Skip to main content

கமலை நாம் எதிர்க்கவேண்டுமா???


கமல்!!!

இன்றைய தமிழக அரசியலில் பரபரப்பாக எதிர்க்கப்பட்டு வருபவர்!
குறிப்பாக சிறுபான்மையினரால்....ஏன்???
கமல் ஒரு நடிகன், திரைப்படைப்படைப்பாளி! ஒரு கலை வல்லுநர்! இதனால் அவர் திரைத்துறையில் மட்டுமே இருக்க வேண்டும், அரசியலில் வரக்கூடாது என்பதில்லை!
தமிழகம் திரைப்படத்துறையினரால் ஆளப்பட்டு வந்துள்ளது என்பது உண்மை, ஆனாலும், மக்கள் மனதில் இடம்பிடித்த பல முன்னணி நடிகர்களும் அரசியலில் தோற்கடிப்பட்டுள்ளனர் தமிழக மக்களால் என்பதும் எதார்த்தம்! உதாரணம்- "நடிகர் திலகம்" என்று அழைக்கப்பட்ட சிவாஜி கணேசன். எனவே மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல, திரைப்படத்துறையின் என்றால் அவர்களது கொள்கைகள் என்ன, மக்களுக்கு என்ன சொல்கிறார்கள் என்று கொஞ்சமேனும் சிந்திக்கிறார்கள் என்பதற்கு மிகப்பெரும் ஆதாரம் திரைப்படத்துறையிலிருந்து வந்த முதல்வர்கள் திரைத்துறை சாராத மாற்று மாநில முதல்வர்களைவிட நல்லாட்சியையே தந்துள்ளார்கள் என்பதே! தமிழகத்தை ஆண்ட திரைத்துறையினர் (அண்ணாதுரை, கருணாநிதி, MGR, ஜெயலலிதா) அனைவருமே ஒருவருக்கொருவர் மிகப்பெரிய ஆளுமைகளாக, இராஜதந்திரிகளாக, கட்டுக்கோப்பான கட்சித்தலைவர்களாக இருந்துள்ளனர் என்பதை எவரும் மறுக்கமுடியாது. எனவே தமிழர்கள் வெள்ளித்திரையில் தலைவர்களை தேடுகிறார்கள் என்ற ஏளனம் அர்த்தமற்றது மட்டுமல்ல பொறாமையாளர்களின் ஓலமாகவே என்  மனதிற்கு படுகிறது .
இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் முதல்வராக உரிமை உள்ளது, அதுபோலவே நடிப்பை தொழிலாய் செய்பவர்களுக்கும் உரிமை உள்ளது. மக்கள் நடிப்பை பார்த்து ஏமாறாமல் , அவர்களது கொள்கை என்னவென்று பார்த்து ஆதரிப்பதையோ, எதிர்ப்பதையோ செய்யவேண்டும்.
நடிகரை விட வேறு யாரும் இல்லையா என்று கேட்ப்போருக்கு சொல்லி கொள்கிறேன்.....அனைவரும் வரலாம் , நடிகர்களும் வரலாம் யாருக்கு மக்களை தம் தலைமைப்பண்பை, கொள்கையை, செயல்திட்டங்களை ஈர்க்கும் தகுதியுள்ளதோ அவர்கள் வெல்லட்டும், அது தானே ஜனநாயகமுறை!!!! எனவே , நடிகர்களே வரவேண்டும்  என்பதல்ல என் வாதம், நடிகர்களும் வருவதில் தவறேதுமில்லை என்பதே என் வாதம் !
இனி, கமலை நாம் ஏன் எதிர்க்கிறோம் என்பதை சிந்திப்போம். 
பரவலாக கமலின் அரசியலை எதிர்ப்பவர்கள் பொருமுவது:
  1. முஸ்லிம்களை தவறாக சித்தரித்து விஸ்வரூபம் படமெடுத்த கமல் எதிர்க்கப்படவேண்டியவரே.....
  2. மத்திய அரசை விமர்சிக்காத கமல் எதிர்க்கப்படவேண்டியவரே....
  3. பணமதிப்பிழப்பை ஆதரித்த கமல் எதிர்க்கப்படவேண்டியவரே....
  4. "தூய்மை இந்தியா" திட்டத்தை ஆதரித்த கமல் எதிர்க்கப்படவேண்டியவரே....
  5. நாட்டுக்காக இதுவரை எதுவும் செய்யாத கமல் எதிர்க்கப்படவேண்டியவரே....
  6. எந்த கட்சியினரும் சேர்த்த்துக்கொள்ள தயக்கம் காட்டும் கமல் எதிர்க்கப்படவேண்டியவரே....
மேற்க்கூறியவைகள் நியாயமான ஆனால் உணர்ச்சிப்பூர்வமான காரணங்கள். என்றாலும் கமலை நாம் "இப்போது" எதிர்க்கவேண்டியதில்லை என்பதற்கு நான் நினைக்கும் காரணங்கள்:
  1. கமல் ஒரு நடிகன் என்பது ஒரு தகுதிக்குறைவல்ல, நடிகர்களும் அரசியலுக்கு வரலாம், மக்கள் ஆதரித்தால் ஆட்சிக்கு வரலாம்.
  2. கமல் விஸ்வரூபம் படம் எடுத்தது ஒரு வியாபாரியாக! தன கலையை எப்படி விற்றால் விலை கிடைக்கும் என்ற உத்தியை அறிந்ததால். இல்லை என்றால் தரமற்ற ஒரு திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக ஆக்கியிருக்கமுடியுமா??? அங்கேயும் தோற்றது முஸ்லிம்களே, கமல் அல்ல!!!
  3. கமல் ஒரு முஸ்லீம் அல்ல. எங்கோ குஜராத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதால் அனைத்துலக முஸ்லிம்களும் மோடியை வெறுக்கிறோம்  என்பதற்காக எல்லாரும் அதே காரணத்துக்காக மோடியை வெறுப்பார்கள் என்று நினைப்பது அறிவீனம். மோடியை வெறுப்பதற்கு, “முஸ்லிம்கள் வெறுக்கும் கமலுக்கு” எந்த தேவையும் இல்லை என்பது தான் எதார்த்தம்.
  4. பணமதிப்பிழப்பு, தூய்மை இந்தியா போன்ற திட்டங்கள் பெயரளவில் நல்ல திட்டங்களே, அதன் செயலாக்கமும், அதன் பின் இருந்த ஏமாற்று அரசியலுமே நம்மை போன்ற மோடி மற்றும் மத்திய அரசின் எதிர்பாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டு எதிர்க்கப்பட்டது. கமல் போன்ற மோடி எதிர்ப்பு இல்லாத ஒரு நடிகனுக்கு அவற்றை எதிர்க்க வேண்டிய அவசியமும் இல்லை, ஆட்சியாளர்களை பகைக்கவேண்டிய தேவையும் இல்லை.
  5. இனி, ஒரு சாமானியனாக நாம் நாட்டுக்காக எதையெல்லாம் செய்த்துள்ளோமோ அந்த அளவே கமலுக்கும் பொருந்தும்.
  6. மட்டுமல்லாமல் கமல் இதுவரை தம் கருத்துக்களை அனைவருக்கும் புரியும்படி எடுத்தியம்பவில்லை , எனவே அனைவரும் குழப்பத்திலேயே உள்ளனர் என்பதே நிதர்சனம், அதனாலே இவரை ஏற்றுக்கொள்ள அனைவரும் தயங்குகின்றனர்...



மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் கமல் என்னும் ஒரு சாமானிய குடிமகனுக்குரிய நிலைப்பாடுகள், அவர் அரசியல் கட்சி துவங்கி மக்கள் முன் வரும்வரை அவரை சந்தேக நிழலில் நிறுத்தி வறுத்தெடுத்து எதிர்ப்பது நமக்கும் சகிப்புத்தன்மையற்ற காவிக்கயவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லையோ என்று எண்ண தோன்றுகிறது 

முஸ்லிம்களின் பாதுகாவலர்கள் என்று நம்பிய கருணாநிதி பாஜகவுடன் சேர்ந்தார்...பின்னரும் ஏற்றுக்கொண்டோம்....



அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து இராமர் கோவில் கட்டிட கரசேவைக்கு ஆளனுப்பிய ஜெயாவை பின்னர் ஏற்றுக்கொண்டோம்.....




தமிழகத்தின் இன்றைய கேடுகெட்ட பாஜக அடிமை ஆட்சியை அகற்றிட எவ்வித இராஜதந்திரத்தையும் கையிலெடுக்காத ஸ்டாலின் மத பயங்கவாதியான H.ராஜா வை "மரியாதை" நிமித்தமாக வீடு தேடிச்சென்று சந்திப்பதை கண்டும் காணாமல் பார்த்து அமைதிகாக்கிறோம்.....

ஆனால் அரசியல் கால் பதிக்க மாநில ஆளும்கட்சியை குறிவைத்து கருத்துக்களை பதியும் கமல் மத்தியில் அசுர பலத்துடன் உள்ள ஆட்சியை "தற்போது" எதிர்க்காமல் இருப்பதையும் "யாரும் எதிரிகள் அல்ல, தம் மக்களுக்கு  நல்லது என்றால் கொள்கை உடன்பாடில்லாத மத்திய அரசுடனும் இணைந்து செயல்படுவேன்" என்று மக்களை தாஜா செய்ய கல்லெறிந்து ஆழம்பார்க்கும் கமலை விமர்சிக்கிறோம்...... முரணாக இல்லை!??? கமல் ஒரு தேர்ந்த அரசியவாதியாக மாறி வருவதையே காட்டுகிறது !!!







  
அரசியலுக்கே முழுமையாக வராத  கமலை மாங்கு மாங்கென்று எதிர்த்து, "நாங்க உனக்கு எப்போதுமே எதிரிதான் எனவே நீ அரசியலுக்கு வருவதனால் பாஜக வில் இணைந்துகொள்" என்று அந்தப்பக்கம் விரட்டிவிடுவதுபோல் உள்ளது
இறுதியாக, கமல் என்பவர் ஒரு நடிகராக, லை வியாபாரியாக இருக்கும்போது செய்தவற்றை அரசியலில் வந்தும் செய்வார் என்று நினைக்காமல்,  கமல் அரசியல் கட்சி ஆரம்பித்து , தம் கொள்கைகளை வெளிப்படையாக மக்கள் முன் வைத்து, தம் அரசியல் பாதையை துவங்கும்போது அவரின் எண்ணங்கள் நம் முன்னே தெள்ளத்தெளிவாகும்  அப்போது அவரின் கொள்கைகளையும் பாதையையும் ஆராய்ந்து அவரை எதிர்க்கவோ ஆதரிக்கவோ செய்வோம், விமர்சிப்போம்.  அதுவரை அமைதியாய் இருந்து கவனிப்போமே ???

ஒருவரின் சித்தாந்தத்தையும் கொள்கையையும் அறிந்தபின் விமர்சிப்பதும் ஏற்றுக்கொள்வதும் தான் அறிவுடைமை, பகுத்தறிவும்கூட, ஒருவேளை கமல் கட்சி துவங்கி ஃபாசிச சக்திகளோடு கைகோர்த்தால் (அரசியலில் இ(எ)துவும் நிகழும்) அப்போது நிச்சயம் எதிர்ப்போம்....
மக்கள் பணியாற்ற  வருவேன் என்கிறார்...... வரவிடுங்கள், வரும்போது பார்த்துக்கொள்வோம்!!!
இப்படிக்கு,

என்றைக்கும் கமல் என்னும் நடிகனை விரும்பாத, ஆனால் பாஜக வுக்கு ஆள் சேர்க்க நாமே காரணமாய் அமைந்துவிடக்கூடாது என்று எண்ணும் சாமானிய தமிழன் - சுபுஹான் சுல்தான்

Comments

Popular posts from this blog

திருமண துஆ

# திருமண _ துஆ   //அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன ஆதம வஹவ்வா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன நூஹிவ் வஃபாரிஸா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன இப்ராஹீம வஸாரத்த அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன மூஸா வஸஃப்ஃபூரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அய்யூப் வரஹீமா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன யூசுஃப் வசுலைஹா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன முஹம்மதின் வஹதீஜதுல் குரா , வஆயிஷத்தத் துஹ்ரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அலிய்யின் வஃபாதிமத அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம்   அல்லாஹும்மா பாரிக் லஹுமா பிர்ரிபாயி வல் பனீன் //   * பொருள்:     ***அல்லாஹ்வே   ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா ( அலை) ஆகியோருக்கு மத்தியில் இணைப்பை...

ஹஜ்ஜத்துல் விதா உரை - Prophet Muhammad's (PBUH) Farewell Sermon

ஹஜ்ஜத்துல் விதா உரை மக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா! என்று எனக்குத் தெரியாது. மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதத்தையும், இந்த (பிறை 9ஆம்) நாளையும், இந்த (மக்கா) நகரையும் புனிதமாகக் கருதுவதுபோல் உங்களில் ஒருவர் மற்றவன் உயிரையும் பொருளையும் மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள். ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவருக்கே வழங்கப்படும் அவரது உறவினருக்கு அல்ல. தந்தை தன் பிள்ளைக்கு அநியாயம் செய்ய வேண்டாம் பிள்ளையும் தன் தந்தைக்கு அநியாயம் செய்ய வேண்டாம். தந்தையின் குற்றத்திற்காகப் பிள்ளையை அல்லது பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையை தண்டிக்கப்பட மாட்டாது. அறிந்துகொள்ளுங்கள்! அறியாமைக் காலத்தின் அனைத்து செயல்களையும் நான் எனது கால்களுக்குக் கீழ் புதைத்து அழித்து விட்டேன். அறியாமைக் காலக் கொலைகளுக்குப் பழி வாங்குவதை விட்டுவிட வேண்டும். முதலாவதாக, எங்கள் குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட ரபீஆ இப்னு ஹாரிஸின் மகனுக்காகப் பழிவாங்குவதை நான் விட்டு விடுகிறேன். அறியாமைக் கால வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டது. முதலாவதாக நான் என...

இத்தா

இத்தா " இத்தா" (காத்திருத்தல்) என்பது விவாகரத்து பெற்ற மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு இஸ்லாம் அறிவுறுத்தும் பாதுகாப்பு வளையமாகும்.   விவாகரத்து பெற்ற பெண்கள் மூன்று மாதங்களும் , கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் , கர்ப்பமான பெண்கள் விவாகரத்து பெற்றாலோ , கணவனை இழந்தாலோ   குழந்தையை ஈன்றேடுக்கும்வரை மறுமணம் புரியாமல் “இத்தா” இருக்கவேண்டும் என இஸ்லாம் அறிவுறுத்துகிறது....     // திருகுரான் சூரத்துல் தலாக் 65:4 - மேலும் , உங்கள் பெண்களில் , எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால் , அப்பெண்களுக்கும் , மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும் , ´ இத்தா ´ ( வின் தவணை) மூன்று மாதங்களாகவும் , தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய ( ´ இத்தா ´ வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும் , மேலும் , எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான். //   விவாகரத்து பெற்ற பெண்ணிற்கு மூன்று மாதங்களை அறிவுறுத்துவது அவள் குழந்தை பேறு ப...