"நோன்பு பிடிக்க சக்தியில்லாதவர்களுக்கு நோன்பு கடமையில்லை... எனவே, எந்த பரிகாரமும் செய்ய மார்க்க கட்டாயமில்லை!"
"நோன்பு பிடிக்க
சக்தியில்லாதவர்களுக்கு நோன்பு கடமையில்லை... எனவே, எந்த
பரிகாரமும் செய்ய மார்க்க கட்டாயமில்லை!"
#TNTJ #ததஜ
#நோன்பு #பரிகாரம்
அஸ்ஸலாமு அலைக்கும் வ
ரஹ்மதுல்லாஹி வ பரக்கத்துஹு
அண்மையில், தமிழ்நாடு
தௌஹீத் ஜமாஅத் (ததஜ) தலைவர் சகோ. அல்தாபி அவர்களது "நோன்பு விட்டவர்கள்
பரிகாரம் செய்வது'
பற்றிய ஒரு பதில் சமூக வலைதளங்களில் சர்ச்சையாக்கப்பட்டது.
நோன்பு வைக்க
சக்தியற்றவர்களுக்கு நோன்பு கடமையில்லை, எனவே பரிகாரமும் செய்யவேண்டியதில்லை என்னும்
"புதிய" நிலைபாடு தனிப்பட்ட முறையில் என் மனதையும் உறுத்தி வந்தது. ஒரு
சில ஆலிம்களின் விளக்கங்களும் ததஜ வின் நிலைபாடு தவறு என்பதை உணர்த்துவதாகவே
எனக்கு பட்டது. என்றாலும், என்னால் முடிந்த சில தகவல்களை ஆய்வு செய்ய
முற்பட்டபோது ததஜ வின் நிலைபாடை சரி வைப்பதாகவே உள்ளது!
முதலில்....எவை மார்க்க
ஆதாரங்கள் என்ற என் நிலைபாடை எடுத்து வைத்துவிட்டு தொடர்கிறேன்....
1) வஹீ மட்டுமே மார்க்க ஆதாரம். குரான், மற்றும்
குரானுக்கு முரண்படாத சஹிஹான நபி மொழிகள்! (அதாவது, நபி (ஸல்) அவர்கள் செய்து
காட்டியது, சொன்னது, வலியுறுத்தியது, செய்வேன் என்று சொன்னது, செய்ய
கூடாது என்று தடுத்தவைகளை வெறுத்து ஒதுக்குவது என்பதுவே நபி வழி!)
2) குர்ஆனில் நேரடியாக விளங்குவதை அப்படியே
ஏற்றுக்கொள்ளவேண்டும், விளக்கமாக நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹதீஸ்
இருக்குமேயானால் அதையும் ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளவேண்டும்.
3) குரானுக்கு விளக்கம் என நபி (ஸல்) அவர்கள்
சொல்லாமல், நபித்தோழர்கள் (ரலி), அவர்களது புரிதல்களை சொல்வதாயின் அதை
மார்க்கமாக எடுத்துக்கொள்ளவேண்டிய கட்டாயமில்லை!
4) குரானிலோ ஹதீஸிலோ விளக்காத பட்சத்தில் நபி
தோழர்கள் (ரலி) எப்படி விளங்கினார்கள் என்று ஆராய்ந்து (அவர்களுக்கு நேரடியாக நபி ஸல் அவர்களுடைய தொடர்பு
இருந்துள்ளது என்பதால்) நாமும் சுயமாக சிந்தித்து செயல்படாலாமே அன்றி, அதை
அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற மார்க்க கட்டாயம் இல்லை (அவர்களும் மனிதர்களே, அவர்களது
புரிதல்களிலும் குறைபாடுகள் இருக்கலாம் என்பதால். எ. கா - தமூத்து ஹஜ் பற்றிய உமர்
ரலி அவர்களும் அவர்களுடைய மகனான இப்னு உமர் அவர்களும் வெவ்வேறாக
விளங்கியிருந்தனர்!)
*************************************************************************************************************
ததஜ வின் நிலைபாடு பற்றிய
சிறு ஆய்வு:
அல் குரான் அத்தியாயம் 2 - சூரா அல் பகரா வசனங்கள் 183-184
2:183 يٰٓـاَيُّهَا الَّذِيْنَ
اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ
قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ
2:184 اَيَّامًا مَّعْدُوْدٰتٍؕ
فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ
اُخَرَؕ وَعَلَى الَّذِيْنَ يُطِيْقُوْنَهٗ فِدْيَةٌ طَعَامُ مِسْكِيْنٍؕ فَمَنْ تَطَوَّعَ
خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهٗ ؕ وَاَنْ تَصُوْمُوْا خَيْرٌ لَّـکُمْ اِنْ كُنْتُمْ
تَعْلَمُوْنَ
இதில் வரும் **يُطِيْقُوْنَهٗ ** (யுதீகூன) என்னும் அரபி
சொல்லுக்கு "சக்தி படைத்தவர்" என்பதுவே சரியான பொருள். இந்த
அர்த்தத்தில் தான் தப்சீர் இப்னு கசீர் -லும் இடம்பெற்றுள்ளது. சகோ. பிஜெ அவர்களின்
(மூன் பப்ளிக்கேஷன்) மொழிபெயர்ப்பிலும் அவ்வாறே உள்ளது ஆனால்
ஜான் டிரஸ்ட் மொழிபெயர்ப்பில் **கடினமாகக் காண்பவர்கள்** என்று மாற்றமாக
மொழிபெயர்க்கப்படுள்ளது.
يُطِيْقُوْنَهٗ = சக்தி
பெற்றவர்கள் = WHO
HAS POWER TO / WHO ARE ABLE TO
மேலும் மலையாளம் மற்றும்
ஆங்கில மொழிபெயர்ப்புகளிலும் "சக்தி படைத்தவர்" என்னும் பொருளிலேயே
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.....இனி பல்வேறு மொழிபெயர்ப்புகளில் சிலவற்றை “அடைப்புக்குறிகள் இன்றி” இங்கே தருகிறேன்......
TAMIL
ஈமான் கொண்டோர்களே!
உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள்
மீதும் விதிக்கப்பட்டுள்ளது நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.
சில குறிப்பட்ட
நாட்களில். ஆனால் எவரேனும் நோயாளியாகவோ, அல்லது
பயணத்திலோ இருந்தால் பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும் நோன்பு நோற்பதைக் **கடினமாகக் காண்பவர்கள்** அதற்குப் பரிகாரமாக -
ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு உணவளிக்க வேண்டும்;. எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது -
ஆயினும் நீங்கள், நீங்கள் நோன்பு நோற்பதே
உங்களுக்கு நன்மையாகும்.
தப்சீர் இப்னு கசீர் - இல்
உள்ள மொழிபெயர்ப்பு – 2:183 -
184
ஈமான் கொண்டோர்களே!
உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள்
மீதும் விதிக்கப்பட்டுள்ளது நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.
இந்த கடமை, எண்ணப்படும் நாட்களில் ஆகும். உங்களில் ஒருவர் நோயாளியாக
இருந்தாலோ, பயணத்தில் இருந்தாலோ மற்ற நாட்களில் அவர்
கணக்கிட்டுக் கொள்ளவேண்டும். **அதற்குச் சக்தி பெற்றவர்கள்** ஒரு நோன்புக்காக ஓர் ஏழைக்கு
உணவளிப்பது பரிகாரமாகும். யாரேனும் கூடுதலாக நன்மை புரிந்தால் அது அவருக்கு
நன்மையாகும். நீங்கள் அறிந்தவர்களாயின், நோன்பு
நோற்பதே உங்களுக்குச் சிறந்தது ஆகும்.
நம்பிக்கை கொண்டோரே!
நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப் பட்டது
போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது . உங்களில்
நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு
நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். **அதற்க்குச் சக்தியுள்ளவர்கள்** ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரம்.
நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால்
"நோன்பு" நோற்பதே சிறந்தது.
ENGLISH
Sahih International
2: 183-184
O you who have
believed, decreed upon you is fasting as it was decreed upon those before you
that you may become righteous -
a limited number of
days. So whoever among you is ill or on a journey - then an equal number of
days. **And upon those who
are able** - a ransom of feeding a poor person . And whoever volunteers
excess - it is better for him. But to fast is best for you, if you only knew.
MALAYALAM
2:183 -
184
സത്യവിശ്വാസികളേ, നിങ്ങളുടെ മുമ്പുള്ളവരോട് കല്പിച്ചിരുന്നത് പോലെത്തന്നെ
നിങ്ങള്ക്കും നോമ്പ് നിര്ബന്ധമായി കല്പിക്കപ്പെട്ടിരിക്കുന്നു. നിങ്ങള്
ദോഷബാധയെ സൂക്ഷിക്കുവാന് വേണ്ടിയത്രെ അത്.
എണ്ണപ്പെട്ട ഏതാനും
ദിവസങ്ങളില് മാത്രം. നിങ്ങളിലാരെങ്കിലും രോഗിയാവുകയോ യാത്രയിലാവുകയോ ചെയ്താല്
മറ്റു ദിവസങ്ങളില് നിന്ന് അത്രയും എണ്ണം. **അതിന്നു സാധിക്കുന്നവര്** ഒരു പാവപ്പെട്ടവന്നുള്ള
ഭക്ഷണം പ്രായശ്ചിത്തമായി നല്കേണ്ടതാണ്. എന്നാല് ആരെങ്കിലും സ്വയം സന്നദ്ധനായി
കൂടുതല് നന്മചെയ്താല് അതവന്ന് ഗുണകരമാകുന്നു. നിങ്ങള് കാര്യം
ഗ്രഹിക്കുന്നവരാണെങ്കില് നോമ്പനുഷ്ഠിക്കുന്നതാകുന്നു നിങ്ങള്ക്ക് കൂടുതല്
ഉത്തമം.
மேலேயுள்ள
மொழிபெயர்ப்புகளில் இருந்து நான் பின்வருமாறு விளங்குகிறேன்.....
2:184 -
1) குறிப்பிட்ட சில தினங்களில் நோன்பு நோற்பது
கடமையாக்கப்பட்டுள்ளது.
2) நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் பிரயாணிகள்
வேறு நாட்களில் கணக்கிட்டு நோன்பு பிடிக்கலாம்.
3) நோன்பு பிடிக்க சக்தி பெற்றவர்கள் கூட நோன்பு
பிடிக்காமல் ஒரு ஏழைக்கு உணவளித்து பரிகாரம் செய்துகொள்ளலாம். அதிகமாகவும்
உணவளிக்கலாம்,
நோன்பு நோற்பது சிறப்பு.
4) இதனடிப்படையில் நோய் நீங்கியவர்களும் , பிரயாணத்தை
முடித்தவர்களும் வேறு நாட்களில் நோன்பிருக்காமல் பரிகாரமாக ஏழைக்கு உணவளித்து
கொள்ளலாம்.
5) கடமையான நோன்புக்கு பரிகாரம் - ஏழைக்கு
உணவளிப்பது.
*****************************************************************************************
மேலேயுள்ள இந்த வசனத்தின்
சட்டத்தை மாற்றுகிறது தொடர்ந்து வரும் வசனம்....
2:185 شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ
اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى
وَالْفُرْقَانِۚ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَـصُمْهُ ؕ وَمَنْ کَانَ
مَرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَؕ يُرِيْدُ اللّٰهُ
بِکُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ بِکُمُ الْعُسْرَ وَلِتُکْمِلُوا الْعِدَّةَ وَلِتُکَبِّرُوا
اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ وَلَعَلَّکُمْ تَشْكُرُوْنَ
ரமளான் மாதம்
எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும்
எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ பின்வரும் நாட்களில் நோற்க
வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே
தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. **குறிப்பிட்ட நாட்கள் பூர்த்தி
செய்யவும்**, உங்களுக்கு நேர்வழி
காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே.
Sahih International
The month of Ramadhan
in which was revealed the Qur'an, a guidance for the people and clear proofs of
guidance and criterion. So whoever sights the month, let him fast it; and
whoever is ill or on a journey - then an equal number of other days. Allah
intends for you ease and does not intend for you hardship and **for you to complete the period
and to glorify Allah** for that which He has guided you; and perhaps you
will be grateful.
Malayalam
ജനങ്ങള്ക്ക് മാര്ഗദര്ശനമായിക്കൊണ്ടും, നേര്വഴി കാട്ടുന്നതും സത്യവും അസത്യവും വേര്തിരിച്ചു
കാണിക്കുന്നതുമായ സുവ്യക്ത തെളിവുകളായിക്കൊണ്ടും വിശുദ്ധ ഖുര്ആന്
അവതരിപ്പിക്കപ്പെട്ട മാസമാകുന്നു റമളാന്. അതു കൊണ്ട് നിങ്ങളില് ആര് ആ
മാസത്തില് സന്നിഹിതരാണോ അവര് ആ മാസം വ്രതമനുഷ്ഠിക്കേണ്ടതാണ്. ആരെങ്കിലും
രോഗിയാവുകയോ, യാത്രയിലാവുകയോ ചെയ്താല് പകരം അത്രയും എണ്ണം, നിങ്ങള്ക്ക് ആശ്വാസം വരുത്താനാണ് അല്ലാഹു ഉദ്ദേശിക്കുന്നത്. നിങ്ങള്ക്ക്
ഞെരുക്കം ഉണ്ടാക്കാന് അവന് ഉദ്ദേശിക്കുന്നില്ല. **നിങ്ങള് ആ എണ്ണം പൂര്ത്തിയാക്കുവാനും**, നിങ്ങള്ക്ക് നേര്വഴി കാണിച്ചുതന്നതിന്റെപേരില്
അല്ലാഹുവിന്റെ മഹത്വം നിങ്ങള് പ്രകീര്ത്തിക്കുവാനും നിങ്ങള്
നന്ദിയുള്ളവരായിരിക്കുവാനും വേണ്ടിയത്രെ.
மேலேயுள்ள
மொழிபெயர்ப்புகளில் இருந்து நான் பின்வருமாறு விளங்குகிறேன்.....
2: 185 -
1) யாரெல்லாம் ரமலான் மாதத்தை
அடைகிறார்களோ அவர்களின் மீது நோன்பு கட்டாய கடமையாகிறது.
2) நோயாளிகள் மற்றும் பயணிகளும் வேறு நாட்களில் கட்டாயம் நோன்பிருக்கவேண்டும்
3) குறிப்பிட்ட நாட்களை பூர்த்திசெய்வது கட்டாயமாகும், வேறு எந்த பரிகாரமும் இதற்கு விதிக்கப்படவில்லை
4) நம் சக்திக்கு அதிகமாக அல்லாஹ் நம்மை சொதிக்கமாட்டான் என்னும் அடிப்படையில்
நோன்பு பிடிக்கவே முடியாது என்னும் நிலையில் உள்ளவர்களுக்கு நோன்பு கடமையும் இல்லை, யாருக்கும் பரிகாரம் என்பது இல்லாததால் இவர்களுக்கு
பரிகாரம் என்ற பேச்சுக்கே தேவை இல்லை.
***************************************************************************************************************************************************
இனி, வசனம்
2:185 முந்தைய வசனத்தின் 2:184
சட்டத்தை மாற்றுகிறதா என்று பார்த்தால், நேரடியாக அந்த குரான்
வசனங்களை வாசித்தாலே விளங்குகிறது பின்னால் வந்துள்ள வசனம் முந்தைய வசனத்தின்
சட்டத்தை மாற்றியுள்ளது என்று...மேலதிகமாக....தப்சீர் இப்னு கசீரிலும் அவ்வாறே
குறிப்பிடப்பட்டுள்ளது!
//(So whoever of you sights (the crescent on the first night of)
the month (of Ramadan, i.e., is present at his home), he must observe Sawm
(fasting) that month) (2:185) was revealed and this ** abrogated ** the previous Ayah (2:184). //
ABROGATED = இரத்து செய்யப்பட்டுவிட்டது
*********************************************************************************************************************************************************
மேலும், இந்த வசனம் இரத்து செய்யப்படவில்லை என்றும், நோன்பு பிடிக்க முடியாதவர்கள் ஏழைகளுக்கு உணவு
அளிக்கவேண்டும் எனவும் சஹிஹ் அல் புஹாரியில் 4505
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் ஹதீஸ் உள்ளதே!!!??
ஆம்... உள்ளது, இவ்விஷயத்தில் தொடர்ந்து வரும் சஹிஹுல் புஹாரி ஹதீஸ் 4506 இல் இப்னு உமர் (ரலி) அவர்கள் முந்தைய இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் புரிதலுக்கு (சட்டம் மாற்றப்படவில்லை) மாற்றமாக 2:184 வசனத்தின் "சட்டம் மாற்றப்பட்டது" என்பதாக அறிவிக்கிறார். இந்த இரு மாற்றமான செய்திகளும் ரசூல் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டதாக சொல்லப்படவில்லை, கவனிக்கவும்! எனவே, சஹாபாக்களின் புரிதல்கள் வெவ்வேறாக இருந்துள்ளது என்னும் வகையிலும் நேரடியாக குரான் வசனமே (சரியான மொழிபெயர்ப்பு) சரியான விளக்கத்தை
அளித்துள்ளதாலும், மேலதிகமாக ரசூல் (ஸல்)
அவர்கள் எந்த விளக்கத்தையும் அளிக்காததாலும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் மொழி அவர்களுடைய கருத்தாகவே
பார்க்கப்படவேண்டும். மேலும், அனஸ் (ரலி) அவர்கள்
நோன்புக்கு பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளித்துல்லார்கள் என்பதும் நாம் அதனை மார்க்க
கட்டளையாக எடுத்துவிடத்தக்கதாகாது! அவை சஹாபா பெருமக்களின் பேணுதலாக
இருக்கலாமேயன்றி கட்டாயமாகிவிடாது!
இமாம் இப்னு கசீர்
அவர்களும் அது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கருத்து
என்றே கூறுகிறாரே அன்றி, நபிவழி என்று
சொல்லவில்லை....
//
(And as for those who can fast with difficulty, (e.g., an old
man), they have (a choice either to fast or) to feed a Miskin (poor person)
(for every day).)
Ibn `Abbas then commented, "(This Ayah) was not abrogated,
it is for the old man and the old woman who are able to fast with difficulty,
but choose instead to feed a poor person for every day (they do not fast).''
Others reported that Sa`id bin Jubayr mentioned this from Ibn `Abbas. So the
abrogation here applies to the healthy person, who is not traveling and who has
to fast, as Allah said: (So whoever of you sights (the crescent on the
first night of) the month (of Ramadan, i.e., is present at his home), he must
observe Sawm (fasting) that month.) (2:185)
As for the old man (and woman) who cannot fast, he is allowed to
abstain from fasting and does not have to fast another day instead, because he
is not likely to improve and be able to fast other days. So he is required to
pay a Fidyah for every day missed.
**This is the opinion of
Ibn `Abbas and several others among the Salaf**
//
*************************************************************************************************************************
முடிவுரை:
எனவே, வஹீ
(குரான் மற்றும் முரண்படாத நபிவழி) மட்டுமே மார்க்க ஆதாரம் என்ற அக்கீதாவை உடைய
ததஜ வின் திருத்தப்பட்ட நிலைபாடை என் சுயசிந்தனைக்கு பின் ஏற்றுக்கொள்கிறேன்.....
"நோன்பு பிடிக்க சக்தியில்லாதவர்களுக்கு
நோன்பு கடமையில்லை... எனவே,
எந்த பரிகாரமும் செய்ய மார்க்க கட்டாயமில்லை!"
ஏழைகளுக்கு உணவு வழங்குவது
நன்மையை தரும்....அப்படி தருபவர்களுக்கு அல்லாஹ் நற்க்கூலியை வழங்க போதுமானவன். என்றாலும், நோன்பு நோற்க முடியாதவர்களுக்கு அதை மார்க்க கடமையாக கருதக்கூடாது என்பதுவே
எம் நிலைபாடு.
குறிப்பு:
இது என் நிலைபாடு, ஒவ்வொருவரும் சுயமாக சிந்தித்து செயல்படவும்.....இது விவாதத்துக்கான பதிவல்ல!
சிந்தனையை தூண்டுவதற்கான பதிவே....
இந்த நிலைபாட்டிற்கு
மாற்றமாக குரான் மற்றும் "நபிமொழியை" நேரடி ஆதாரமாக தந்தால் நிச்சயம்
மறுபரிசீலனை செய்து ஆராய்ந்து ஏற்றுக்கொள்வோம்....இன் ஷா அல்லாஹ்...
எதையும் கண்மூடி ஏற்கவும், மறுக்கவும்
செய்யாமல், ஆராய்ந்து ஏற்கவோ மறுக்கவோ செய்யும் சுயசிந்தனையுள்ள கூட்டத்தில் அல்லாஹ் நம்
அனைவரையும் சேர்த்து நல்வழிகாட்டுவானாக.....
அல்லாஹ்வே மிக அறிந்தவன், நம்
எண்ணங்களுக்கேற்ப கூலி அளிப்பவன் அவன்!
வஸ்ஸலாம்
என்றும் அன்புடன்,
சுபுஹான் சுல்தான்
Alhamdulillah...உங்கள் ஆய்வு விளக்கமாக உள்ளது. பிறருக்கு ஆதாரத்தோடு பதில் அளிக்க உதவும்
ReplyDelete