முஸ்லிம்களின் சக்தி
2014 மக்களவை தேர்தல் முடிவுகள், பின்னர் நடைபெற்ற பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய பாடத்தை தந்துள்ளது எனலாம்.
ஒருவருக்கொருவர் குழிவெட்டிக்கொண்டிருந்தால் ஒட்டுமொத்த சமுதாயமும் படுகுழியில் விழவேண்டிவரும் என்பது தெள்ளத்தெளிவாக விளக்கப்பட்டுள்ளது மீண்டுமொருமுறை. ஆனாலும் முஸ்லிம் சமுதாயம் பாடம் கற்றுக்கொண்டதாய் தெரியவில்லை. பல அரசியல் கூறுகளாக கிடக்கின்றனர். பெரும்பாலான பிரிவுகளுக்கு கொள்கை காரணமல்ல, ஈகோ மட்டுமே காரணம். கொள்கை ரீதியாக பிரிந்திருந்தால் கூட அதில் ஒரு நியாயம் உள்ளது. கொள்கை மறந்து "போலி" ஒற்றுமை தேவை இல்லை. ஆனால் பிரிந்து இருப்பதற்காகவே கொள்கை வேற்றுமைகளை புனைந்தெடுப்பது நடைபெறுகிறது என்பது வேதனைக்குரியது! "நீ அப்படி செய்தால் நான் உனக்கு மாறு செய்வேன்", என்பது போல் நடந்து கொள்கின்றனர்!
"ஒற்றுமைக்கு பாடுபடுகிறோம்", என்று சொன்னவர்கள் கூட ஒன்றாக இனணைந்து செயல்படமுடியவில்லை என்பது மிகவும் மோசமானது! இந்நிலை தொடர்ந்தால் எதிர் வரும் தமிழக சட்டமன்ற தேர்தலிலும் முஸ்லிம்கள் செல்லா காசாகவே மதிக்கப்படுவர்!
முஸ்லிம் அரசியல் கட்சிகளை எதிர்த்து "அரசியல் இல்லை" என்று சொல்லும் கட்சிகள் "அரசியல்" செய்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும்! அரசியல் செய்பவர்களும் முஸ்லிம்களின் நலனை கருத்தில் கொண்டு ஏனைய முஸ்லிம் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு வைத்தாவது கூட்டணி அமைக்கவேண்டும் குறைந்தபட்சம்! இல்லை என்றால் பிரித்தாளும் சூழ்ச்சியை அழகாக கையாண்டு பாசிச சக்திகள் தமிழகத்தில் காலூன்ற முஸ்லிம்களே காரணமாகிவிடுவோம்! என்றும் திராவிட கட்சிகளின் அடிமைகளாகவே இருக்கபோகிறோமா?? சிந்திக்க கடமை பட்டுள்ளோம்...
முஸ்லிம்களின் சக்தி இந்திய நாட்டில் இன்னும் உண்டு என்பதற்கு அழகிய உதாரணம் "ஹைதராபாத் சிங்கம்" அசாதுதீன் ஒவைசி!
நம் சக்தியை நாம் உணருவோம்....
என்றும் அன்பு சகோதரன்...
சுபுகான் சுல்தான்
Comments
Post a Comment