாதங்களும் பத்து நாட்களும் ஏற்ப்படுத்தியுள்ளது தன கவலையை மறக்கவும், உடனே மறுமணம் புரிவதால் சமுதாயத்தில் ஏற்ப்படும் பித்னாவை களையவும் உதவும் பொருட்டு பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்கிறது இஸ்லாம்....
 
 
// திருகுரான் சூரத்துல் பகரா 2:234 - உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் அம்மனைவியர் நான்கு மாதம் பத்து நாள் பொறுத்திருக்க வேண்டும்;. (இந்த இத்தத்)தவணை பூர்த்தியானதும், அவர்கள் (தங்கள் நாட்டத்துக்கு ஒப்ப) தங்கள் காரியத்தில் ஒழுங்கான முறையில் எதுவும் செய்துகொள்வதில் உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான். //
 
 
இத்தா வேளையில் பெண்கள் அதிக கவனமாக இருக்க வேண்டியுள்ளது. இத்தா இருக்கும் பெண்களிடம் மற்றவர்கள் சூசகமாக மறுமணம் பற்றி பேசுவதில் தவறில்லை என்றாலும் திருமண ஒப்பந்தத்தில் ஏற்ப்படுவது தடுக்கப்பட்டுள்ளது இத்தா காலம் முடியும்வரை. மறுமணத்திற்கு தூண்டும் பொருட்டு ஆண்களை கவரும் வகையில் நளினமாக இருப்பதையும், தன்னை அழகாக அலங்கரித்துக்கொல்வதையும், நறுமணம் பூசுவதையும் இஸ்லாம் தடை செய்கிறது! 
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கணவனை இழந்தப் பெண் குங்குமப்பூச் சாயம் பூசப்பட்ட ஆடை மற்றும் சிவப்பு நிற ஆடையை அணியக்கூடாது. இன்னும் அவள் மருதாணி பூசக்கூடாது. அஞ்சனம் (அதாவது சுர்மா) இடுவதும் கூடாது.
அறிவிப்பவர்: உம்மு சலமா (ரலி)
நூல்: நஸயீ # 3479
 
 
இவை அல்லாமல் வேறு எந்த தடையும் பெண்களுக்கு இஸ்லாம் விதிக்கவில்லை! இந்த தடைகளும் கூட பெண்களின் பாதுகாப்பையும் சமுதாயத்தில் களங்கம் ஏற்படாமல் தவிர்க்கும் முன்னெச்சரிக்கையையும் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டதே என்பதை சிந்திப்பவர்கள் நன்கு உணர முடியும்! அல்ஹம்துலில்லாஹ்!
 
ஆனால், இன்று நம் சமுதாயத்தில் நடப்பது என்ன????
 
கணவனை இழந்த இஸ்லாமிய பெண்களை சிறையில் அடைத்து துன்புறுத்தி தண்டனை அளிப்பது போன்று செய்யப்பட்டு வருகிறது நம் சமுதாயத்தில்.
 
கணவனை இழந்த பெண் குறிப்பிட்ட நாட்கள் இத்தா இருக்கவேண்டும் என்றால் இருந்துவிடவேண்டும்....ஆனால் அந்த இத்தா என்பது சிறைவாசமா?? நிச்சயமாக இல்லை! இத்தா காலத்தில் மறுமணம் செய்யமட்டுமே தடை உள்ளதே அல்லாமல், அந்நாட்களில் வீட்டின் மூலையில் அடைந்து கிடக்கவேண்டும் என்றோ, கவலையே கதியாக அழுதுகொண்டே இருக்க வேண்டும் என்றோ சொல்லும் மார்க்கமல்ல இனிய இஸ்லாமிய மார்க்கம்.
 
இத்தா வேளையில் பெண்களை எதிராக நடந்துவரும் சில செயல்களை உடைத்தெறிய வேண்டியுள்ளது....
 
பெண்கள் வெளியே தலை காட்ட கூடாது என்கின்றனர்! இத்தா என்பது இதுவா?? கணவனை இழந்த பெண்ணை இப்படியும் கொடுமை படுத்த வேண்டுமா?? இஸ்லாம் பேண சொல்லும் மிக கண்ணியமான உடையணிந்து வெளியே செல்ல எந்த தடையும் இல்லை எந்த பெண்ணுக்கும், இத்தாவில் உள்ள பெண் உள்பட! மஹரமான ஆணுடன் அத்தியாவிச தேவைகளுக்கு வெளியே செல்லவும் எந்த தடையும் இஸ்லாம் விதிக்கவில்லை. இது இத்தாவில் இருக்கும் பெண்களுக்கு மட்டுமல்ல, அனைத்து பெண்களுக்குமான இஸ்லாமிய சட்டமாகும். இத்தாவில் உள்ள பெண்கள் மட்டுமல்ல, அனைத்து பெண்களும் நறுமணம் பூசி நடமாடுவதை இஸ்லாம் தடுத்துள்ளது. மாற்று மதத்தில் விதவைகளை அலங்கோலப்படுத்தி தாழ்மைபடுத்துவதுபோல் இஸ்லாமிய பெண்களையும் செய்வது கண்டிக்கத்தக்கது!
 
எனவே, கணவனை இழந்த பெண்களை அவர்கள் இத்தா இருக்கும் போது, வரம்பு மீறி அடக்குமுறைக்கு ஆளாக்காதீர்கள்!!!!! இஸ்லாம் பெண்களுக்கு அளிக்கும் உரிமைகளுக்கு நம்மில் எவரும் தடை போட்டிட அதிகாரம் படைத்தவர்கள் அல்லர்!
 
இஸ்லாம் பெண்களை கவுரவிக்கிறது! பெண்களுக்கு இதுபோல் உரிமைகளை வழங்கும் வேறு மார்க்கமில்லை என்றல்லாம் வாயளவில் சொல்லி புளங்காகிதம் அடைவதைவிட்டுவிட்டு, நிஜமாக இஸ்லாம் அளிக்கும் அந்த உரிமைகளை அளித்து பாதுகாப்போம்.....பெண்கள் நலன் காப்போம்....
 
குறிப்பு: "இத்தா" பற்றிய என் சிற்றறிவுக்கு பட்டதை, தெரிந்ததை தொகுத்துள்ளேன். அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.
 
சகோதரர்கள் தவறுகளை ஆதாரத்துடன் சுட்டிகாட்டினால், திருத்திக்கொள்கிறேன், இன் ஷா அல்லாஹ்.....
 

வஸ்ஸலாம்

என்றும் அன்பு சகோதரன்,

சுபுகான் சுல்தான்.

Comments

Popular posts from this blog

திருமண துஆ

# திருமண _ துஆ   //அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன ஆதம வஹவ்வா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன நூஹிவ் வஃபாரிஸா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன இப்ராஹீம வஸாரத்த அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன மூஸா வஸஃப்ஃபூரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அய்யூப் வரஹீமா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன யூசுஃப் வசுலைஹா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன முஹம்மதின் வஹதீஜதுல் குரா , வஆயிஷத்தத் துஹ்ரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அலிய்யின் வஃபாதிமத அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம்   அல்லாஹும்மா பாரிக் லஹுமா பிர்ரிபாயி வல் பனீன் //   * பொருள்:     ***அல்லாஹ்வே   ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா ( அலை) ஆகியோருக்கு மத்தியில் இணைப்பை...

ஹஜ்ஜத்துல் விதா உரை - Prophet Muhammad's (PBUH) Farewell Sermon

ஹஜ்ஜத்துல் விதா உரை மக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா! என்று எனக்குத் தெரியாது. மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதத்தையும், இந்த (பிறை 9ஆம்) நாளையும், இந்த (மக்கா) நகரையும் புனிதமாகக் கருதுவதுபோல் உங்களில் ஒருவர் மற்றவன் உயிரையும் பொருளையும் மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள். ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவருக்கே வழங்கப்படும் அவரது உறவினருக்கு அல்ல. தந்தை தன் பிள்ளைக்கு அநியாயம் செய்ய வேண்டாம் பிள்ளையும் தன் தந்தைக்கு அநியாயம் செய்ய வேண்டாம். தந்தையின் குற்றத்திற்காகப் பிள்ளையை அல்லது பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையை தண்டிக்கப்பட மாட்டாது. அறிந்துகொள்ளுங்கள்! அறியாமைக் காலத்தின் அனைத்து செயல்களையும் நான் எனது கால்களுக்குக் கீழ் புதைத்து அழித்து விட்டேன். அறியாமைக் காலக் கொலைகளுக்குப் பழி வாங்குவதை விட்டுவிட வேண்டும். முதலாவதாக, எங்கள் குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட ரபீஆ இப்னு ஹாரிஸின் மகனுக்காகப் பழிவாங்குவதை நான் விட்டு விடுகிறேன். அறியாமைக் கால வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டது. முதலாவதாக நான் என...