திடீர் "இருதய துடிப்பு முடக்கம்" (SUDDEN "CARDIAC ARREST" - கார்டியாக் அர்ரஸ்ட்) க்கு இருதய இயக்க மீட்பு CPR (CPR – CARDIO PULMONARY RESUSCITATION) முதலுதவி முறை!
திடீர் "இருதய துடிப்பு முடக்கம்" (SUDDEN "CARDIAC ARREST" - கார்டியாக் அர்ரஸ்ட்) க்கு இருதய இயக்க
மீட்பு CPR
(CPR – CARDIO PULMONARY RESUSCITATION) முதலுதவி முறை!
- மாரடைப்பு (HEART ATTACK - ஹார்ட் அட்டாக்) என்பது இருதயத்தின் இரத்த ஓட்டம் (CIRCULATION) தடைபடுவதால் வருவது, திடீர் "இருதய துடிப்பு முடக்கம்" (SUDDEN "CARDIAC ARREST" - கார்டியாக் அர்ரஸ்ட் )
என்பது இருதயத்தின் மின்சார (ELECTRICITY) செயல்திறன் நிர்ப்பதனால் வருவது, இரண்டும் வெவ்வேறு.
- 7.5 லட்சம் இந்தியர்கள், வருடந்தோறும், மாரடைப்பால் உயிரிழக்க நேரிடுகின்றனர்!!
- மாரடைப்பால் ஏற்படும், 80% உயிரிழப்புகள் மருத்துவமனை அல்லாத இடங்களில் தான் நேரிடுகிறது.
- ஒரு உயிரைக் காப்பாற்ற, நீங்கள் அவசியம் மருத்துவராக இருக்க வேண்டியதில்லை. இருதய இயக்க மீட்பு CPR (CPR – CARDIO PULMONARY RESUSCITATION) என்ற உயிர் காக்கும் முதலுதவிக்கு தக்க பயிற்சி மட்டும் போதுமானது.
- 1%த்திற்கும், குறைவான மக்களுக்குத்தான், CPR (CPR – CARDIO PULMONARY RESUSCITATION) என்ற இருதய இயக்க மீட்பு பற்றி தெரியும் என்கிறது ஆய்வு.
- இருதய இயக்க மீட்பு CPR (CPR – CARDIO PULMONARY RESUSCITATION) என்பது உயிரை காப்பாற்றும் முதலுதவியாகும்.
- CARDIAC ARREST என்ற இருதய செயலிழப்பில்.... இருதயம் முற்றிலும் செயலிழப்பதால், உடலின் அனைத்து பாகங்களிலும் இரத்த ஓட்டம் மற்றும் O2 தடைபெறுகிறது.
- மூளைக்கு 4 நிமிடங்களுக்கு மேலாக, O2 மற்றும் இரத்த ஓட்டம் தடைபட்டால் மயக்கதிலை மற்றும் கோமா ஏற்படும்.
- தாமதிக்கும், ஒவ்வொரு நிமிடமும் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகள் 10% குறைந்து கொண்டே இருக்கும்.
- ஒவ்வொரு நிமிடமும், 20-30% ரத்த ஓட்டத்தை, CPR அதிகரிக்கிறது.
- முதலுதவியின் மூன்று முக்கிய நோக்கங்கள்..
- உயிர் பாதுகாத்தல்
- நோய் தீவிரமடைவடைதை தவிர்த்தல்
- நோயை குணப்படுத்துவதை ஊக்குவித்தல்.
- முதலுதவியின் மிக முக்கியமான விதிகள்...
DR’S ABCD எனப்படும், (DANGER, RESPONSE, SHOUT), (AIRWAY, BREATHING, CIRCULATION, DEFRIBILLATION) என்பதன் சுருக்கமாகும்.
சில விதிமுறைகள் (DR’S)
- DANGER - (APROACH SAFELY) : முதலுதவியாளர் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தல். சுற்றும் முற்றும் ஏதாவது ஆபத்து (எ.கா. மின்சாரம்) எஞ்சியுள்ளதா என்பதை ஆராயவேண்டும்
- RESPONSE – (CHECK RESPONSE) : பாதிக்கப்பட்டவரை தோளில் தட்டி அழைக்க வேண்டும், அவர் உணர்வுடன் உள்ளாரா என்று தெரியும் பொருட்டு. பாதிக்கப்பட்டவரின் மூச்சு மற்றும் துடிப்பை பரிசோதனை செய்யவேண்டும்.
- SHOUT – (SHOUT FOR HELP) : உணரவில்லை என்றால் உடனடியாக உதவிக்கு குரல் கொடுக்க வேண்டும். ஆம்புலன்சுக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும். AUTOMATED EXTERNAL DEFIBRILLATION (AED) என்னும் இருதய இயக்க மீட்பு தானியங்கி கருவியை கொண்டுவருமாறு “குறிப்பிட்டு” சொல்லவும் கட்டாயமாக. உங்களுடன் வேறு நபர்கள் இருப்பின், முடிந்தால் மருத்துவ உதவி அளிக்கும் நபர்களுடன் தொடர்ந்து தொடர்பிலேயே இருந்துகொண்டு உங்கள் முதலுதவி தொடரவும்
- இதன் பின்னரே இருதய இயக்க மீட்பு (CPR – CARDIO PULMONARY RESUSCITATION) ஐ செயல்படுத்த வேண்டும்.
CPR செயல்முறை (ABCD)
- AIRWAY - நினைவிழந்த நபரை சமனான தரையில் அல்லது தட்டியில் நேராக கிடத்தி அவரது தலையை நிமிர்த்த வேண்டும். காற்று மூக்கு வழி நுரையீரலுக்கு எளிதாக செல்லும் விதம் தாடையை தூக்கி வைக்கவேண்டும்
- BREATHING - பாதிக்கப்பட்ட நபரின் மூச்சுக் குழாய் அடைப்பு உள்ளதா என்றும் சுவாசம் உள்ளதா என்றும் பரிசோதனை செய்ய வேண்டும். நம் கன்னத்தை அவரின் மூக்கின் நேராக வைத்து மூச்சு காற்று வருகிறதா என்றும் அதே வேளையில் மூச்சு சத்தம் வருகிறதா என்று கூர்ந்து கவனிக்க வேண்டும்.
- CIRCULATION - அதே வேளையில் அவரது கழுத்து நரம்பில் நம் இரு விரல்களை வைத்து இதயத்துடிப்பை (பல்ஸ்/PULSE) அறியவேண்டும். இதன் மூலம் மூளைக்கு இருதயத்திலிருந்து இரத்த ஓட்டம் (CIRCULATION) உள்ளதா என்பதை அறியமுடியும்
இவை அனைத்தையும் விரைந்து (இருபது செகண்டுகளுக்குள்) செய்யவேண்டும் (MAXIMUM BY 20 SECONDS
)
சுவாசம் இல்லை, அல்லது சீராக இல்லை, இருதயத்துடிப்பும் இல்லை என்றால் அடுத்த
உதவியை தொடரவும், அதுதான் இருதய இயக்க
மீட்பு (CPR – CARDIO PULMONARY
RESUSCITATION)
- பாதிக்கப்பட்ட நபரின் மூக்கினைப் பிடித்துக்கொண்டு வாயினை அவரது வாயின் மீது வைத்து (MOUTH TO MOUTH BREATHING), 5 நொடி இடைவெளியில், 2 முறை காற்றை ஊதி (LIFE BREATH) உள்செலுத்த வேண்டும். ஊதும்போது பாதிக்கப்பட்டவரின் நெஞ்சு "உயர்ந்து தாழ்வதை" கவனிக்கவும்
- பிறகு நெஞ்சின் மீது அழுத்தி (CHEST COMPRESSION) இருதயத்திற்கு அதிர்ச்சி கொடுக்க வேண்டும்.
- மார்பின் மையப்பகுதியில், கைகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து, நிமிடத்திற்கு 100-120 முறை என்ற அளவில், 5-6 cm ஆழ அழுத்தங்களை 30 முறை தர வேண்டும்.
- BLS – BASIC LIFE SUPPORT, என்ற அடிப்படை உயிர்காக்கும் வழிமுறையின் மூலம், மரணங்களைத் தடுக்க முடியும். ALS – ADVANCED LIFE SUPPORT என்பதில், ABC யுடன் ஒரு D யையும் DEFIBRILLATION சேர்கிறது.
- AUTOMATED EXTERNAL DEFIBRILLATION (AED) என்னும் இருதய இயக்க மீட்பு தானியங்கி கருவியை உபயோகித்து பாதிக்கப்பட்டவரின் இருதயத்துக்கு அதிர்ச்சி கொடுத்து மீட்க்கும் முறைதான் டேபிரிபிள்ளையின் எனப்படுவது. மருத்துவ உதவி கிடைத்ததும் இதை செயல்படுத்திடவேண்டும்
என்றும் அன்புடன்,
சுபுஹான் சுல்தான்
Comments
Post a Comment