இஸ்லாமியர்களுக்கு முதல் முதல் அடைக்கலம் அளித்த அபிசீனிய மன்னர் நஜ்ஜாஷி அவர்கள் ......ஒரு கிருஸ்தவர்! அல் அமீனாக விளங்கிய முகம்மதை இறைத்தூதர் என்று உறுதிசெய்த பெரியவர் வரஹா ......ஒரு கிருஸ்தவர்! நம்மோடு உறவோடு வாழும் நல்லுள்ளம் கொண்ட கிருஸ்தவ சகோதரர்களை "அவர்களின் நம்பிக்கைப்படி" "அவர்கள்" கொண்டாடும் திருநாளில் வாழ்த்த மனமில்லையென்றாலும் புண்படுத்தாமல் இருக்கலாமே???? தஃவா என்பது குற்றம்சுமத்தி புண்படுத்துவதல்ல, அழகிய முறையில் தீய்மையை தடுத்து நன்மையை ஏவுவதாகும். அழகிய தாஃவா செய்ய முதலில் நம்மை அவர்கள் மதிக்கும் பொருட்டு நடந்திட வேண்டும். மாற்றுமத கொண்டாட்டங்களுக்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பதால் எந்த நஷ்டமும் ஏற்படுவதில்லை, வாழ்த்து சொல்வதால் “மட்டுமே” மதநல்லிணக்கம் வளர்ந்துவிடும் என்றும் நம்பவுமில்லை. வாழ்த்துவதும் வாழ்த்தாமல் இருப்பதும் அவரவர் விருப்பம் சார்ந்தது. எப்படி வாழ்த்துவது கட்டாயமில்லையோ , அதுபோலவே "வாழ்த்தவே கூடாது" என்று சொல்வதிலும் அர்த்தமில்லை. பல இமாம்கள் வாழ்த்துவதற்கு எதிராக பத்வாக்கள் வழங்கினாலும், குரானையும் ஹதீஸையும் "...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்கத்துஹு... இஸ்லாமிய சமூகம் பலவாறான சிக்கல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் ஆளாகிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் ஒட்டுமொத்த சமுதாயமும் தலைகுனியும் அளவிற்கு போய்விட்டது மாபெரும் மக்கள் இயக்கமாக விளங்கிவந்த ததஜ என்னும் இயக்கத்தின் இந்நாள் முன்னாள் தோழர்கள் பொதுவெளியில் அடித்துக்கொள்வது துரதிர்ஷ்டவசமானது. இயக்கவெறி மேலோங்கி சமுதாயத்தை ஏனையவர்கள் ஏளனமாக பேசும் நிலைக்கு தள்ளிவிடும் வகையில் பொதுவெளியில் அடித்துக்கொள்ளும் இயக்கவாதிகள் மத்தியில் நாம் வாழ்கிறோம். இயக்கவாதிகளின் நிர்வாக போரில் நுழைந்து குழப்பம் விளைவிக்கவும் அடித்துக்கொள்பவர்கள் சேர்ந்துவிடவேக்கூடாது என்ற நோக்கில் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கவும் பலர் ஆரம்பித்துள்ள இந்நிலையில் சாமானிய முஸ்லிமாக எப்படி இவற்றை சிந்தித்து எதிர்கொள்ளவேண்டும் என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். சிந்தனையை தூண்டும் விதமாகவே சில குறிப்புகளை உங்களுடன் பகிர்கிறேன்.... இன் ஷா அல்லாஹ் " ஆடுகள் அடித்துக்கொண்டால் ஓநாய்களுக்கு கொண்டாட்டம்" என்பதையம் மனதில் ஏற்றிக்கொண்ட...