Skip to main content

கிருஸ்மஸ் வாழ்த்தும் சகிப்பின்மையும்

இஸ்லாமியர்களுக்கு முதல் முதல் அடைக்கலம் அளித்த அபிசீனிய மன்னர் நஜ்ஜாஷி அவர்கள் ......ஒரு கிருஸ்தவர்!

அல் அமீனாக விளங்கிய முகம்மதை இறைத்தூதர் என்று உறுதிசெய்த பெரியவர் வரஹா ......ஒரு கிருஸ்தவர்!

நம்மோடு உறவோடு வாழும் நல்லுள்ளம் கொண்ட கிருஸ்தவ சகோதரர்களை "அவர்களின் நம்பிக்கைப்படி" "அவர்கள்" கொண்டாடும் திருநாளில் வாழ்த்த மனமில்லையென்றாலும் புண்படுத்தாமல் இருக்கலாமே????

தஃவா என்பது குற்றம்சுமத்தி புண்படுத்துவதல்ல, அழகிய முறையில் தீய்மையை தடுத்து நன்மையை ஏவுவதாகும். அழகிய தாஃவா செய்ய முதலில் நம்மை அவர்கள் மதிக்கும் பொருட்டு நடந்திட வேண்டும்.

மாற்றுமத கொண்டாட்டங்களுக்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பதால் எந்த நஷ்டமும் ஏற்படுவதில்லை, வாழ்த்து சொல்வதால் “மட்டுமே” மதநல்லிணக்கம் வளர்ந்துவிடும் என்றும் நம்பவுமில்லை.

வாழ்த்துவதும் வாழ்த்தாமல் இருப்பதும் அவரவர் விருப்பம் சார்ந்தது. எப்படி வாழ்த்துவது கட்டாயமில்லையோ , அதுபோலவே "வாழ்த்தவே கூடாது" என்று சொல்வதிலும் அர்த்தமில்லை.

பல இமாம்கள் வாழ்த்துவதற்கு எதிராக பத்வாக்கள் வழங்கினாலும், குரானையும் ஹதீஸையும் "மட்டுமே" பின்பற்றுபவர்களை அவை கட்டுப்படுத்தாது, குரானும் ஹதீஸும் தடுக்காத ஒன்றை மனித வியாக்கியானங்கள் தடுக்கும் போது. வாழ்த்துவதென்பது மார்க்கம் சார்ந்ததன்று! உலகவிஷயம்! யாரும் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி , இபாதத்தாக, பர்ளாக, சுன்னத்தாக வாழ்த்துவதில்லை. வீணாக இதற்குள் மார்க்கத்தை புகுத்தி இஸ்லாமியர்களை பகுத்தறிவற்றவர்களாக, குறுகிய மனம்படைத்தவர்களாக காட்டவேண்டாம்.

மற்றவர்கள் நம் பெருநாட்களுக்கு வாழ்த்து சொல்லும்போது எப்படி அவர்கள், அவர்களின் மாற்றுக்கொள்கையை விட்டுவிடுவதில்லையோ, அதுபோலவே நாம் பிறருக்கு வாழ்த்து சொல்லும்போது நம் ஈமானும் சத்திய கொள்கையும் வலுவிழந்துவிடுவதில்லை! ஏனைய மதத்தவர்களைவிட இஸ்லாமியர்கள் ஈமானில் வலுவுடையவர்கள் என்பது உலகறிந்த உண்மை!

அல்லாஹ் யாரை பெறவும் இல்லை பெற்றெடுக்கப்படவும் இல்லை"  என்பது அடிப்படை இஸ்லாமிய நம்பிக்கை! அந்த நம்பிக்கை நாம் பிறரின் நம்பிக்கை சார்ந்த பண்டிகையில் அவர்களுக்கு வாழ்த்துச்சொல்வதால் தகர்ந்து நாமும் "காபிர்களாகிவிடும்" என்ற வியாக்கினத்தையே எதிர்க்கிறேன். அப்படி வாழ்த்துபவர்களை ஏளனமாகவும், இழிவாகவும் பொதுத்தளத்தில் வசைபாடும் சிறுமதியாளர்களுக்கு எதிரான பதிவே இது!

பேஸ்புக்/வாட்ஆப் இல் அக்கவுண்ட் இருந்துவிட்டாலே, மற்றவர்களின் ஈமானை குறைகூறும் அதிகாரம் கிடைத்துவிட்டது என்று எண்ணும் போராளிகளுக்கு எதிரான பதிவு இது!

நம் கொள்கையை புரிந்து கொண்ட மாற்று மத நண்பர்கள் நம் வீட்டு பெருநாள் விருந்தில் கலந்துகொண்டு நட்போடு தொடர்கிறார்கள்! அந்த புரிந்துணர்வு கூட நம்மவர்களிடம் இல்லையே!? அவர்களின் விழாக்களுக்கு விருந்துண்ண செல்ல வேண்டாம்....ஆனால் யாராவது வாழ்த்தினால், பொதுவெளியில் அதை விமர்சித்து அவர்களை சங்கடப்படுத்தாமலாவது இருக்கலாமே!!???

நம்மவர்கள்  எப்போது தான் உணர்ச்சிவசப்படுவதில் இருந்து..... சிந்தித்து பகுத்துணரும் நிலைக்கு வருவார்களோ என்று ஏக்கமாய் உள்ளது!!!!

அடுத்தவர் ஈமானை உரசிப்பார்த்து பத்வா வழங்கும் அருவருப்பை நிறுத்துங்கள்! மனங்களை அறிபவன் அல்லாஹ் ஒருவனே!!!!

அன்புடன்,
சுபுகான் சுல்தான்
(2016 ல் பேஸ்புக் ல் பதிந்ததை சிறிய மாற்றங்களுடன்...)

💐💐💐💐💐💐💐

Comments

Popular posts from this blog

திருமண துஆ

# திருமண _ துஆ   //அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன ஆதம வஹவ்வா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன நூஹிவ் வஃபாரிஸா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன இப்ராஹீம வஸாரத்த அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன மூஸா வஸஃப்ஃபூரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அய்யூப் வரஹீமா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன யூசுஃப் வசுலைஹா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன முஹம்மதின் வஹதீஜதுல் குரா , வஆயிஷத்தத் துஹ்ரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அலிய்யின் வஃபாதிமத அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம்   அல்லாஹும்மா பாரிக் லஹுமா பிர்ரிபாயி வல் பனீன் //   * பொருள்:     ***அல்லாஹ்வே   ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா ( அலை) ஆகியோருக்கு மத்தியில் இணைப்பை...

ஹஜ்ஜத்துல் விதா உரை - Prophet Muhammad's (PBUH) Farewell Sermon

ஹஜ்ஜத்துல் விதா உரை மக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா! என்று எனக்குத் தெரியாது. மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதத்தையும், இந்த (பிறை 9ஆம்) நாளையும், இந்த (மக்கா) நகரையும் புனிதமாகக் கருதுவதுபோல் உங்களில் ஒருவர் மற்றவன் உயிரையும் பொருளையும் மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள். ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவருக்கே வழங்கப்படும் அவரது உறவினருக்கு அல்ல. தந்தை தன் பிள்ளைக்கு அநியாயம் செய்ய வேண்டாம் பிள்ளையும் தன் தந்தைக்கு அநியாயம் செய்ய வேண்டாம். தந்தையின் குற்றத்திற்காகப் பிள்ளையை அல்லது பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையை தண்டிக்கப்பட மாட்டாது. அறிந்துகொள்ளுங்கள்! அறியாமைக் காலத்தின் அனைத்து செயல்களையும் நான் எனது கால்களுக்குக் கீழ் புதைத்து அழித்து விட்டேன். அறியாமைக் காலக் கொலைகளுக்குப் பழி வாங்குவதை விட்டுவிட வேண்டும். முதலாவதாக, எங்கள் குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட ரபீஆ இப்னு ஹாரிஸின் மகனுக்காகப் பழிவாங்குவதை நான் விட்டு விடுகிறேன். அறியாமைக் கால வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டது. முதலாவதாக நான் என...

இத்தா

இத்தா " இத்தா" (காத்திருத்தல்) என்பது விவாகரத்து பெற்ற மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு இஸ்லாம் அறிவுறுத்தும் பாதுகாப்பு வளையமாகும்.   விவாகரத்து பெற்ற பெண்கள் மூன்று மாதங்களும் , கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் , கர்ப்பமான பெண்கள் விவாகரத்து பெற்றாலோ , கணவனை இழந்தாலோ   குழந்தையை ஈன்றேடுக்கும்வரை மறுமணம் புரியாமல் “இத்தா” இருக்கவேண்டும் என இஸ்லாம் அறிவுறுத்துகிறது....     // திருகுரான் சூரத்துல் தலாக் 65:4 - மேலும் , உங்கள் பெண்களில் , எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால் , அப்பெண்களுக்கும் , மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும் , ´ இத்தா ´ ( வின் தவணை) மூன்று மாதங்களாகவும் , தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய ( ´ இத்தா ´ வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும் , மேலும் , எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான். //   விவாகரத்து பெற்ற பெண்ணிற்கு மூன்று மாதங்களை அறிவுறுத்துவது அவள் குழந்தை பேறு ப...