வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை!
அங்கு...டெல்லியில்.....
அடுத்தது என்ன?? தமிழகத்தின் அரசியல் கட்சிகளின் "மைண்ட் வாய்ஸ்கள்" - ஒரு சுவையான கற்பனை!
(சிரிப்பதற்கு மட்டுமல்ல, இந்த அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாத குணத்தை சிந்திக்கவும் தான்)
ஓ. பன்னீர்செல்வம் & அதிமுக வினர்
தப்பிச்சோம்டா சாமி....எவ்வளவு நாள் தான் மூஞ்ச சோகமாகவே வச்சிக்கிட்டு முதுகுத்தண்டு நிமிர்ந்திடுச்ச்சே ன்னு மனசுக்குள்ளால மட்டும் சந்தோஷப்படுறது....அதுமட்டுமா.. ..இன்னைக்கு நம்மள விட எவனாவது அதிகமா அழுது சீன போட்டுரபோரான்னு கண்ணும் கருத்துமா இருக்கறது இருக்கே.....சப்பா.....மிடில... நல்ல வேளை வெளிய வந்துட்டாங்க அம்மா....
மு. கருணாநிதி & திமுக
அட கொடுமையே....கண்ணமூடுறதுக்குள்ள செல்லமகனை முதல் அமைச்சர் ஆக்கி பார்த்துரலாம்ன்னு கனவு கண்டா இப்படி மண்ணள்ளி போட்டுட்டாய்ங்களே.....என்ன செய்வேன்.....???? கொல்றாங்கய்யா கொல்றாங்க.....ஓ சாரி....அது இந்த சிட்டுவேஷக்கனுக்கான டயலாக் இல்லையோ.....யார் அங்கே.....?? கூப்பிடுங்கள் நம்ம கட்சிக்கு முதல்வர் ஸ்டாலினை.....(எப்படியோ...முதல் வர் ஆக்கிட்டோம் லா...)
ஈவிகேஎஸ். இளங்கோவன் & தமிழக காங்கிரஸ்
என்னடா இது இந்தம்மா வெளிய வராதுங்குற நம்பிக்கைல பன்னீர் அண்ணனோட ஆட்சில எங்கேயும் ஊழல் எதுலேயும் ஊழல் ன்னு சொல்லிபுட்டே ஸ்டாலின முதல்வர் ஆக்க புறப்பட்டோமே....இப்போ இப்படி ஆயிபோச்சே??? குஷ்புவை நம்பி அம்மாவை பகச்சுகிட்டது தப்பாய் போச்சோ??? எல்லாம் தல எழுத்து...பேசாம ஒரு இரண்டு மாசம் தலைமறைவாகிவிட்டு "இளங்கோவன் RELOADED " ன்னு திரும்பி வந்துட வேண்டியது தான். (ராகுல் ஸ்டைல்)
தமிழிசை டெர்ரர் ராஜன் & பாஜக
தமிழ்நாட்டுல நிறைய மிஸ் கால் மெம்பர்ஸ் இருந்தும் கடந்த இடைத்தேர்தல்-ல 5000 ஓட்டுதான் கிடச்சுது......மோடி ஜி தான் அம்மா வெளிய வர்ற வச்சாருங்கிறதால அத சொல்லி ஒரு 30 சீட் கேட்டு கூட்டணிக்கு அச்சாரம் போட்டுற வேண்டியது தான். எவ்வளவு நாள் தான் "தண்ணி வண்டிய" நம்பி காலத்த ஓட்டுறது.... எவனும் தீண்ட மாட்டேங்குறான்....நாம வேற தமிழகத்துல ஆட்சியப்பிடிப்போம் ன்னு சவடால் விட்டிட்டு அலையுறோம். அதிமுக தொண்டர்களின் கைய கால புடிச்சு ஒரு பத்து பேரையாவது சட்டமன்றத்துக்கு அனுப்பிட்டா நாம தான் 2050-ல தமிழக முதல்வர் ன்னு "சொந்தகருத்தை" மக்களிடம் பரப்பிடலாம்....இருக்கவே இருக்கு பாரிவேந்தருடைய புதியகழிவறை.... சாரி புதியதலைமுறை டிவி
விசயகாந்த் & தேமுதிக
யாருடா அது அம்மா வந்ததுன்னு சொன்னது? நீ ஜெயா டிவி தானே? தூக்கி அடிசிருவ்வேன் பாத்துக்கோ.... அம்மா வரல....நான் நம்பமாட்டேன்.....அடுத்த முதல்வர் நான் தான்....ஒபாமாவ போய் சந்திப்பேன்....நம்ம தமிழ்நாட்டுக்கு சுதந்திரம் கேப்பேன்....ஆங்.....
யாருடா அது சரியா மிக்சிங் பண்ணாதது??? எல்லாம் இறங்கிடுச்சு...
வைக்கோ & மதிமுக
நடந்து நடந்து கால் வலிக்குது. நேத்து முளைச்சவனை எல்லாம் தமிழ்நாட்டுல பெரிய ஆள் ஆக்கி விட்டேன். அவன் என்னடான்னா ஆட்சியப்புடிப்பேன் ன்னு சொல்றான்...நம்மளால இப்போ நடக்க கூட முடியல.... எங்க போலாம்??? "தலைவர்" கிட்ட போய் சேர்ந்துடலாமா? அவர் சேர்த்துப்பார்.......இல்லே மீண்டும் "சகோதரி" கிட்டேயே போயிடலாமா? அங்க ஒருவேளை "டெர்ரர் சகோதரி" இருந்தால்??? பரவா இல்லை....நமக்கு என்ன மானம் மருவாதையா முக்கியம்??? நடக்க ரெண்டு பிளாட்பாரம் அமைத்து தந்தா போதுமே?? வாழ்க அதிமுக! வாழ்க திமுக!!! சும்மா இருக்கட்டும்...சொல்லி வைப்போம்...பின்னால் உதவும்!!!)
வைத்தியர் ராமதாஸ் & பாமக
நான் சொல்றவரு தான் முதலமைச்சர்! என் குட்டிச்செல்லம் அன்புமணி தான் அடுத்த முதல்வர், அம்மா வெளியே வந்தா என்ன, அய்யா உள்ளே போனா என்ன??? நாங்கெல்லாம் ஸ்பெஷல் டிசைன்....ஏம்ப்பா....இன்னும் பத்து நிமிஷத்துல அம்மா கூட அப்பாயிண்ட்மெண்ட் வேணும்....கொஞ்சம் "மரியாதை நிமித்தமா" பேசணும்...ஒரு "வார்ட் பாய்" (?!) சீட்டாவது தேத்திரனும்....அதுவும் வைக்கோ போறதுக்கு முன்னே நாம் முந்திக்கனும்... தேவைக்கு ஏற்ப பல்டி அடிப்பதிலும், கூட்டணி தாவுவதிலும், சொரணையே இல்லாமல் வழிவதிலும் நம்மள அடிச்சிக்க முடியுமா??? எடுர்ரா வண்டிய....
அங்கு...டெல்லியில்.....
மோடி ஜி.....
அம்மா...ஜி உள்ள போனது நம்மால, இப்போ வெளிய வந்ததும் நம்மால...அதனால, அம்மா ஜி பதவி ஏற்கும்போது ஒரு எட்டு போய் பார்த்துட்டு அதுக்கு பிறகு நம்ம மார்ஸ் சுற்றுபயணத்தை அமைக்கலாமா?? அம்மா ஜி வச்சு தான் இனி ராஜ்ய சபால ஒரு கலக்கு கலக்கணும்....நானா கொக்கா.....தமிழ் மாதா கி ஜெய்....!
தமிழக மக்கள்
போங்கடா நீங்களும் உங்க அரசியலும்.....உங்களை எல்லாம் சகிக்கிறதுக்கு பதிலா பேசாம நாமளே போய் ஜெயிலுக்குள்ள இருந்திறலாம் போல...எல்லா கொலைகாரனும் கொள்ளைகாரர்களும் வெளிய தான் இருக்கீங்க.....
Comments
Post a Comment