"கப்ர் சியாரத்" என்னும் அழகிய சுன்னத் !
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு இஸ்லாமிய சகோதரர்களே....
தான் நாடியவர்களுக்கு அல்லாஹ் அனுமதியளித்த பின்பே தவிர அவர்களுக்குப் பரிந்துரை பயன் தராது. (அல்-குர்ஆன்-53:26)
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு இஸ்லாமிய சகோதரர்களே....
தர்காஹ்க்களை எதிர்க்கும் போதெல்லாம் "அவுலி யா பக்தர்கள்" வஹ்ஹாபி கோஷம் எழுப்பி திசை திருப்பி தப்பி விடலாம் என்று கனவு கண்டு வருகின்றனர்! இங்கே எந்த அறிஞரின் கருத்தையோ, ஏன் ஒரு வார்த்தையோ கூட குறிப்பிடாமல் வெறும் குரான் வசனங்கள் மற்றும் ஹதீஸ்களை தொகுத்தளித்துள்ளேன்...இப்போது என்ன சொல்ல போகிறார்கள் தர்காஹ் விசுவாசிகள்!??? இந்த ஆதாரங்களை மறுக்க போகிறார்களா??? இவற்றை நிராகரித்துவிட்டு ஷிர்க்கில் மூழ்கப்போகிரார்களா??? இஸ்லாத் தை வைத்து வயிறுவளர்க்க நினைத்தவர்கள் எழுதி வைத்த கித்தாபுகளை தூக்கி எறிந்து விட்டு, குரான் ஹதீஸை ஏற்று கொள்ளும் மனப்பக்குவத்தை காட்டுவார்களா...பொறுத்திருந்து பார்ப்போம்.....இன்ஷா அல்லாஹ்....
கப்று ஸியாரத் செய்யலாமா? அதன் நோக்கம் என்ன? சியாரத் செய்வது எப்படி!?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் (முதலில்) கப்றுகளுக்கு ஸியாரத் செய்வதைத் தடுத்து வந்தேன். (இப்போது) ஸியாரத் செய்யுங்கள். அது மரணத்தை நினைவு படுத்தும். ( அறிவிப்பவர்: இப்னு புரைதா (ரலி), ஆதாரம்: அபூதாவூது-3237.
“கப்ருகளை ஜியாரத் செய்யுங்கள், நிச்சயமாக அது உலகப் பற்றை நீக்கும், மறுமையை நினைவு படுத்தும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஸயீதுல் குத்ரி, நூல் : அஹ்மது.
“முஃமினான மண்ணறைவாசிகளே! உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும். நிச்சயமாக நாங்களும் அல்லாஹ் நாடினால் உங்களை மரணம் மூலம் சந்திப்பவர்களே!” அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் : முஸ்லிம், அஹ்மது, நஸயீ.
“முஃமினான, முஸ்லிமான மண்ணறை வாசிகளே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! நிச்சயமாக, இன்ஷா அல்லாஹ், நாங்களும் உங்களை அடுத்து வருபவர்களே! உங்களுக்கும் எங்களுக்கும் அல்லாஹ்விடம் சுகவாழ்வைக் கேட்கிறோம்” அறிவிப்பவர் : புரைதா (ரலி), நூல்கள்: முஸ்லிம், அஹ்மது, இப்னு மாஜா
கப்றுகளை தரைமட்டத்திற்கு மேல் உயர்த்தலாமா?
நபி (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன்.‘தரை மட்டத்திற்கு மேல் உயர்த்தப்பட்டுள்ள எந்த கப்றையும் நீ தரைமட்டமாக்காமல் விட்டுவிடாதே! எந்த உருவப்படத்தையும்,சிலைகளையும் அழிக்காமல் விட்டுவிடாதே’ என்று அலி (ரலி) அவர்கள் அபூ ஹய்யான் என்பவருக்குக் கூறினார்கள்.(ஆதாரம் முஸ்லிம்,திர்மிதி)
கப்ருகளுக்கு கட்டிடங்கள் கட்டலாமா?
"நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன் நோயுற்றிருந்த போது, “யூதர்களையும், கிறித்தவர்களையு ம் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டனர்” என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையென்றால் நபி (ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருப்பார் கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப் பட்டு விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்". அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 1244
"உம்மு ஹபீபா (ரலி) அவர்களும், உம்மு ஸலமா (ரலி) அவர்களும் தாங்கள் அபீசீனியாவில் கண்ட, உருவங்கள் இடம் பெற்ற கோவிலைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் ஒரு நல்ல மனிதர் வாழ்ந்து மரணித்து விட்டால் அவரது அடக்கத்தலத்தின் மேல் ஒரு வணக்கத்தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் படைப்பினங்களிலேயே அவர்கள் தாம் மிகவும் கெட்டவர்களாவர்” என்று கூறினார் கள்". அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 427, 434, 1341, 3873, முஸ்லிம் 822
"யஹுதிகளையும், நஸாரக்களையும் அல்லாஹ் சபிப்பானாக. ஏனெனில் அவர்கள் தங்களின் நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் கப்ருகளை மஸ்ஜிதாக ஆக்கிக்கொண்டனர்” (நூல் : புகாரி)
எவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே கியாமத் (மறுமை) நாள் வருகிறதோ அவர்களும், கப்றுகளை மஸ்ஜிதாக (வழிபடும் இடமாக) ஆக்கிக் கொண்டவர்களும் மக்களில் மிகவும்
கெட்டவர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினாhகள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி)
ஆதாரம் : முஸ்னத் அஹ்மத்)
கெட்டவர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினாhகள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி)
ஆதாரம் : முஸ்னத் அஹ்மத்)
“உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் தங்கள் நபிமார்களின் கப்ருகளையும், நல்லடியார்களின் கப்ருகளையும் வணங்குமிடமாக ஆக்கிவிட்டனர். அறிந்து கொள்க! கப்ருகளை வணங்குமிடமாக ஆக்கிவிடாதீர்கள்! அதை நான் தடுக்கிறேன்” அறிவிப்பவர் : அப்துல்லாஹ் அல்பஜலி (ரலி), நூல் : முஸ்லிம்.
கப்றுகள் பூசப்படுவதையும், அதன் மீத கட்டிடங்கள் கட்டுவதையும், அதனருகே உட்காருவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததாக ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( ஆதாரம: முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்)
‘கப்றுகளை ஸியாரத் செய்யும் பெண்களையும், அதன் மீது கட்டிடம் கட்டுபவர்களையும், அதில் விளக்கு எரிப்பவர்களையும் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்’. (அறிவிப் பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : அபூதாவூது, திர்மிதி,பைஹகீ: 7457)
அவ்லியாக்களுக்கு விழா எடுக்கலாமா?
நபி(ஸல்)அவர்கள் ‘எனது கப்றை விழா கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதீர்கள்’ என தாம் மரணிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் எச்செரித்துளார்கள். (அறிவிப்பவர்: அபுஹுரைரா(ரலி), ஆதாரம்:அஹ்மத்,அபூதாவூது)
எனது கப்ரை (கந்தூரி) விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கிவிடாதீர்கள். உங்கள் வீடுகளையும் கப்ருகளாக ஆக்கிவிடாதீர்கள். நீங்கள் எங்கிருந்த போதும் எனக்காக ஸலவாத்து சொல்லுங்கள். அது என்னை வந்தடையும்” அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: அபூதாவுத்.
‘நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்கினால் அது ஏற்றுக்காள்ளப்படமாட்டாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) ஆதாரம்: புகாரி:2697முஸ்லிம்)
அவ்லியாக்கள் உயிரோடு இருக்கிறார்களா?
அல்லாஹ்வுடைய பாதையில் கொல்லப்பட்டோரை இறந்து விட்டவர்கள் என்று கூறாதீர்கள். மாறாக அவர்கள் உயிரோடு உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:154)
அல்லாஹ்வின் பாதையில்; போரிட்டுக் கொல்லப்பட்டவாகளை மரணித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள். (அவர்கள்) தமது இறைவனிடத்தில் உயிரோடு இருக்கிறார்கள். (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள். (அல்குர்ஆன் 3:169)
உயிருடன் இருக்கிறர்கள் என்றால் எப்படி? என நாங்கள் கேட்டபோது ‘அவர்களின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவைகளின் கூடுகளுக்குள் இருக்கும். அவை சுவர்க்கத்தில் விரும்பியவாறு சுற்றித் திரியும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் விளக்கம் அளித்தனர் என இப்னு மஸ்வூது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் முஸ்லிம் 3500)
நிச்சயமாக சுஹதாக்(கள் என்னும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர);களின் உயிர் பறவைகளின் உடல் கூட்டில் விடப்பட்டு, சுவர்க்கத்தில் தமது விருப்பத்திற்கேற்ப உலவிக் கொண்டிருக்கின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.) அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம்)
உங்கள் சகோதரர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டபோது அல்லாஹ் அவர்களின் உயிர்களை பச்சைப் பறவையின் உடல் கூட்டில் அமைத்து விட்டான். அவை சுவர்க்கத்துடைய ஆறுகளில் தண்ணீர் அருந்திக் கொண்டும், சுவர்க்கத்தின் (மரங்களின்) பழங்களை புசித்துக் கொண்டுமிருக்கின்றன. (இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அஹ்மத்)
அவ்லியாக்களிடம் உதவி தேடலாமா?
மறுமை நாள் வரை (அழைத்தபோதிலும் இறந்துபோன) அவர்கள் (உயிரோடுள்ள) மக்களுக்கு பதில் தரமாட்டார்கள். ஆகவே, அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களை விட மிகவும் வழி கெட்டவர்கள் யார்? இவர்கள் அழைப்பதைக்கூட அவர்கள் அறியமாட்டார்கள்’. (அல்குர்ஆன்-4:5)
துயரத்தில் சிக்கித் துடித்துக் கொண்டிருப்போர் அபயமிட்டழைத்தால் அவர்களுக்கு பதில் கூறி அவர்களுடைய துயரங்களை நீக்குபவர் யார்? அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு எவருமில்லை. அவன் மட்டுமே துயரங்களை நீக்குவான்’. (அல்குர்ஆன்-27: 62).
‘உமக்கு (எவ்வித) நன்மையோ, தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாத எதனையும் நீர் பிரார்த்திக்க வேண்டாம். அவ்வாறு செய்வீராயின், நீர் அநியாக்காரர்களில் ஒருவராகிவிடுவீர்!’ (அல்குர்ஆன்-10:106)
‘அவர்கள் இவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவர்கள். (அதுமட்டுமல்ல) அவர்கள் தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளவும் சக்தியற்றவர்கள்’. ( அல்குர்ஆன் 7:192)
‘நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே! நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள். அவர்கள் உங்களுக்குப் பதிலளிக்கட்டும் (பார்க்கலாம்).’ (அல்-குர்ஆன்-7:194)
‘நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுறமாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்கு பதில் தரமாட்டார்கள்.’ (அல்-குர்ஆன்- 35: 14)
‘(நபியே) நீர் கூறும். நான் பிரார்த்திப்பதெல்லாம் என் இறைவனைத்தான். அன்றியும், நான் அவனுக்கு (ஒருபோதும்) எவரையும் இணைவைக்கமாட்டேன்;.’ (அல்-குர்ஆன்- 72:20)
மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். (அல்-குர்ஆன்- 50 :16 )
உன்னையே நாங்கள் வணங்குகிறோம்.உன்னிடமே உதவியும் தேடுகிறோம். (அல்-குர்ஆன்- 01:04)
அவ்லியாக்களிடம் வஸீலா தேடலாமா?
மூமின்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவன் பால் நெருங்குவதற்குரிய வழியைத் (வஸீலா) தேடிக்கொள்ளூங்கள், (அல்குர்ஆன் 5:35)
அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள்.அவனுடய திரு நாமங்களில் தவறிழைப்போரை(புறக்கணித்து) விட்டு விடுங்கள். அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் தக்க கூலி கொடுக்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 7:180)
நீங்கள் பொறுமையைக்கொண்டும், தொழுகையைக்கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள். (அல்குர்ஆன் 2:45)
கடுமையான மழையின் காரணமாக மூவர் ஒரு குகையினுள் ஒதுங்கிய போது, கடுங்காற்று அத்துடன் வீசியதால் பெரிய கல் ஒன்று உருண்டு வந்து குகை வாயிலை அடைத்துக்கொண்டது. அங்கிருந்த கல்லை நகற்ற முடியாத அம்மூவரும் அவரவர்களின் நல்அமல்களை இறைவனிடம் முறையிட்டு வழி திறக்க துஆ செய்தார்கள். இது நீண்ட சம்பவத்தின் சுருக்கம் (புஹாரி,முஸ்லிம் ஹதீஸ் நூல்களில் காணலாம்)
அவ்லியாக்கள் மறுமையில் ஷஃபாஅத் செய்வார்களா?
’அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை தங்களுக்குப் பரிந்து பேசுபவர்களாக எடுத்துக் கொண்டார்களா? (நபியே!)கூறுவீராக! அவைஎந்த சக்தியையும், அறிவையும் பெறாமலிருந்தாலுமா?பரிந்துரை பேசுதல் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது.’ (அல்-குர்ஆன்- 39:43,44)
’ஆகவே, சிபாரிசு செய்வோரின் எந்த பரிந்துரையும் அவர்களுக்குப் பலனளிக்காது’. (அல்-குர்ஆன்- 72:20,74:48)
’ஆகவே, சிபாரிசு செய்வோரின் எந்த பரிந்துரையும் அவர்களுக்குப் பலனளிக்காது’. (அல்-குர்ஆன்- 72:20,74:48)
’தங்களுக்கு ஏதொரு நன்மையோ, தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை அவர்கள் வணங்குவார்கள்.மேலும், இவை எங்களுக்காக அல்லாஹ்விடம் (ஷஃபாஅத்) பரிந்து பேசும் என்றும் கூறுகிறார்கள்.( அல்-குர்ஆன்- 10:18)
அவன் யாருக்கு அனுமதியளிக்கின்றானோ அவருக்கே தவிர மற்றவர்களுக்குப் பரிந்துரை பயன் தராது.(அல்-குர்ஆன்-20:109,34: 23)
தான் நாடியவர்களுக்கு அல்லாஹ் அனுமதியளித்த பின்பே தவிர அவர்களுக்குப் பரிந்துரை பயன் தராது. (அல்-குர்ஆன்-53:26)
நாம் அழைத்தால் இறந்தவர்களால் கேட்க முடியுமா?
(நபியே!) நிச்சயமாக நீர் இறந்தவர்களை செவியேற்கும்படி செய்ய முடியாது (குர்ஆன் 30:52)
அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் ஒரு திரை (ஃபர்ஸக்) உள்ளது. (குர்ஆன்:23:100)
(நபியே!) நிச்சயமாக நீர் இறந்தவர்களை செவியேற்கும்படி செய்ய முடியாது (குர்ஆன் 30:52)
அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் ஒரு திரை (ஃபர்ஸக்) உள்ளது. (குர்ஆன்:23:100)
அவ்லியாக்களுக்கு நேர்ச்சை செய்யலாமா?
இவர்கள் (தங்களின் இறைவனுக்குச் செய்த) நேர்ச்சைகளையும் நிறைவேற்றி வைத்தனர். நீண்ட வேதனையுடைய (இறுதி) நாளையும் பயந்து கொண்டிருந்தனர்.(அல்குர்ஆன்: 76:58)
இம்ரானுடைய மனைவி (மர்யமின் தாயார்) ‘ நிச்சயமாக என் வயிற்றிலுள்ள குழந்தையை முற்றிலும் உனக்கு அர்ப்பணம் செய்துவிட நேர்ச்சை செய்து கொண்டேன்.ஆகவே இந்த நேர்ச்சையை நீ அங்கீகரிப்பாயாக!’ எனப் பிரார்த்தித்தார்கள். ( அல்குர்ஆன்: 3:35)
அவுலியாக்களுக்காக அறுத்துப் பலியிடலாமா?
உங்கள் இறைவனைத் தொழுது (அவனுக்கே) அறுத்துப்பலியிடுவீராக! (குர்ஆன்: 108: 02)
(நபியே! நீர் கூறுவீராக! நிச்சயமாக எனது தொழுகை, தியாகம் (குர்பானி), வாழ்வு, மரணம் யாவும் உலகைப்படைத்துக் காக்கும் அல்லாஹ்வுக்கே உரியவை. (அல்குர்ஆன்: 6:162)
அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுத்துப்பலியிடுபவனை அல்லாஹ் சபிப்பானாக! ( அறிவிப்பவர் அலீ(ரலி), நூல்: முஸ்லிம்)
வஸ்ஸலாம்
Comments
Post a Comment