அல்லாஹ்வின் நேசர்கள் எத்தகையோர்?
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு இஸ்லாமிய சகோதரர்களே...
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு இஸ்லாமிய சகோதரர்களே...
திருகுரான் சூரா யூனுஸ்
10 :62 (முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக
அல்லாஹ்வின் நேயர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
10 :63 அவர்கள் ஈமான்
கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்.
இந்த இரு இறைவசனங்கள், இறைவனின் நேசத்தை பெறுபவர்கள் எப்படி பட்டவர்கள் என்று
நமக்கு அறிவிக்கின்றன! இந்த வசனங்களை வைத்து கொண்டு தான் "தர்காஹ் நேசர்கள்
" அவுலியாக்களை வணங்குவதற்கு வழி தேடுகின்றனர்! அந்த வசனங்களை நிதானத்துடன், உண்மையறியும் பொருட்டு, திறந்த மனதுடன் சிந்தித்தாலே
மனம் திருந்தி தர்காஹ்க்களை புறம் தள்ளி விடும் நிலை வந்து விடுமே...!
இந்த அழகிய வசனங்கள் என்ன சொல்கின்றன!???
1 ) அல்லாஹ்வின் நேசர்களுக்கு
எவ்வித பயமும் இல்லை!
"பயம்" என்பது மனதினுள் இருக்கும் ஒரு குணம், அதை அல்லாஹ் மட்டுமே
அறியமுடியும்!!!
2 ) அவர்கள் எதைபற்றியும் துக்கப்பட
மாட்டார்கள்!
இந்த பண்பு சில சமயங்களில் வெளிப்படையானதே என்றாலும்
துக்கத்தை வெளிக்காட்டாமல் மனிதனால் இருக்கவும் முடியும்! இதை கருத்தில் கொண்டால்
இந்த பண்பும் மனதில் இருந்தால் அதை அல்லாஹ் மட்டுமே அறியமுடியும் என்பதை
விளங்கலாம்.....!
3 ) உறுதியான ஈமான் கொண்டிருப்பார்கள்!
ஒருவருடைய ஈமானை நம்மால் எப்படி அளந்திட முடியும்!!???? வெளிப்படையாக
முஸ்லிமாக தெரியும் ஒருவர், மனதளவில் ஈமான் உறுதி இல்லாதவராக கூட இருக்க கூடும்.
அல்லாஹ் மட்டுமே மனங்களை அறிய வல்லவன்!
4 ) அல்லாஹ்விடம் பயபக்தி என்னும் தக்வாவுடன்
இருப்பார்!
நரகில் அதிகமாக மார்க்கம் கற்றறிந்தவர்கள் இருப்பர் என்று
நபி மொழி உண்டு! மார்க்க கல்வி மட்டும் இருப்பதனாலே ஒருவர் தக்வா உடையவர் ஆகி விட
முடியாது என்று இருக்கையில், எவ்வாறு ஒருவர் உண்மையிலேயே தக்வா உடன் தான் இருக்கிறாரா
என்று நாம் கண்டு பிடிப்பது !?? எனவே தக்வா என்பது மனது சம்மந்த பட்டதே. அதையும் அறியும்
வல்லமை அல்லாஹ் ஒருவனுக்கே உண்டு!!!!
மொத்தத்தில் இந்த இரண்டு வசனங்களும் இறைநேசர்களை நாமே கண்டு
பிடித்து அவர்களுக்கு கப்ர் எழுப்பி அவர்களை அழைத்து பிரார்த்திக்க அதாரமாகாது
என்பதை நன்கு விளங்கலாம்!!! இறைநேசர்களை அல்லாஹ் மட்டுமே அறிய முடியும் என்று
தெளிவாக எடுத்துரைக்கிறது இந்த வசனங்கள்!!! இதை விட வேறு என்ன ஆதாரங்கள் வேண்டும், தர்காஹ்க்களை புறம்தள்ள!???
இறைநேசர்களை நம்மால் கண்டு பிடிக்கவே முடியாது....நம்மை
சுற்றி யாரெல்லாம் நரகத்துக்கு போவார்கள், யாரெல்லாம் சுவர்க்கத்துக்கு போவார்கள்??? கண்டு பிடிக்க முடியுமா???. அந்த
தீர்ப்பை அளிப்பவன் அல்லாஹ்வே. எனவே, நாமே அவ்வகையில் தீர்ப்பளித்து, இன்னின்னவர்கள் எல்லாம்
"அவுலியாக்கள் தான்" என்று முடிவு செய்வது அல்லாஹ்வின் அதிகாரத்தில் கை
வைப்பதாகும்!
அல்லாஹ் நமக்கு குரானில் சுவர்க்கவாசிகள் என்று சொல்பவர்களை
நாம் சுவர்க்கவாசிகள் என்று நம்பவேண்டும்! எடுத்துக்காட்டாக, தூதர்கள், இஸ்லாத்துக்காக போரிட்டு
உயிர்த்தியாகம் செய்தவர்கள், மர்யம்(அலை), பிர்-அவுனின் மனைவி ஆசியா என்பவர்களை இறைவனின் நேசத்தை பெற்ற சுவர்க்கவாசிகள் என்று
நாம் உறுதியாக நம்பவேண்டும், அது ஈமானின் ஒரு பகுதி! அது போலவே, நம் ரசூல்(ஸல்) அவர்களும் தன்
சத்திய சஹாபாக்கள் பலரையும் சுவர்க்கவாசிகள் என்று அடையாளம் காட்டியுள்ளார்கள்.
நபிவழிமுறைகள் அனைத்தும் வஹியே என்பதால் அதையெல்லாம் நாம் ஏற்று கொள்வது
ஈமானின் பகுதியே ஆகும்!
அல்லாஹ்வும், நம் உயிரினும் மேலான நபி(ஸல்) அவர்களும் நமக்கு அடையாளம்
காட்டாதவர்களை நாமே தீர்ப்பு வழங்கி "அவுலியாக்கள் தான்" என்று அழைத்து
வணங்குவது பித் அத்தாகும்...ஷிர்க்கின் ஒரு வகையாகும்!! இனியும் இந்த இரு
வசனகளையும் எடுத்து கூறி தர்காஹ்வுக்கு ஆள் சேர்க்க எத்தனிக்காதீர்கள்!!! அவ்வாறான
தவறான சிந்தனைகளிலிருந்தும் செயல்களிலிருந்தும் அல்லாஹ் நம் அனைவரையும் பாது
காப்பானாக....
வஸ்ஸலாம்
Comments
Post a Comment