இஸ்லாம் கூறும்
நல்லடியார்கள்!
அன்பு சொந்தங்களே,
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ
பரக்கத்துஹு
கிறிஸ்தவர்கள் கடவுளர்களாக வழிபடும் ஏசு கிறிஸ்து மற்றும்
அவரது தாயாரான "கன்னி மாதா" மேரி அவர்களையும் பற்றி அவர்களது புனித
நூலான பைபிளைவிடவும் மிக அதிகமாக நமது இறை வேதம் திருகுர்ஆன் சிறப்பித்து
கூறுகிறது.
திருகுர்ஆன் சிறப்புமிக்க நபிமார்களாக நமக்கு எடுத்து காட்டுபவர்களுள் மிக முக்கியமானவர்கள் நபி ஈசா (அலை)
அவர்கள். நபி ஈசா (அலை) அவர்களை குரானின் பல இடங்களில் சிறப்பித்துள்ளான். ஒரு கன்னியின் வயிற்றில் கருவாய் பிறந்த அவர்களது
பிறப்பை ஆதம் (அலை) அவர்களது படைப்புக்கு நிகராக சொல்லிகாட்டுகிறான்
அல்லாஹ். கன்னியான மரியம் (அலை) அவர்களிடத்தில் நன்மாராயம் கூறுகையில் அல்லாஹ் எப்படி
கூறியுள்ளான் பாருங்கள்....
// திருகுர்ஆன், சூரா ஆலே இம்ரான் - 3:42
(நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள்; மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத்
தேர்ந்தெடுத்திருக்கின்றான்;. உம்மைத் தூய்மையாகவும்
ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக)
உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்" (என்றும்).
திருகுர்ஆன், சூரா ஆலே இம்ரான் - 3:45
மலக்குகள்
கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு
சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன்
பெயர் மஸீஹ்;. மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும்
(இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்; //
மேலேயுள்ள
வசனங்கள் இருவரையும் நிச்சயமாக நல்லடியார்கள், இறையின் அளப்பெரிய நேசத்தை
பெற்றவர்கள், சுவர்க்கவாசிகள் என்பதை திண்ணமாக பறைசாற்றுகின்றன!
நபி
ஈசா (அலை) அவர்களின் அதிசயமிக்க பிறப்பும், அவர்களது இறைவனிடத்தில் எழுப்பப்பட்ட
நிகழ்வும் பற்பல அதிசயங்களும் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அருளை நமக்கு
சொல்லிகாட்டுகின்றன! அதுபோலவே, பெண்களில் அனைவரையும் விட மரியம் (அலை) அவர்களை
மேன்மைப்படுத்தியுள்ளதாய் அல்லாஹ் கூறியுள்ளதன் மூலம் அவர்களது சிறப்பையும் நாம் உணரமுடிகிறது.
எனவே
நபி ஈசா (அலை) மற்றும் அவரது அன்னை மரியம் (அலை) அவர்களது மேன்மையை ஈமான் கொள்ளாத
எவரும் முஸ்லிமாக இருக்கவே முடியாது....
இப்படி
அல்லாஹ்வே குரான் வழி நமக்கு அடையாளம் காட்டியுள்ள மேன்மையான இவ்விருவரையும் வழிபடும் கிறிஸ்தவர்களை
நாம் நேர்வழியில் உள்ளதாய் அங்கீகரிப்பதில்லை! ஏனென்றால் அவர்கள் இவ்விருவரையும்
இறை நிகராக்கி அழைத்து பிரார்த்திப்பதால்!!!! அல்லாஹ்வின் இறுதி தூதர்
எம்பெருமானார் (ஸல்) அவர்களே கூட தம் இறுதி நாட்களில் ஈசா (அலை) அவர்களை கிறிஸ்தவர்கள்
இறைநிகராக்கி விட்டதைப்போன்று தம்மையும் தம் உம்மத்தினர் ஆக்கிடகூடாது
என்று
பயந்துள்ளார்கள், அதற்காக துவா செய்துள்ளார்கள் என்பதை
ஹதீஸ்களின் வாயிலாக அறியமுடியும்.
இந்நிலையில், இவ்விருவரையும் விட எவ்வகையிலும் சிறப்பெய்திட முடியாத நமக்கு முன்னால் வாழ்ந்து மடிந்து மண் மறைந்துபோன சில
நல்லவர்களை நாமே "இறைநேசர்கள்", சுவர்க்கவாசிகள்" என்றெல்லாம்
தீர்ப்பு வழங்கிக்கொண்டு அழைத்து பிரார்த்திக்கிறோம்.... நபி ஈசா (அலை) மற்றும் மரியம் (அலை) அவர்களைவிடவா இவர்கள்
சிறப்புக்குரியவர்கள்?? அவர்களை அழைத்து பிரார்த்தித்தால் வழிகேடு, இவர்களை அழைத்து பிரார்த்திப்பது
சுன்னத்தா??? சிந்திக்கமாட்டோமா???
அவர்களுக்கு
வந்தால் தக்காளி சட்னி, நமக்கு வந்தால் மட்டும் இரத்தமா? ஏன் இந்த இரட்டை நிலைபாடு???
அல்லாஹ்வே
நன்மாராயம் கூறியுள்ள நபிமார்களையும், நல்லடியார்களையும் கூட அழைத்து
பிரார்த்திக்க கூடாது என்று நம்பும் நாம், நாமே தீர்ப்பு வழங்கிய "அற்ப" மனிதர்களை அழைத்து
பிரார்த்திக்கலாமா? அல்லாஹ்விடம் மட்டுமே கேட்கவேண்டிய பிரார்த்தனைகளையும், நேர்ச்சைகளையும் அவர்களுக்கு
உரித்தாக்கினால் அல்லாஹ் கோபப்படமாட்டானா???
அன்பிற்கினிய
சொந்தங்களே....சிந்திப்போம்....கிறிஸ்தவர்கள் அறிந்து செய்தவற்றை, நாம் அறியாமையால் செய்து வழிகேட்டில்
தொடர்ந்துவிடவேண்டாம்....
இன்றே
பாவமன்னிப்பு தேடி மீள்வோம்....
கருணைமிக்க
அல்லாஹ்விடம் மட்டுமே அந்தரங்கமாக பிரார்த்திப்போம்...அவன் மட்டுமே நம்
உள்ளங்களில் இரகசியமானவற்றை அறிய வல்லோன்...
அவன்
மட்டுமே, எங்கிருந்து அழைத்தாலும், எம்மொழியில் அழைத்தாலும், எப்படி அழைத்தாலும் அறியக்கூடியவன், அழைப்புக்கு பதிலல்லிக்க கூடியவன்.
வணக்கத்துக்குரிய
ஒரே நாயன் அவன் மட்டுமே....
இஸ்லாத்தை
அதன் தூய வடிவில் பின்பற்றிடுவோம்...அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக....
வஸ்ஸலாம்
என்றும்
அன்பு சகோதரன்,
சுபுகான்
சுல்தான்.
Comments
Post a Comment