நல்லடியார்களிடம் சிபாரிசு கேட்பதும், மருத்துவரிடம் நோய்க்கு சிகிச்சை பெறுவதும், நீதிக்காக வழக்கறிஞரை நாடுவதும் ஒன்றா?
எல்லாம் வல்ல இறையின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக....
முதலில், அல்லாஹ்வின் நேசத்தை
ஒருவர் பெறுகிறார் என்றால் அதை அல்லாஹ் தான் நமக்கு சொல்லித்தரவேண்டும், நாமாக முடிவு செய்திட
கூடாது . அல்லாஹ்வுக்கு மட்டுமே மறைவான ஞானம் உண்டு. அல்லாஹ் அறிவித்து தராமல்
ஒருவரை நாம் "இறைவனின் நேசத்தை பெற்றவர்" என்று உறுதிபடுத்துவது
அல்லாஹ்வின் ஆளுமையில் கைவைப்பதாகும்.
எனவே, நமக்கு "நல்லவர்" என்று
வெளிப்படையாய் தெரிந்தால், அவரது நல்ல செயல்களுக்கும் எண்ணங்களுக்கும்
ஆன நற்கூலியை வழங்க அல்லாஹ்விடம் பிரார்த்திக்கவேண்டுமே அன்றி அவரை
வணக்கத்துக்குரியவராக ஆக்கி விடக்கூடாது. ஒரு நல்லவர் அனைத்து புகழையும்
பெருமையையும் இவ்வுலகிலேயே பெற்றுவிட்டால் அவருக்கான நற்க்கூலியை அல்லாஹ்
மறுமையில் குறைத்துவிட வாய்ப்புண்டு என்பதையும் நினைவில் கொள்வோம். எனவே வரம்பு
மீற வேண்டாம்.
இனி....
"நல்லடியார்களிடம் அல்லாஹ்விடத்தில்
சிபாரிசு செய்ய தானே கேட்க்கிறோம், அவர்களை வணங்கவில்லையே?", என்றும் சொல்கின்றனர் சிலர். அதற்க்கு, அமீரில் மூமினீன் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் நாட்டில் பஞ்சம் ஏற்ப்பட்டபோது நபி (ஸல்)
அவர்களின் சிறிய தந்தையான முதியவர் அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்களிடம் சென்று மழைக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டினார்
என்னும் வரலாற்று உண்மையை ஆதாரமாக
எடுத்து வைக்கின்றனர். இந்த உண்மையை ஏற்றுகொண்டவர்கள் அதை "சீராக
சிந்தித்தால்" உண்மையை உணருவார்கள். உமர் (ரலி) அவர்கள் "மரணித்த"
நல்லடியாரான உத்தம நபி (ஸல்) அவர்களின் கப்ரில் சென்று சிபாரிசு செய்ய
வேண்டவில்லை. நபி (ஸல்) அவர்கள் தான் அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமான இறைநேசர்
என்பதை அறியாதவரா உமர் (ரலி) அவர்கள்? அவர்கள் நபி (ஸல்) அவர்களின் கப்ரில் சென்று
சிபாரிசு செய்ய வேண்டாமல் "உயிரோடிருக்கும்" முதியவரான அப்பாஸ்(ரலி)
அவர்களிடம் தானே துவா செய்ய சொல்கிறார்கள். இதில் அழகிய பாடம் நமக்கு இல்லையா?
அடுத்து.....
சில சகோதரர்கள், "நோயை குணமாககுபவன் அல்லாஹ் தானே, அப்படியானால் நாம் மருத்துவரிடம் போய் மருந்து வாங்குவது ஷிர்க் ஆகிவிடுமா?", என்று அறிவுப்பூர்வமாக (?!) கேட்க்கின்றனர். அவர்களிடம் மறு
கேள்வி....இதயக்கோளாறு உள்ளவன் எங்காவது மரணித்துப்போன "இதைய அறுவை சிகிச்சை
நிபுணரின்" மருத்துவ உதவியை நாடுவானா? அல்லது உயிரோடிருக்கும் மருத்துவரை நாடுவானா? மனிதன்
உலகில் உயிரோடிருக்கும்போது மட்டுமே நமக்கு ஏதாவது உதவிகள் செய்ய முடியும். இதனை
ஆராய்ந்தாலே அனைத்துக்கும் தெளிவு கிடைக்குமே!!!!
மற்றும் சிலர்....
“நம் நாட்டு நீதி மன்றங்களில் நீதி கிடைக்க நாம்
வக்கீல்களை நாடுவதில்லையா? அது போல
தானே நம் குறைகளை நல்லடியார்களிடம் முறையிட்டு அல்லாஹ்விடம் சிபாரிசு செய்ய கோருவதும்?”, என்றும் கேட்பர்.
நம் நாட்டு நீதிமன்றங்களில் நீதிபதிகள் அற்ப மனிதர்களே, இங்கே நீதி என்பது சாட்சிகள், ஆதாரங்கள், விசாரணைகள் அடிப்படையில் "மனிதன் இயற்றிய" சட்ட நூல்களின் அடிப்படையில்
வழங்கப்படுகின்றது. இங்கே உஷாராக இல்லாமல் இருந்தாலோ, சரியான வாதப்பிரதிவாதங்களை எடுத்துவைக்காமல் இருந்தாலோ
நீதி மறுக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் அல்லாஹ்வின் மன்றத்தில் இது எப்படி பொருந்தும்? அல்லாஹ் அனைத்தையும் அறிபவன். சாட்சிகள், ஆதாரங்கள் அடிப்படையில் எந்த வாதங்களும், சிபாரிசுகளும் அவனிடம் தேவை இல்லை. மனிதர்களின்
மனதில் உள்ளவை அனைத்தையும் அறிபவன் அவன் ஒருவனே! மிக்க இரக்கமுடையவன், நீதியாளன்! எனவே, அல்லாஹ்வுக்கும் நமக்கும் இடையே எந்த வழக்கறிஞரும்
தேவை இல்லை! அப்படிப்பட்ட ஒரு வாதம் அறியாமை வாதமாகும்!
எனவே, சகோதரர்களே ....கண்ணை மூடி உலகை இருட்டாக்க
முடியாது. முயலவும் வேண்டாம். சத்தியம் தெளிவாக்கப்பட்டுள்ளது. மார்க்கம் பரிபூரணமானது, அதில்
நாம் எதையும் கூட்டவும் கூடாது, குறைக்கவும் கூடாது.
நீங்கள் எனக்காகவும், நான்
உங்களுக்காகவும் வாழும்போது துவா செய்வது ஒரு முஸ்லிமுக்கு வேறொரு முஸ்லிம்
செய்யும் உதவி.
பெற்றோர்கள் மக்களுக்கும், மக்கள் பெற்றோருக்கும் அல்லாஹ்விடம் துவா செய்வது கடமை.
மரணித்த ஒருவருக்காகவும் அவரது பாவங்களை
பொறுத்து அருள்புரிய அவருக்காக "அல்லாஹ்விடம்" நாம் துவா செய்யலாம், ஆனால்
"மரணித்தவரிடம்" அல்ல!
அல்லாஹ்விடம் நெருங்க மனிதர்களின் உதவி தேவை
இல்லை. நம் பிடரி நரம்பைவிட அருகாமையில் உள்ள, அனைத்து ஆற்றலையும் உடைய, மிக்க
கருணையாளனாகிய அல்லாஹ்வை வணங்கி உதவி தேட "இடைத்தரகர்கள்" தேவை
இல்லை....தேவையே இல்லை....
#போலிகளை_கண்டு_ஏமாறாதீர்கள்
வஸ்ஸலாம்
என்றும் அன்பு சகோதரன்,
சுபுஹான் சுல்தான்
Comments
Post a Comment