Skip to main content

"ததஜ வுக்கும் வினவுக்கும் இடையேயான விவாத" விஷயத்தில் என்னுடைய தனிப்பட்ட கருத்து!


 
 
"ததஜ வுக்கும் வினவுக்கும் இடையேயான விவாத" விஷயத்தில் என்னுடைய தனிப்பட்ட கருத்து!
 
 
ததஜ (தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத்) வினர் சிலர் "வினவு" அலுவலகத்தில் சென்று அவர்களுடன் நடத்திய உரையாடலின் பதிவுகளை வெளியிட்டதற்கு "வினவும் தன்னுடைய "தகுதியை வெளிப்படுத்தி பதிவிட்டார்கள், தற்போது, "செங்கொடி"யும் அதை ஆயுதமென கையில் எடுத்துள்ளது!
 
 
ததஜ என்னும் இஸ்லாமிய அமைப்பின் மீதுள்ள, சொல்லப்போனால் இஸ்லாத்தின் மீதுள்ள வெறுப்பை உமிழ்ந்ததாகவே கருதுகிறேன். இத்தகைய கடவுள் மறுப்பாளர்கள் (நாத்திகர்கள்), தங்கள் அறிவுகெட்ட வெறுப்பு அரசியலை நிலைநாட்டிட, தங்களின் வாழ்வுரிமையை  அளித்திடாத ஹிந்துமத உயர்சாதியினரை பழிவாங்க கடவுள் மறுப்பு கொள்கை என்னும் மறைவில் இருந்துகொண்டு ஹிந்துக்களை திட்டி தீர்த்தனர். அதற்க்கு ஆதரவு வேண்டும் என்பதற்காகவே முஸ்லிம்களுக்கு நண்பர்களாக நடித்தும், முஸ்லிம்களின் மீது அக்கறையுள்ளவர்களாக காட்டிக்கொண்டும் வருகின்றனர்!. என்றாலும்கூட சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தம் சுயரூபத்தை வெளிக்காட்ட தவறுவதில்லை!
 
 
இந்தியாவில், முஸ்லிம்களும், ஹிந்துக்களும் என்றுமே ஓன்று சேர்ந்துவிடக்கூடாது என்று எண்ணுபவர்கள் சங்க்பரிவாரக்கும்பல்கள் மட்டுமல்ல, இந்த  நாத்திகர்களும் தான்! ஓன்று சேர்ந்துவிட்டால் தன அரசியலை நடத்தமுடியாது என்று  நம்புகின்றனர். அதனால் எதிரிக்கு எதிரி நண்பன் என்பதற்கு இணங்க ஒரு முகமூடியை அணிந்துகொண்டு, ஒரு சாராருக்கு நண்பர்களாக தம்மை காட்டிக்கொண்டு மறு சாராரை கொட்டிக்கொண்டே இருப்பர்!
 
 
ஒரு விதத்தில், முஸ்லிம்களை அழித்தொடுக்க கங்கணம் கட்டிக்கொண்டு நடக்கும் ஹிந்துத்துவ வெறியர்களான சங்பரிவாரங்களை விடவும், முஸ்லிம்களுக்கும், ஹிந்துக்களும் ஓரேபோல் ஆபத்தானவர்கள் இந்த நாத்திகர்கள் என்றால் அது மிகையில்லை! முஸ்லிம்களையும், ஹிந்துக்களையும் போல ஹிந்துத்துவாவினரும் ஏதோ ஒரு கடவுளை நம்புகின்றனர்! அவர்களின் மனதில் அந்த கடவுளுக்காவது சிறிது அஞ்சுவர்! ஆனால் இந்த கேடுகெட்ட நாத்திகர்களுக்கு எதன் மீதும் அச்சமும் இல்லை! நம்பிக்கையும் இல்லை! இவர்களிடம் எந்த பகுத்தறிவும் இல்லை! இருந்திருந்தால்.....டார்வினை வழிபடுவார்களா??? டான்வினின் பொய்யான தத்துவங்களை/சித்தாந்தங்களை  வேதமாக கொள்வார்களா???  சொல்பவனை எல்லாம் "தூதர்" (போல்)என்று ஏற்றுக்கொள்வார்களா??? இவர்கள் தான் பகுத்தறிவை பற்றி பேசுகிறார்கள்!!!!!
 
 
எல்லா மார்க்கத்தை பற்றியும் கேவலமாக பேச இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? ஒரு கொள்கையை விமர்சிக்கவேண்டுமேன்றால் அந்த கொள்கையை பற்றி முழுவதும் படித்தது தெரிந்து கொள்ளவேண்டும் முதலில், அப்படி தெரிந்துகொள்ள, அந்த கொள்கையின் ஏடுகள் (வேதங்கள்) என்ன சொல்கிறது என்று பார்க்கவேண்டும். அதை விட்டுவிட்டு, அவன் அப்படி செய்தான், பாகிஸ்தான் அப்படி செய்தது, சவுதி அப்படி செய்கிறது, நைஜீரியர்கள் அப்படி செய்கிறார்கள், எனவே அந்த கொள்கை தவறானது என்று விமர்சிப்பது தான் பகுத்தறிவா???? சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள்!
 
 
ததஜா வை விமர்சிக்க கண்மூடி கொள்கையான டார்வின் சித்தாந்த மதத்தினருக்கு என்ன அருகதையுள்ளது??? எங்கள் மார்க்க கொள்கையை கூட பரிசோதனை செய்து, ஆதாரமில்லை என்றால் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று உறுதியாய் இருக்கும் ஒரு கூட்டத்திடம் எந்த ஆதாரமும் இல்லாத மூட நம்பிக்கையை பரிணாம சித்தாந்தத்தை தூக்கிபிடித்து நடக்கும் மூடர்கள் "பகுத்தறிவு" பற்றி பேசலாமா???
 
 
இப்படிப்பட்டவர்களுடன் விவாதம் செய்ய அழைத்தது தான் ததஜ செய்த மிகப்பெரிய தவறு! அழகிய விவாதம் செய்யவேண்டும், தகுதியுடையவர்களிடம், சிந்திப்பார்கள் என்று நாம் எதிர்பார்ப்பவர்களிடம்.
 
மாற்றுமதத்தவர்கள், கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறார்கள், ஆனால், ஏதோ ஒரு வகையில் தவறாக விளங்கியுள்ளார்கள், அவர்களிடம் இஸ்லாத்தை எத்திவைப்போம்...நம் இஸ்லாமிய சகோதரர்களில் பலர் இஸ்லாத்தில் இல்லாததை அறியாமையால் செய்கிறார்கள். எனக்கு தெரிந்து எவரும், இணைவைக்கவேண்டும் என்று எதையும் செய்யவில்லை! "இஸ்லாம் தான்" என்று அவர்கள் தவறாக அறிந்துவைத்துள்ளதை நன்மை நாடியே செய்கின்றனர்! அவர்களுக்கும் தூய இஸ்லாத்தை எத்திவைக்கலாம்....ஆனால், மனதில் பூட்டுபோடபட்டுள்ளவர்களிடம் எதை எடுத்து சொல்லி வெற்றி பெறுவீர்கள்???? வெற்றி என்பது மறுமையில் அல்லாஹ்விடம் பெறவேண்டியது, கேடுகெட்டவர்களிடம் விவாதம் செய்து வாக்குவாதத்தில் வெற்றி பெறுவதில் எந்த நன்மையையும் இல்லை, நாம் வாதத்திறமையால் அடையும் வெற்றியால் எவருக்கும் பயனில்லை! ஒருவேளை விவாதம் செய்தாலும், நம்மை எதிர்த்து அவர்களால் வாதிட முடியவில்லை என்பதால் நாம் வெற்றி பெற்றுவிட முடியுமா??? இஸ்லாத்தையே திரும்பி பார்க்கமாட்டேன் என்று சொல்பவர்களிடம் வாதம் செய்யவரவில்லை எனில் சேலை அனுப்புவோம், வளையல் வாங்கி அனுப்புவோம் என்று சொல்வது தான் இஸ்லாமிய முறையா??? இப்படி விவாதத்துக்கு அழைக்கவா இஸ்லாம் காட்டித்தந்துள்ளது! அனைவரையும் சிந்திக்க தூண்டும் கூட்டம் சுயமாக சிந்திப்பது நன்று! காலம் கடந்துவிடவில்லை!
 
 
வினவு போன்ற மூடர்களிடம் "பகிரங்க விவாதம்" செய்து அவர்களை "பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட செய்து" வெற்றிபெறவேண்டும் என்று எண்ணுவதை விட்டுவிடலாமே......????
 
 
நன்மை நாடும் சகோதரன்,
 
சுபுஹான் சுல்தான்...

Comments

Popular posts from this blog

திருமண துஆ

# திருமண _ துஆ   //அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன ஆதம வஹவ்வா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன நூஹிவ் வஃபாரிஸா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன இப்ராஹீம வஸாரத்த அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன மூஸா வஸஃப்ஃபூரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அய்யூப் வரஹீமா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன யூசுஃப் வசுலைஹா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன முஹம்மதின் வஹதீஜதுல் குரா , வஆயிஷத்தத் துஹ்ரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அலிய்யின் வஃபாதிமத அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம்   அல்லாஹும்மா பாரிக் லஹுமா பிர்ரிபாயி வல் பனீன் //   * பொருள்:     ***அல்லாஹ்வே   ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா ( அலை) ஆகியோருக்கு மத்தியில் இணைப்பை...

ஹஜ்ஜத்துல் விதா உரை - Prophet Muhammad's (PBUH) Farewell Sermon

ஹஜ்ஜத்துல் விதா உரை மக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா! என்று எனக்குத் தெரியாது. மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதத்தையும், இந்த (பிறை 9ஆம்) நாளையும், இந்த (மக்கா) நகரையும் புனிதமாகக் கருதுவதுபோல் உங்களில் ஒருவர் மற்றவன் உயிரையும் பொருளையும் மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள். ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவருக்கே வழங்கப்படும் அவரது உறவினருக்கு அல்ல. தந்தை தன் பிள்ளைக்கு அநியாயம் செய்ய வேண்டாம் பிள்ளையும் தன் தந்தைக்கு அநியாயம் செய்ய வேண்டாம். தந்தையின் குற்றத்திற்காகப் பிள்ளையை அல்லது பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையை தண்டிக்கப்பட மாட்டாது. அறிந்துகொள்ளுங்கள்! அறியாமைக் காலத்தின் அனைத்து செயல்களையும் நான் எனது கால்களுக்குக் கீழ் புதைத்து அழித்து விட்டேன். அறியாமைக் காலக் கொலைகளுக்குப் பழி வாங்குவதை விட்டுவிட வேண்டும். முதலாவதாக, எங்கள் குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட ரபீஆ இப்னு ஹாரிஸின் மகனுக்காகப் பழிவாங்குவதை நான் விட்டு விடுகிறேன். அறியாமைக் கால வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டது. முதலாவதாக நான் என...

இத்தா

இத்தா " இத்தா" (காத்திருத்தல்) என்பது விவாகரத்து பெற்ற மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு இஸ்லாம் அறிவுறுத்தும் பாதுகாப்பு வளையமாகும்.   விவாகரத்து பெற்ற பெண்கள் மூன்று மாதங்களும் , கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் , கர்ப்பமான பெண்கள் விவாகரத்து பெற்றாலோ , கணவனை இழந்தாலோ   குழந்தையை ஈன்றேடுக்கும்வரை மறுமணம் புரியாமல் “இத்தா” இருக்கவேண்டும் என இஸ்லாம் அறிவுறுத்துகிறது....     // திருகுரான் சூரத்துல் தலாக் 65:4 - மேலும் , உங்கள் பெண்களில் , எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால் , அப்பெண்களுக்கும் , மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும் , ´ இத்தா ´ ( வின் தவணை) மூன்று மாதங்களாகவும் , தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய ( ´ இத்தா ´ வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும் , மேலும் , எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான். //   விவாகரத்து பெற்ற பெண்ணிற்கு மூன்று மாதங்களை அறிவுறுத்துவது அவள் குழந்தை பேறு ப...