Skip to main content

வேற்றுமையில் ஒற்றுமையும், பிரதமர் மோடியும்!

 
வேற்றுமையில் ஒற்றுமையும், பிரதமர் மோடியும்!




உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் இந்தியா!!!

தன்னகத்தே பல்வேறு மதம், இனம், ஜாதி, மொழி, கலாசாரம் உள்ளடக்கிய நாடுகளில் சகிப்புத்தன்மைக்கும், மதசார்பின்மைக்கும், "வேற்றுமையில் ஒற்றுமை" என்னும் உயரிய பண்பிற்கும் உலகின் தலைசிறந்த நாடுகளில் முதன்மையானது இந்தியா என்றால் அதுவும் மிகையில்லை!!!!
 
பல்லாண்டுகாலங்க
​ளா
க ஒற்றுமையாய் வாழ்ந்து வந்த அனைத்து இந்திய குடிமக்களையும் தற்போது நடந்து முடிந்த தேர்தல் பிரித்துள்ளது என்றே தோன்றுகிறது!
எவ்வாறு ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டார்களோ, அதே போலவே தேச விரோத சங்க்பரிவார கும்பல் இந்திய மக்களை மததுவேஷத்தை செலுத்தி பிரித்தாண்டு இப்போது தேர்தல் வெற்றியையும் சுவைத்துள்ளனர்!
 
பத்தாண்டுகால காங்கிரஸ் ஆட்சியில், கூட்டணி கட்சிகள் சேர்ந்து போட்ட கொள்ளையையும், மந்தமான செயல்பாடையும் பூதரகரமாக பெரிதாக்கி, அதே வேளையில் காங்கிரஸ்
​ஆட்சியின்
நல்லவற்றை அடியோடு மறைத்து, உலகமே பொருளாதார மந்தநிலையில் தத்தளித்தபோதும் இந்தியா தலைநிமிர்ந்து நின்றது என்னும் மிகமுக்கியமான சாதனை
​யை ​
சிறிதாக்கி, மோடி என்னும் மனிதம் மறந்த குஜராத் முதல்வரின் சாதனைகள் என்று
​,​
இல்லாதவற்றை
​ ​
​எல்லாம் ​
விளம்பரப்படுத்தி விபசார ஊடகங்களின் துணை கொண்டு
​கார்ப்பரேட் முதலாளிகளின் ஒட்டுமொத்த ஆதரவில் ​
மக்கள் மனதை பொய்யாக கவர்ந்துள்ளது பாசிச சக்திகள்!
 
இந்திய வரலாற்றிலேயே நாட்டுக்காக போராடிய, போராடிக்கொண்டிருக்கும் ஒரு ஒட்டுமொத்த சமுதாயம் வெறுக்கும் ஒருவரை பிரமதர் ஆக்கியே தீருவோம் என்று கங்கணம் கட்டி புறப்பட்ட ஒரு சிறு கூட்டம் பெரும்பான்மை பெற்று வென்றுள்ளது! இந்திய ஜனநாயகத்துக்கு வெட்கக்கேடான நாள்!!!
 
பெரும்பான்மையான 68% இந்தியர்கள் விரும்பவில்லை என்றாலும், சிறுபான்மையான 32% ஆதரவை பெற்ற கும்பல் நாட்டை ஆளும் வாய்ப்பை பெற்றுள்ளனர்! இந்திய ஜனநாயக தேர்தல் முறையின் அவலம்!
 
இந்தியா எம் நாடு! இந்த நாட்டிலேயே பிறந்து இந்த நாட்டையே நேசித்தோம்...
குள்ள
​ந​
ரிக்
​ ​
கூட்டமொன்று நாட்டை ஆளப்போகிறது என்பதால், எம் நாட்டின் மீதுள்ள பாசம் இம்மியளவும் குறைந்திடாது!
​எம்
முன்னோர்கள் அரும்பாடுபட்டு
​இரத்தம் சிந்தி ​
பெற்றுத்தந்த
​ சுதந்திர ​
நாடு இது! எம் மூதாதையர்கள் செம்மையாக
​பல நூற்றாண்டுகள் ​
ஆண்டு வளம்பெற்ற
​ மத சார்பற்ற ​
நாடு இது! எம்மைவிட இந்த நாட்டில் உரிமை வேறு எவனுக்கும் இருக்கமுடியாது!!! எனவே....எள்ளளவும் இந்த தேர்தல் முடிவுகள் எம்மை அசைக்காது!
 
எம் ஜனநாயகத்தை மதிக்கும் நாம், எங்களுக்கும் சேர்த்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி
​ "அவர்களு​
க்கு
​"​
சொல்லிக்கொள்வது.....
 
இப்போது வரை, மோடி என்னும் "உங்கள்" பெயருக்கு முன்னால் "நரபலி"
​, ​
"நரபோஜி"
​,
"அரக்கன்", "கொலைகாரன்" என்றோ சேர்க்காமல் அழைத்ததில்லை! அழைத்ததில் வருத்தமும் இல்லை! அது எம் மனதின் ஆழத்தில் இருந்து வலியால் வந்த வார்த்தைகள்! பதவி சுகத்துக்காக, எம் சகோதரர்களை மத வெறியால் வெறிபிடித்த காட்டேறிகள் கொலைத்தாண்டவமாடி கொன்று குவித்தபோது, அனுமதியளித்து கண்டு களித்தவர் "நீங்கள்"!!! எந்த நீதிமன்றம் "உங்களை" நல்லவன் என்றாலும்.....அந்த ஆண்டவன் அறிவான் "உங்கள்" நயவஞ்சகத்தை! இன்றுவரை நடந்த படுபாதக செயல்களுக்கு கிஞ்சிற்றும் வருந்தாதவர் "நீங்கள்"...ஒரு நாள் வரும், "நீங்கள்" நம்பும் எதுவும் உமக்கு கை கொடுக்காது! அந்த நாளின் நாம் முறையிட்டு உமக்கெதிராக சாட்சி சொல்வோம்! எம் சகோதரர்களின் பிணத்தின்மீது ஏறி ஆட்சி
​யை ​
பிடித்த "உங்களுக்கு" எதிராக நம்மனைவரையும் படைத்து பிரதிபாலிக்கும் அந்த ஓரிறையிடம் துவா செய்வோம்.....பாதிக்கப்பட்டவர்களின்
​மன்னிப்பை பெற்று, அவர்களின் ​
​துயர்களை
துடைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தாதவரை "உங்களை" அல்லாஹ் மன்னிக்கவே மன்னிக்காதே என்று! ஒரு சமுதாயத்தின் ஒட்டுமொத்த எண்ணமிது!
​ இந்நாட்டு பிரஜைகளின் ​
மனக்குமுறல் இது!
இனி, நாளை முதல் ("நீங்கள்" பதவி ஏற்கும் நாளில் இருந்து) உம்மை எந்த அடைமொழியும் இல்லாமல், "மாண்புமிகு இந்திய பிரதமர் திரு. ந
​ரேந்திர
மோடி அவர்களே..." என்று
​மனது ஏற்காமலேயே ​
அழைப்போம்.....
​"உங்கள்"
மீதுள்ள பயத்தாலோ, மரியாதையாலோ அல்ல...அல்லவே அல்ல!!! நாங்கள் நேசிக்கும் எங்கள் நாட்டின் பிரமராக "நீங்கள்" தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளீர்கள் ...நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்,
​எம்
நாட்டின் முறைப்படி "நீங்கள்" தான் எங்களுக்கும் பிரதமர் என்னும் கட்டாயத்தால்....எம் நாட்டை நாங்கள் நேசிப்பதால், எங்கள் ஜனநாயகத்தை மதிப்பதால்....எம் தொப்புள்கொடி உறவுகளான
​எம்
சொந்தகளின் மீது இன்னும் நம்பிக்கையுள்ளதால்.....
 
மிகப்பெரிய அதிகாரத்தை இந்த நாட்டுமக்கள் தந்துள்ளார்கள்! தேச துரோக
​சங்க்பரிவார ​
கூட்டங்களின் கீழ்த்தரமான எண்ணங்களை நடைமுறைப்படுத்த எண்ணாமல், சீரான நிர்வாகத்தை நேர்மையான முறையில் அனைத்து மக்களுக்கும் அநீதி இழைக்காமல் "நீங்கள்" ஆட்சி செய்யும்வரை மட்டுமே "உங்களுக்கு" எதிராக கிளர்ச்சி எழாமல் இருக்கும் என்பதனை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.....
 
வெற்றி என்பது நிரந்தரமானது அல்ல! "உங்களுக்கு" பெரும்பான்மை தந்த மக்களில் பெரும்பானமையினர் கூட "நீங்கள்" மத
​துவேஷ ​
அடிப்படையில் நிர்வாகம் செய்வீர்கள் என்பதை எண்ணியல்ல வாக்களித்தது, மாறாக, அனைவருக்குமான
​நல்ல ​
ஒரு மாற்று அரசியலை தருவீர்கள், நாட்டை மென்மேலும் முன்னேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையிலேயே....அப்படி ஒரு நிர்வாகம் இல்லாத பட்சத்தில் அவர்களே "உங்களை" தூக்கி எறிய துணிவர் என்பதனையும் மனதில் கொள்ளுங்கள்....
 
காந்தியை கொன்ற கூட்டத்தை விட,
நாட்டின் வளர்ச்சிக்காக அதிக அக்கறையுள்ளவர்கள் நாங்கள்! எங்கள் ஒத்துழைப்பில்லாமல் எவரும் இந்த நாட்டை சிறப்பாக ஆளவே முடியாது! பிரித்தாளும் வன்மத்தை கைவிட்டு செய்த தவறுகளுக்கு மனதார மன்னிப்பு கேட்டு திருந்துங்கள்.....
 
"நீங்கள்" சங்கபரிவாரின் பிரதமர் அல்ல! இந்திய நாட்டின் பிரதமர்...... (இன் ஷா அல்லாஹ்)அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு "மட்டும்".....!!
 
நாடு நலம்பெற வாழ்த்துக்கள்!
 
ஜெய் ஹிந்த்!!!!

Comments

Popular posts from this blog

திருமண துஆ

# திருமண _ துஆ   //அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன ஆதம வஹவ்வா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன நூஹிவ் வஃபாரிஸா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன இப்ராஹீம வஸாரத்த அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன மூஸா வஸஃப்ஃபூரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அய்யூப் வரஹீமா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன யூசுஃப் வசுலைஹா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன முஹம்மதின் வஹதீஜதுல் குரா , வஆயிஷத்தத் துஹ்ரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அலிய்யின் வஃபாதிமத அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம்   அல்லாஹும்மா பாரிக் லஹுமா பிர்ரிபாயி வல் பனீன் //   * பொருள்:     ***அல்லாஹ்வே   ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா ( அலை) ஆகியோருக்கு மத்தியில் இணைப்பை...

ஹஜ்ஜத்துல் விதா உரை - Prophet Muhammad's (PBUH) Farewell Sermon

ஹஜ்ஜத்துல் விதா உரை மக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா! என்று எனக்குத் தெரியாது. மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதத்தையும், இந்த (பிறை 9ஆம்) நாளையும், இந்த (மக்கா) நகரையும் புனிதமாகக் கருதுவதுபோல் உங்களில் ஒருவர் மற்றவன் உயிரையும் பொருளையும் மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள். ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவருக்கே வழங்கப்படும் அவரது உறவினருக்கு அல்ல. தந்தை தன் பிள்ளைக்கு அநியாயம் செய்ய வேண்டாம் பிள்ளையும் தன் தந்தைக்கு அநியாயம் செய்ய வேண்டாம். தந்தையின் குற்றத்திற்காகப் பிள்ளையை அல்லது பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையை தண்டிக்கப்பட மாட்டாது. அறிந்துகொள்ளுங்கள்! அறியாமைக் காலத்தின் அனைத்து செயல்களையும் நான் எனது கால்களுக்குக் கீழ் புதைத்து அழித்து விட்டேன். அறியாமைக் காலக் கொலைகளுக்குப் பழி வாங்குவதை விட்டுவிட வேண்டும். முதலாவதாக, எங்கள் குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட ரபீஆ இப்னு ஹாரிஸின் மகனுக்காகப் பழிவாங்குவதை நான் விட்டு விடுகிறேன். அறியாமைக் கால வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டது. முதலாவதாக நான் என...

இத்தா

இத்தா " இத்தா" (காத்திருத்தல்) என்பது விவாகரத்து பெற்ற மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு இஸ்லாம் அறிவுறுத்தும் பாதுகாப்பு வளையமாகும்.   விவாகரத்து பெற்ற பெண்கள் மூன்று மாதங்களும் , கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் , கர்ப்பமான பெண்கள் விவாகரத்து பெற்றாலோ , கணவனை இழந்தாலோ   குழந்தையை ஈன்றேடுக்கும்வரை மறுமணம் புரியாமல் “இத்தா” இருக்கவேண்டும் என இஸ்லாம் அறிவுறுத்துகிறது....     // திருகுரான் சூரத்துல் தலாக் 65:4 - மேலும் , உங்கள் பெண்களில் , எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால் , அப்பெண்களுக்கும் , மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும் , ´ இத்தா ´ ( வின் தவணை) மூன்று மாதங்களாகவும் , தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய ( ´ இத்தா ´ வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும் , மேலும் , எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான். //   விவாகரத்து பெற்ற பெண்ணிற்கு மூன்று மாதங்களை அறிவுறுத்துவது அவள் குழந்தை பேறு ப...