Skip to main content

தீபாவளி வாழ்த்துக்கள்! ​ஒரு பார்வை...


தீபாவளி வாழ்த்துக்கள்!
ஒரு பார்வை
.....
 
 
 
இந்திய நாடு மதசார்பற்ற ஜனநாயக நாடு.
இங்கே வாழும் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவதும் ஒதுக்கப்படுவதும் உலகறிந்ததே....
 
அதற்க்கு ஒரு காரணம் சிலபல ​முஸ்லிம்களிடம் இல்லாத சகிப்புத்தன்மை, நல்லிணக்கம், நட்புணர்வு போன்றவைகளே...
 
முஸ்லிம்களுக்கு இரு திருவிழாக்கள் மட்டுமே உள்ளன, மார்க்க அடிப்படையில். நோன்புப்பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப்பெருநாள்! இவை தவிர கந்தூரி விழாக்கள், மிலாது விழாக்கள், தர்காஹ்க்களில் நடைபெறும் ஆண்டுவிழாக்கள், நல்லடியார்கள் என்போருக்கான நினைவு பெருநாட்கள் அனைத்துமே மார்க்க அடிப்படையில் வழிகேடுகளே!!! இப்படி நம்புவதும் அதன் அடிப்படையில் நடப்பதும் ஈமான் கொண்ட முஸ்லிம்களின் மீது கடமையாகும்! ஏனென்றால் மார்க்கம் ​பரிபூர்ணமாக்கப்பட்டுவிட்டது!​
​​
திருகுரான் 5:3 .
....இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்......
 
அதுபோலவே, பிற சகோதரர் மதத்தவர்களின் மத அடிப்படையிலான விழாக்களையோ, பண்டிகைகளை​யோ நாமும் கொண்டாடுவதென்பது நிச்சயம் அவற்றை நம்பாமலேயே போலியாக இணக்கத்தை காட்டுவதற்காக மேற்கொள்ளும் நடிப்பே என்றால் அது மிகை இல்லை! அப்படியான போலி நடிப்பால் எந்த பயனும் விளைவதும் இல்லை! மாறாக நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு மார்க்க விரோதமாக செயல்படுவதேயாகும்.
 
சரி, அப்படியானால் நம்மிடையே வாழும் பிற மத சகோதரர்கள் அவர்களுடைய மத பண்டிகைகளை கொண்டாடும்போது நாம் என்ன செய்யவேண்டும்?
 
அவர்களின் மத நம்பிக்கையை அவர்களின் பண்டிகையின் போது அதனை கண்டித்து பேசி அவர்களை நிந்திக்கவேண்டுமா???
அவர்கள் சந்தோஷமாக கொண்டாடும் நாளை பழிக்கவேண்டுமா??
இது தான் இஸ்லாம் நமக்கு காட்டி தந்துள்ளதா???
 
"லக்கும் தீனுக்கும் வலியதீன்" - அவரவர் மார்க்கம் அவரவர்களுக்கு!!!
 
திருகுரான் 109:6​
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."
 
மார்க்கத்தில் எந்த நிர்பந்தவும் இல்லை! ஆனால் மார்க்க அழைப்புப்பணி ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையானதே.
 
இப்படி இருக்கையில், அழைப்பு பணியை செய்யலாமே தவிர பிற மதத்தவர்களை இழிபடுத்த தேவை இல்லை! அவர்கள் அவர்களுடைய நம்பிக்கைப்படி (!?) அவர்களது பண்டிகைகளை கொண்டாடும்போது அதை விமர்சிப்பது கேவலமானது!
 
இஸ்லாத்தில் இருந்துகொண்டு இஸ்லாத்துக்கு விரோதமான பண்டிகைகளை கொண்டாடுபவர்களை கடுமையாக எதிர்ப்போம். ஆனால், இஸ்லாத்தில் நுழைந்திராத பிற மத சகோதரர்களிடம் நம் மார்க்கத்தை எடுத்து சொல்லலாமே அல்லாமல், அவர்களின் நம்பிக்கையையும், கடவுளரையும், மத சடங்குகளையும் மதிக்காமல், அது அவர்களின் சட்டப்பூர்வமான மனித உரிமை என்பதை உணராமல் நடந்துகொள்வது நிச்சயம் இஸ்லாம் நமக்கு காட்டி தந்த வழிமுறை ஆகாது!
 
அவர்களின் மத நம்பிக்கைகளையும், கடவுளரையும் (!?) அங்கீகரிப்பதென்பதும், அவர்களுடைய நம்பிக்கைகளுக்கும் எண்ணங்களுக்கும் உரிமைகளுக்கும் மதிப்பளிப்பதென்பதும் வெவ்வேறானது. ​மதிப்பளிப்பது என்பது அங்கீகரித்தல் அல்ல என்பதை உணர கடமைப்பட்டுள்ளோம் நம்மில் பலரும்!
 
நாம் நோன்பிருக்கும்போது நம்மை பிற மத சகோதரர்களுக்கும் மதித்து நடந்திடவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நாம் தொழும் போது மாற்று மதத்தவர்களின் கோயில்களில் கூட சப்தம் இன்றி இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோம்...நம் இறை இல்லங்களை பிற மதத்தவர்களும் மதிக்கவேண்டும் என்று வேண்டுகிறோம்...நம்மை மதிக்கவேண்டும், உரிமை வழங்கவேண்டும் என்றெல்லாம் போராடுகிறோம்....ஆனால், நாம் அவர்களை வேறுபடுத்தியே பார்க்கிறோம்....சகிப்புத்தன்மை இல்லாமல் இழிவு படுத்துகிறோம்...
 
பிறரின் கொண்டாட்டங்களின்போது "அவர்களுக்கு" வாழ்த்து சொல்வதை முஸ்லிம்கள் யாரும் மார்க்க விஷயமாக செய்வதில்லை. அப்படி வாழ்த்தினால் நமக்கு நன்மை கிடைக்கும் என்றோ, அவர்களின் நம்பிக்கை தான் நமக்கும் உள்ளது என்று சாட்சி கூறுவதோ இல்லை! நம் நண்பன், தொப்புள் கோடி உறவு கொண்டாடும் ஒரு தினத்தில் அவனது நம்பிக்கை சரியோ தவறோ.....அவனது சந்தோஷத்துக்கு வாழ்த்து சொல்வோம்....ஒன்றும் குறைந்துவிடாது. குறிப்பாய், ஏனைய மார்க்கத்தினருக்கு எந்த இடையூறும் இல்லாமல் ஒருவர் அவருடைய பண்டிகையை கொண்டாடினால், அவருக்கு வாழ்த்து சொல்வதால் என்ன விதத்தில் நம் ஈமான் குறைந்துவிடும்???
 
​வாழ்த்து சொல்வது அதை பின்பற்றுவது ஆகாது ...ஆகாது...ஆகாது....
ஒரு வாழ்த்து சொல்வதால் குறைந்துவிடும் அளவுக்கா நம் ஈமானும் தக்வாவும் உள்ளது என்று சுய பரிசோதனை செய்து கொள்வோம்... ​
 
திருகுரான் 109:4-5​
​4. அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
5. மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
 
அவர்களும் நம் சக மனிதர்கள் என்று அங்கீகரிப்போம்....
​அவர்களுக்கு நல்லதை நாடுவோம்....
நாம் மட்டும் சுவர்க்கம் செல்லவேண்டும் என்று எண்ணாமல், நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் அந்த பாக்கியம் கிடைக்கவேண்டும் என்று எண்ணுவோம்...
நாளை மறுமையில் அவர்களும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத்தாக எழுப்பப்படவேண்டும் என்று எண்ணுவோம்...
அதற்காக அவர்களிடம் நட்பு பாராட்டுவோம்....
அவர்களை அரவணைப்போம்....
நம் மார்க்கத்தை எடுத்துவைப்போம் அழகிய முறையில்!
நாம் சகிப்புத்தன்மைக்கும் எடுத்து காட்டாய் வாழ்வோம்...
அல்லாஹ் அவர்களுக்கு ஹிதாயத் நல்கிட பிரார்த்திப்போம்.
 
அதைவிட்டுவிட்டு வாழ்த்து சொல்வதால் அவர்கள் மார்க்கத்தை நாமும் அங்கீகரித்துவிட்டோம், மாற்றுமத கலாசாரத்தை பின்பற்றிவிட்டோம் என்று சுய ஈமானை சுயமாக சிறுமைபடுத்திடவேண்டாம்...
 
நம் மனங்களை அறிபவன் அல்லாஹ் ஒருவனே!!!!
# மற்றவர்களை தாழ்மைபடுத்திவிட்டு, திட்டி தீர்த்துவிட்டு நம் அழகிய ​
மார்க்கத்தை அவர்களுக்கு எத்திவைக்கலாம் என்று கனவிலும் நினைக்காதீர்கள்! அழகிய முறையில் அழைப்புப்பணி என்பதே மார்க்கம் கற்றுத்தரும் பாடம்!
 
குறிப்பு: "விநாயகர் ஊர்வலத்துக்கு வாழ்த்து சொல்லலாமா?", "குடி பார்ட்டிக்கு" வாழ்த்து சொல்லலாமா மத நல்லிணக்கத்துக்காக? என்றெல்லாம் இங்கே வந்து சம்மந்தமில்லா கேள்வி கேட்க எண்ணும் பத்வா பாக்டறிகளுக்கு முதற்க்கண் "மாசலாமா"
 
இறுதிக்குறிப்பு: என் ஹிந்து நண்பர்களுக்கு...... என் இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்! உங்கள் நம்பிக்கையில் அல்ல, உங்கள் சந்தோஷத்தில் நானும் பங்கு கொள்கிறேன்....வீண் விரையம் செய்யாமல், மற்றவர்களுக்கு இடையூறுகள் இல்லாமல் உங்கள் கொண்டாட்டங்களை அமைத்துக்கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்....காசை கரியாக்கி பட்டாசுகளால் உங்கள் கொண்டாட்டங்களை அலங்கரிக்காமல், அந்த காசை எளியோருக்கு கொடுத்து அவர்களையும் உங்கள் கொண்டாட்டத்தில் பங்காளி ஆக்குங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.... இப்படி தான் நாங்கள் முஸ்லிம்கள் எங்கள் பெருநாட்களை கொண்டாடுகிறோம், எங்கள் இறைத்தூதர் காட்டி தந்த அழகிய வழிமுறையில்.....
 
மீண்டும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
 
அன்புடன்....
உங்கள் சகோதரன்,
சுபுகான் சுல்தான்.

Comments

  1. வரும் காலங்களில் விபச்சாரமும் மதுவும் விழாவாக கொண்டாடப்படலாம். அதற்கும் வாழ்த்து சொல்லலாமோ. ஈமான் குறையாதோ...... படியுங்கள் அல் வலா வல் பரா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

திருமண துஆ

# திருமண _ துஆ   //அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன ஆதம வஹவ்வா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன நூஹிவ் வஃபாரிஸா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன இப்ராஹீம வஸாரத்த அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன மூஸா வஸஃப்ஃபூரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அய்யூப் வரஹீமா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன யூசுஃப் வசுலைஹா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன முஹம்மதின் வஹதீஜதுல் குரா , வஆயிஷத்தத் துஹ்ரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அலிய்யின் வஃபாதிமத அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம்   அல்லாஹும்மா பாரிக் லஹுமா பிர்ரிபாயி வல் பனீன் //   * பொருள்:     ***அல்லாஹ்வே   ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா ( அலை) ஆகியோருக்கு மத்தியில் இணைப்பை...

ஹஜ்ஜத்துல் விதா உரை - Prophet Muhammad's (PBUH) Farewell Sermon

ஹஜ்ஜத்துல் விதா உரை மக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா! என்று எனக்குத் தெரியாது. மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதத்தையும், இந்த (பிறை 9ஆம்) நாளையும், இந்த (மக்கா) நகரையும் புனிதமாகக் கருதுவதுபோல் உங்களில் ஒருவர் மற்றவன் உயிரையும் பொருளையும் மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள். ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவருக்கே வழங்கப்படும் அவரது உறவினருக்கு அல்ல. தந்தை தன் பிள்ளைக்கு அநியாயம் செய்ய வேண்டாம் பிள்ளையும் தன் தந்தைக்கு அநியாயம் செய்ய வேண்டாம். தந்தையின் குற்றத்திற்காகப் பிள்ளையை அல்லது பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையை தண்டிக்கப்பட மாட்டாது. அறிந்துகொள்ளுங்கள்! அறியாமைக் காலத்தின் அனைத்து செயல்களையும் நான் எனது கால்களுக்குக் கீழ் புதைத்து அழித்து விட்டேன். அறியாமைக் காலக் கொலைகளுக்குப் பழி வாங்குவதை விட்டுவிட வேண்டும். முதலாவதாக, எங்கள் குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட ரபீஆ இப்னு ஹாரிஸின் மகனுக்காகப் பழிவாங்குவதை நான் விட்டு விடுகிறேன். அறியாமைக் கால வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டது. முதலாவதாக நான் என...

இத்தா

இத்தா " இத்தா" (காத்திருத்தல்) என்பது விவாகரத்து பெற்ற மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு இஸ்லாம் அறிவுறுத்தும் பாதுகாப்பு வளையமாகும்.   விவாகரத்து பெற்ற பெண்கள் மூன்று மாதங்களும் , கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் , கர்ப்பமான பெண்கள் விவாகரத்து பெற்றாலோ , கணவனை இழந்தாலோ   குழந்தையை ஈன்றேடுக்கும்வரை மறுமணம் புரியாமல் “இத்தா” இருக்கவேண்டும் என இஸ்லாம் அறிவுறுத்துகிறது....     // திருகுரான் சூரத்துல் தலாக் 65:4 - மேலும் , உங்கள் பெண்களில் , எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால் , அப்பெண்களுக்கும் , மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும் , ´ இத்தா ´ ( வின் தவணை) மூன்று மாதங்களாகவும் , தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய ( ´ இத்தா ´ வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும் , மேலும் , எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான். //   விவாகரத்து பெற்ற பெண்ணிற்கு மூன்று மாதங்களை அறிவுறுத்துவது அவள் குழந்தை பேறு ப...