#திருமண_துஆ
//அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா
அல்லஃப்த்த பைன ஆதம வஹவ்வா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம்
அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த
பைன நூஹிவ் வஃபாரிஸா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம்
அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த
பைன இப்ராஹீம வஸாரத்த அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம்
அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த
பைன மூஸா வஸஃப்ஃபூரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம்
அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த
பைன அய்யூப் வரஹீமா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம்
அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த
பைன யூசுஃப் வசுலைஹா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம்
அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த
பைன முஹம்மதின் வஹதீஜதுல் குரா, வஆயிஷத்தத்
துஹ்ரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம்
அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த
பைன அலிய்யின் வஃபாதிமத அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம்
அல்லாஹும்மா பாரிக் லஹுமா பிர்ரிபாயி வல்
பனீன் //
*பொருள்:
***அல்லாஹ்வே ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா (அலை) ஆகியோருக்கு மத்தியில் இணைப்பை
ஏற்படுத்தியது போன்று (மணமக்களாகிய) இவ்விருவருக்கும் மத்தியில் இணைப்பை
ஏற்படுத்துவாயாக.
அல்லாஹ்வே நூஹ் (அலை) மற்றும் ஃபாரிஸா (அலை)
ஆகியோருக்கு மத்தியில் இணைப்பை ஏற்படுத்தியது போன்று (மணமக்களாகிய)
இவ்விருவருக்கும் மத்தியில் இணைப்பை ஏற்படுத்துவாயாக.
அல்லாஹ்வே இப்ராஹீம்(அலை) மற்றும் சாரா(அலை)
ஆகியோருக்கு மத்தியில் இணைப்பை ஏற்படுத்தியது போன்று (மணமக்களாகிய)
இவ்விருவருக்கும் மத்தியில் இணைப்பை ஏற்படுத்துவாயாக.
அல்லாஹ்வே மூஸா (அலை) மற்றும் ஸஃபூரா(அலை)
ஆகியோருக்கு மத்தியில் இணைப்பை ஏற்படுத்தியது போன்று (மணமக்களாகிய)
இவ்விருவருக்கும் மத்தியில் இணைப்பை ஏற்படுத்துவாயாக.
அல்லாஹ்வே அய்யூப்(அலை) மற்றும் ரஹிமா(அலை)
ஆகியோருக்கு மத்தியில் இணைப்பை ஏற்படுத்தியது போன்று (மணமக்களாகிய)
இவ்விருவருக்கும் மத்தியில் இணைப்பை ஏற்படுத்துவாயாக.
அல்லாஹ்வே யூசுஃப்(அலை) மற்றும் ஸுலைஹா(அலை)
ஆகியோருக்கு மத்தியில் இணைப்பை ஏற்படுத்தியது போன்று (மணமக்களாகிய)
இவ்விருவருக்கும் மத்தியில் இணைப்பை ஏற்படுத்துவாயாக.
அல்லாஹ்வே முஹம்மது(அலை) மற்றும் மூத்தவரான
ஹதீஜா(ரலி) மேலும் பரிசுத்தவரான ஆயிஷா(ரலி) ஆகியோருக்கு மத்தியில் இணைப்பை
ஏற்படுத்தியது போன்று (மணமக்களாகிய) இவ்விருவருக்கும் மத்தியில் இணைப்பை
ஏற்படுத்துவாயாக. அல்லாஹ்வே அலி(ரலி) மற்றும் ஃபாத்திமா(ரலி) ஆகியோருக்கு
மத்தியில் இணைப்பை ஏற்படுத்தியது போன்று (மணமக்களாகிய) இவ்விருவருக்கும் மத்தியில்
இணைப்பை ஏற்படுத்துவாயாக.
இறைவா! இத்தம்பதியர்களுக்கு ஆண் குழந்தையாகவே
தருவாயாக.***
மேலேயுள்ள இந்த துவா (!?) சஹாபாக்களோ, தாபியீன்களோ, தபா
தாபியீன்களோ, இமாம்களோ யாரும் சொல்லித்தராத ஒன்று, ஆர்வக்கோளாறால் நம் முன்னோர்கள் உருவாக்கி “கட்டாயக்கடமை” (!?) போல் செயல்படுத்தி வருவது! திருமணம்
என்னும் வலியுறுத்தப்பட்ட சுன்னத்தான "இபாதத்தை" நபிவழியில்
அமைக்கவேண்டுமானால் இத்தகைய "பித்அத்" ஆன துவாக்களை தவிர்க்கவே
வேண்டும்.
இலட்சத்துக்கும் அதிகமான நபிமார்களை அல்லாஹ்
அனுப்பியிருந்தும் 25 நபிமார்களின் பெயர்களை மட்டுமே அல்லாஹ் தன
திருமறையில் நமக்கு அறியத்தருகிறான்.... அதுவும் நம் படிப்பினைகளுக்காக, நம்மை
நேர்வழிப்படுத்துவதற்காக. இவர்களுள் பல நபிமார்களின் இல்லறவாழ்க்கையை பற்றியோ
மனைவிமார்களின் விபரங்களை பற்றியோ அறியத்தரவில்லை, குரான் என்பது வரலாற்று
புத்தகம் அன்றே!!! எனவே, நமக்கு அறியாத குடும்பவாழ்க்கையை சொல்லி துவா
கேட்பது எதற்கு???
மேலும், இந்த துவாவில்(!?) இடம்
பெறும் சில வரியே இதனை ஒதுக்கி தள்ளிவிட போதுமானது!!
//“யூசுஃப் (அலை) மற்றும் ஸுலைஹா
(அலை) அவர்களும்
போல் வாழ்க",
“அய்யூப் (அலை) மற்றும் ரஹிமா(அலை) அவர்களும் போல் வாழ்க”, என்றும் புது மண தம்பதிகளை வாழ்த்தும் வரிகள் உள்ளன.//
நபி யூசுப் (அலை) அவர்களுக்கு ஜுலைகா என்ற
பெயருடன் ஒரு மனைவி இருந்ததாகவோ, நபி அய்யூப் (அலை) அவர்களுக்கு ரஹிமா என்ற பெயருடன் ஒரு மனைவி இருந்ததாகவோ குர்ஆன் மற்றும் ஹதீஸ் களில் எந்த ஆதாரமும் இல்லை. இந்த பெயர்கள் நபிமார்களின் மனைவிகள் என்பது இட்டுக்கட்டப்பட்ட அவதூறாகும்! (அஸ்தஹ் பிர் அல்லாஹ்)
மேலும்...
//"நூஹ் (அலை) அவர்களும் அவர்களின் மனைவியும் போல் வாழ்க", என்று
புது மண தம்பதிகளை வாழ்த்தும் ஒரு வரி உள்ளது, //
நபி நூஹ் (அலை) அவர்களின் மனைவி பற்றி
அல்லாஹ் திருமறையில் சொல்வதை கேளுங்கள் ....
அல் குர்ஆன் 66:10
ضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّـلَّذِيْنَ كَفَرُوا امْرَاَتَ نُوْحٍ وَّ امْرَاَتَ لُوْطٍ ؕ كَانَـتَا تَحْتَ عَبْدَيْنِ مِنْ عِبَادِنَا صَالِحَـيْنِ فَخَانَتٰهُمَا فَلَمْ يُغْنِيَا عَنْهُمَا مِنَ اللّٰهِ شَيْــٴًــا وَّقِيْلَ ادْخُلَا النَّارَ مَعَ الدّٰخِلِيْنَ
நிராகரிப்பவர்களுக்கு, நூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான்; இவ்விருவரும் ஸாலிஹான நம் நல்லடியார்களில், இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர்; எனினும் இவ்விருவரும் தம் கணவர்களை மோசம் செய்தனர்; எனவே, அவ்விருவரும் (தம்
மனைவியரான) அவ்விருவரைவிட்டும் அல்லாஹ்விலிருந்து (வேதனையைத்) தடுக்க இயலவில்லை; இன்னும், “நீங்களிருவரும் (நரக)
நெருப்பில் நுழைபவர்களுடனே நுழையுங்கள்” என்று
(இவ்விருவருக்கும்) கூறப்பட்டது.
அடுத்து..."இத்தம்பதியருக்கு
ஆண்குழந்தையாகவே தருவாயாக", என்றும்
கேட்கப்படுகிறது...சுபுஹானல்லாஹ்!!!
அல்லாஹ் நாடியவருக்கு ஆண் குழந்தைகளையும், அவன் நாடியவர்களுக்கு பெண் குழந்தைகளையும் தருவதாக
சொல்வதுடன் பெண்குழந்தைகளை அவன் அருள்கொடையாகவே சொல்லிக்காட்டியுள்ளான். அப்படி
இருக்கையில், ஆண் மக்களையே தருவாயாக
என்று கேட்பது இஸ்லாத்துக்கு பாரமானதாக தெரியவில்லையா???
எனவே இது துவா அல்ல! துவா என்னும் பெயரில்
மறைமுகமாக சாபத்தையும் இடுவது போல் இல்லையா???
இது பின்பற்றத்தக்கதல்ல என்பதற்கு வேறு என்ன
சான்றுகள் வேண்டும்???
மணமக்களுக்கு நபிகள் நயாகம் (ஸல்) அவர்கள்
செய்த துவாக்களை அறிந்து, அவற்றைக்கொண்டே நாமும் துவா செய்வோம் ......
1)
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களின்
(ஆடை) மீது (வாசனைத் திரவியத்தின்) மஞ்சள் நிற அடையாளத்தை நபி(ஸல்) அவர்கள்
கண்டபோது 'விஷயம் என்ன?'
அல்லது 'என்ன(இது)?' என்று கேட்டார்கள்.
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள், ஒரு பேரீச்சங்கொட்டை எடையளவு தங்கத்தை
(மஹ்ராக)க் கொடுத்து ஒரு பெண்ணை நான் மணமுடித்துக் கொண்டேன்' என்று
பதிலளித்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், '#பாரகல்லாஹு_லக்க' (அல்லாஹ்
உங்களுக்கு சுபிட்சத்தை வழங்குவானாக!) என்று பிரார்த்தித்துவிட்டு, 'ஓர்
ஆட்டையாவது (அறுத்து) வலீமா-மணவிருந்து அளியுங்கள்' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் அல் புகாரி 6386 Volume :6 Book :80
2)
"#பாரகல்லாஹு_லகும்_வ_பாரக_அலைகும்", என்று
கூறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) கற்றுத் தந்ததாகவும் ஹதீஸ் உள்ளது.
அஹ்மத் 15181
3)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணத்தில் மணமக்களை
வாழ்த்தும் போது "#பாரக்கல்லாஹு_லக_வ_பாரக்க_அலைக்க_வ_ஜமஅ_பைனகுமா_ஃபீ_கைர்", என்று
கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ
1011, அபூதாவூத் 1819,
அஹ்மத் 8599
பொருள்: "அல்லாஹ் உங்களுக்கு பரக்கத்
செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக".
இத்தகைய அழகிய துவாக்களை நம் உத்தம நபி (ஸல்)
அவர்கள் நமக்கு கற்றுத்தந்தும் அதை பேணாமல், நாம் நம் மனோஇச்சைப்படியானவற்றை
பின்பற்றுவதில் இருந்து பாதுகாத்துக்கொள்வோமாக....
மார்க்கத்தில் எதையும் அதிகப்படுத்துவதோ
குறைப்பதோ தடுக்கப்பட்டுள்ளது! அத்தகைய வழிகேட்டிலிருந்து அல்லாஹ் நம்மை
பாதுகாப்பானாக.....
#பாரகல்லாஹு_லக்க
#பாரகல்லாஹு_லகும்_வ_பாரக_அலைகும்
#பாரக்கல்லாஹு_லக_வ_பாரக்க_அலைக்க_வ_ஜமஅ_பைனகுமா_ஃபீ_கைர்
இது தான் உண்மையான விளக்கம் தெளிவான ஹதீஸ் இதைதான் தஹ்ஹீத் ஜமாத் தெளிவு படுத்துகிறது
ReplyDelete