Skip to main content

Posts

Showing posts from May, 2014

"ததஜ வுக்கும் வினவுக்கும் இடையேயான விவாத" விஷயத்தில் என்னுடைய தனிப்பட்ட கருத்து!

    "ததஜ வுக்கும் வினவுக்கும் இடையேயான விவாத" விஷயத்தில் என்னுடைய தனிப்பட்ட கருத்து!     ததஜ (தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத்) வினர் சிலர் "வினவு" அலுவலகத்தில் சென்று அவர்களுடன் நடத்திய உரையாடலின் பதிவுகளை வெளியிட்டதற்கு "வினவும் தன்னுடைய "தகுதியை வெளிப்படுத்தி பதிவிட்டார்கள், தற்போது, "செங்கொடி"யும் அதை ஆயுதமென கையில் எடுத்துள்ளது!     ததஜ என்னும் இஸ்லாமிய அமைப்பின் மீதுள்ள, சொல்லப்போனால் இஸ்லாத்தின் மீதுள்ள வெறுப்பை உமிழ்ந்ததாகவே கருதுகிறேன். இத்தகைய கடவுள் மறுப்பாளர்கள் (நாத்திகர்கள்), தங்கள் அறிவுகெட்ட வெறுப்பு அரசியலை நிலைநாட்டிட, தங்களின் வாழ்வுரிமையை  அளித்திடாத ஹிந்துமத உயர்சாதியினரை பழிவாங்க கடவுள் மறுப்பு கொள்கை என்னும் மறைவில் இருந்துகொண்டு ஹிந்துக்களை திட்டி தீர்த்தனர். அதற்க்கு ஆதரவு வேண்டும் என்பதற்காகவே முஸ்லிம்களுக்கு நண்பர்களாக நடித்தும், முஸ்லிம்களின் மீது அக்கறையுள் ளவர்களாக காட்டிக்கொண்டும் வரு கின்றனர்!. என்றாலும்கூட சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லா ம் தம் ...

2014 LOKSABHA ELECTION RESULTS AND VOTE SHARE OF MAJOR PARTIES

2014 LOKSABHA ELECTION RESULTS AND VOTE SHARE OF MAJOR PARTIES  

வேற்றுமையில் ஒற்றுமையும், பிரதமர் மோடியும்!

  வேற்றுமையில் ஒற்றுமையும், பிரதமர் மோடியும்! உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் இந்தியா!!! தன்னகத்தே பல்வேறு மதம், இனம், ஜாதி, மொழி, கலாசாரம் உள்ளடக்கிய நாடுகளில் சகிப்புத்தன்மைக்கும், மதசார்பின்மைக்கும், "வேற்றுமையில் ஒற்றுமை" என்னும் உயரிய பண்பிற்கும் உலகி ன் தலைசிறந்த நாடுகளில் முதன்மையானது இந்தியா என்றால் அதுவும் மிகையில்லை!!!!   பல்லாண்டுகாலங்க ​ளா க ஒற்றுமையாய் வாழ்ந்து வந்த அனைத்து இந்திய குடிமக்களையும் தற்போது நடந்து முடிந்த தேர்தல் பிரித்துள்ளது என்றே தோன்றுகிறது! எவ்வாறு ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டார்களோ, அதே போலவே தேச விரோத சங்க்பரிவார கும்பல் இந்திய மக்களை மததுவேஷத்தை செலுத்தி பிரித்தாண்டு இப்போது தேர்தல் வெற்றியையும் சுவைத்துள்ளனர்!   பத்தாண்டுகால காங்கிரஸ் ஆட்சியில், கூட்டணி கட்சிகள் சேர்ந்து போட்ட கொள்ளையையும், மந்தமான செயல்பாடையும் பூதரகரமாக பெரிதாக்கி, அதே வேளையில் காங்கிரஸ் ​ஆட்சியின் நல்லவற்றை அடியோடு மறைத்து, உலகமே பொருளாதார மந்தநிலையில் தத்தளித்தபோதும் இந்தியா தலைநிமிர்ந்து நின்றது என்னும் மிகமுக்க...

மரியாதை என்பது...

மரியாதை என்பது கேட்பவர்களுக்கு கொடுக்கப்படுவதல்ல - மாறாக அருகதைபட்டவருக்கு கொடுக்கப்படுவது.... # மரியாதை கொடுங்கள்....தானே கிடைக்கும் உங்களுக்கும், உங்கள் அருகதைக்கு!

"நான்" என்னும் நிஜம்!

"நான்" என்னும் நிஜம்! நான் விழுகிறேன்... நான் எழுகிறேன்.... நான் தவறு செய்கிறேன்... நான் ஆணவம் கொள்கிறேன்.... நான் பிறரை வருத்துகிறேன்...... நான் வருந்துகிறேன் ...... நான் படிக்கிறேன், என் தவறுகளில் இருந்து .... நான் வாழ்கிறேன்.... நான் மனிதன்! மனிதரில் சிறந்தவன் அல்ல! என்றாலும்... நான் நல்லவனாக முயற்சிக்கிறேன்... நான் நானாகவே இருக்கிறேன்....என்னைப் படைத்தவனுக்கு என்றென்றும் நன் றியுள்ளவனாய்....அல்ஹம்துலில்லா ஹ்! # "நான்" என்று சொல்லும்போது உதடுகள் ஒட்டாது என்றாலும்.... //"நான்" எப்போதும் "நான்" தான்//....என்பதுவே "நிஜம்"!

"உறவுகள்" இயற்கையாக மரிப்பதில்லை....

"உறவுகள்" இயற்கையாக மரிப்பதில்லை.... கொலை செய்யப்படுகின்றன - ஈகோ, அறியாமை (IGNORANCE), தவறான மனப்பாங்கு (ATTITUDE) ஆகியவைகளால்.... # "கொலைகாரர்களுக்கு" மரண தண்டனை விதிப்போம். :)

நம் பொறுப்பு

நாம் கருத்துபரிமாருவது நம் மனதின் வெளிப்பாடாக பல வேளைகளில் அமைந்துவிடும்! ஒரு தனிமனிதனின் தவறையோ, குற்றத்தையோ பகிரங்க படுத்தி விவாதம் செய்வதற்க்கானதல்ல ஊடகம்! பொதுவாழ்வில் உள்ளவர்களின் கொள்கைகளை, கொள்கை சறுக்கல்களை, சந்தர்ப்பவாதங்களை, அயோக்கியத்தனங்களை தட்டி கேட்கலாம், அதை விமர்சிக்கலாம்....இதனால் சம் மந்தப்பட்டவர்கள் தங்கள் தவறு களை சரி செய்து கொள்ளலாம்.....மாற் றம் ஏற்படலாம்....சமுதாயத்தில். ..ஏன் உலக அளவில் நாம் கண்டுவருவது இத்தைகைய நடை முறைகள்!!!அதுவே ஊடகத்தின் சிறப்புகளில் ஓன்று! நாம் ஒரு இயக்கத்தையோ, கட்சியையோ, அதன் கொள்கைகளையோ அல்லது முடிவுகளையோ வைத்து விமர்சிக்கும்போது அதனை வெறுப்பாகவும், தனிமனித தாக்குதல் போலவும் வியாக்கியானம் செய்வது, அவர்களின் பக்குவத்தையும், மனப்பாங்கையுமே வெளிச்சம் போட்டு காட்டுகிறது! நாம் சொல்வதில் கோளாறு உள்ளது என்று நினைப்பவர்கள் முதலில் தங்கள் புரிதலில் உள்ள கோளாறை சரி செய்வது நன்று..... # நாம் எதை சொல்கிறோம், செய்கிறோம் என்பதற்கு மட்டுமே நாம் பொறுப்பு...உங்கள் புரிதல்களுக்கு அல்ல!!!

வெற்றியின் இரகசியம்

வெற்றியின் இரகசியம் - "சரியான முடிவுகள்" சரியான முடிவுகளின் இரகசியம் - "தேர்ந்த அனுபவம்"   தேர்ந்த அனுபவங்களின் இரகசியம் - "தவறான முடிவுகள்" எனவே, வெற்றி என்பது நம் முயற்சிகளின் சுழற்சியால் விளைவது.... சரியா தவறா என்பது இரண்டாம் பட்சமே, முயற்சிப்பதில் நமக்கிருக்கும் தைரியமும் தன்னம்பிக்கையுமே வெற்றியை தீர்மானிக்கும்!!! இறையின் மீது பாரத்தைப்போட்டு தன்னம்பி க்கையுடன் முயற்சி செய்வோம்.....தோல்விகளிலிருந்து பாடம் பயில்வோம்..... # வெற்றிகள் தானே வரும்.....அந்த ஓரிறை நாடினால்......

இறைநேசர்கள் யார்?

இறைநேசர்கள் யார் ?  அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்கத்துஹு ...   இறைவன் எத்தகையோரை நேசிப்பதாக கீழ்க்காணும்  அழகிய வசனங்களை அல்லாஹ் தன திருமறை வழியாக நமக்கு சொல்வது அத்தகையோரை நாம் கண்டறிந்து அவர்களை புனிதராக்கி, அவர்கள் இறந்தபின்னர் அவர்களுக்கு கப்ர் எழுப்பி விழா எடுத்து கொண்டாடுவதற்காக அன்று! மாறாக, எத்தகையோரை அவன் நேசிப்பான் என்று சொல்கிறானோ, அத்தகையோராக நாம் மாறவேண்டும் என்பதற்கான படிப்பினையாகவே அல்லாஹ் நமக்கு சொல்லி தருகிறான்!!!!   திருகுரான்  2:222. மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள் ; நீர் கூறும்: “ அது(ஓர் உபாதையான) தீட்டு ஆகும் ; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள் ; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள் ; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள் ; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான் ; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான். ”    3:31. ( நபியே!) நீர் கூறும்: “ நீங்கள் அல்லாஹ்வை நே...