அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்கதுஹு.....
குரானாகவே வாழ்ந்த #அல்லாஹ் வின் இறுதி தூதர் #முஹம்மத் நபி
(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம், வழிகாட்டல் ஆகியவற்றை பேணுவதும், அவர்கள் எவற்றை எல்லாம் தடுத்தார்களோ, அங்கீகரிக்கவில்லையோ அவற்றை விட்டு விலகுவதும், மார்க்க விஷயங்களில் அவர்களை அடிபிழறாமல்
பின்பற்றி அவர்களை மட்டுமே முன்மாதிரியாக கொண்டு வேறு எவரையும் பின்பற்றாதவர்கள் தானே
நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தை பின்பற்றும் உண்மையான சுன்னத் வல் ஜமாஅத்தாக இருக்கமுடியும்.
குரான் சொல்கிறது,
மார்க்கம்
பரிபூரணமாக்கப்பட்டுவிட்டது என்று. நம் வாழ்க்கைக்கு தேவையான படிப்பினைகளை, அனைத்து மார்க்கவிஷயங்களை, இபாதத்துகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
நமக்கு கற்றுத் தந்துவிட்டார்கள். மார்க்கத்தில் அதற்க்கு மேல் எதை கூட்டினாலும் அது
#பித்அத்/#வழிகேடு தான் என்று அவர்கள் சொல்லியுள்ளார்கள். அப்படி இருக்கையில், பித்அத்துகளை பின்பற்றுபவர்கள் எவ்வாறு
சுன்னத் வல் ஜமாஅத்தாக இருக்கமுடியும்????
தாங்களே தீர்ப்பு (!?) வழங்கிய "அவுலியாக்களுக்கு"
#சமாதி எழுப்பி,
அதன் மீது
#தர்காஹ் கட்டி அங்கே #துவாக்கள், #நேர்ச்சைகள் உள்ளிட்ட
வணக்க வழிபாடுகளை செய்து வரும் சகோதரர்கள் தங்களை "சுன்னத் வல் ஜமாஅத்தினர்"
என்று அடையாளப்படுத்துகின்றனர். மேலும், தாங்கள் செய்வது "#சியாரத்" என்றும், தர்காஹ் எதிர்ப்பாளர்கள் #அவுலியா க்களை
அவமதிப்பதாகவும்,
சியாரத்தை
மறுப்பதாகவும் அவதூறுகளை பரப்புகின்றனர்!
எதார்த்தத்தில் இவர்கள் அறிந்து கொண்டே #உண்மை யுடன் #பொய் யை
கலக்கின்றனர்!
முதலில், யாரும் எந்த அவுலியாவையும் இழிவாக பேசவில்லை. மாறாக, "இறைவனின் நேசத்தை"
நாம் அனைவரும் பெறவேண்டும், நீங்கள் "இறைநேசர்" தான் என்று
தீர்ப்பு வழங்காதீர்கள், அவர்களும் நம்மை போன்ற "அற்ப" மனிதர்களே, அல்லாஹ் அவர்களை நேசிப்பானேயானால், அதனால் அவருக்கே நன்மை, நமக்கு எள்ளளவும் நன்மை இல்லை, யாரை அல்லாஹ் நேசிக்கிறான் என்று அல்லாஹ்
மட்டுமே சொல்ல முடியும் நாம் அல்ல....... என்றே சொல்கிறோம். மனிதனை மனிதனாக பார்க்காமல், புனிதராக பார்ப்பதால் தான் நாம் கூறும்
உண்மைகள் இவர்களுக்கு இழிவுபடுத்துவதாய் தோன்றுகிறது!
அடுத்து, சியாரத் என்பது வலியுறுத்தப்பட்ட நபிவழி என்பதை மறுப்போர் முஸ்லிமாக
இருக்க முடியாது. சியாரத் என்பது இஸ்லாம் வலியுறுத்தும் அளவிலான கட்டி எழுப்பப்படாத
கப்ரில் சென்று "மறுமையை நினைவு கூறுவதாகும்". இதுவே அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் வலியுறுத்திய சியாரத். அடக்கம் செய்யப்பட்டவர்களுக்காக நாம் துவாவும்
செய்யலாம். ஆனால்,
இன்று இவர்கள்
தர்காஹ்க்களில் செய்யும் கிரியைகள் எப்படி சியாரத்தாகும்? கீழே குரிப்பிட்டுள்ளவற்றுக்கு நபிவழியை
காட்ட தயாரா???
இவர்கள் செய்வது
சியாரத்தே அல்ல! அப்பட்டமான இணைவைப்பு!!!! சுபுஹானல்லாஹ்!!!
1)
ஒருவரை (சமுதாயத்தில்
நல்லவராக தொற்றமளிப்பவரை) அல்லாஹ்வின் நேசத்தை பெற்றவர் என்று தீர்ப்பு (வஹீ???) வழங்குவது.
2)
அவரது மரணத்துக்கு
பின்னர் அவரது கப்ரை தரைமட்டத்துக்கு மேலாக உயர்த்துவது, பின்னர் தர்காஹ் எழுப்புவது.
3)
அந்த நல்லவர்
(!?) எழுதிய கவிதைகள், பாடல்கள் ஆகியவை களங்கம் இல்லாத புனிதமானவைகள் என்று சிறப்பிப்பது.
(அல்லாஹ்வின் வார்த்தைகள் மட்டுமே களங்கம் இல்லாதவைகள்!)
4)
அந்த நல்லவருக்கு
ஆண்டு விழா எடுத்து பெருநாளாக கொண்டாடுவது, அந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தாடை அணிந்து சில இடங்களில்
கலை நிகழ்சிகளிலும் பங்கெடுக்கின்றனர்!
5)
கப்ரின் முன்னால்
நின்று நமக்காக #துவா செய்வது (துவா என்பது ஒரு வணக்கம்! அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது)
6)
பிள்ளைவரம், நோய் நிவாரணம், குடும்ப பிரச்சினைக்கு தீர்வு, மனநோய்க்கு நிவாரணம், குறைகளுக்கு பரிகாரம், தொழிலில் பறக்கத், கல்வியில் வளம்பெற, வேலைவாய்ப்பு கிடைத்திட போன்றவைகளுக்கு அல்லாஹ்விடம் முறையிடுவதைப்போல்
அவுலியாவின் சந்நிதியில் பக்திபரவசத்துடன் (!?!) முறையிடுவது
7)
தம் வேண்டுதல்களுக்காக
பழவகைகள், உணவுகள், மட்டும் ஆடுமாடுகளை அறுத்து பலியிடுவது
போன்ற நேர்ச்சைகளை செய்வது (#நேர்ச்சை என்பது ஒரு வணக்கம்! #வணக்கம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே
உரியது!)
8)
கப்ரின் மீது
சார்த்தப்படும் பூவை புனிதமாக கருதி பாதுகாப்பது.
9)
கப்ரின் முன்
எரிக்கப்படும் விளக்கின் எண்ணையை புனிதமாக கருதி குடிப்பது, தலையில் தடவுவது, கைகாலில் தடவுவது.
10)
கப்ரின் முன்
வைக்கப்படும் பழங்களை பிராசதமாக, புண்ணியமானதாக கருதி பவ்வியத்தோடு உண்பது
11)
வெளிநாட்டிற்கு
செல்வதற்கு முன்னர் அவுலியாவின் ஆசியை பெற (!?) பாஸ்போர்ட் மற்றும் பயணசீட்டை கப்ரின் முன் வைத்து (!?) எடுப்பது.
12)
பிறந்த குழந்தையை
சந்நிதானத்துக்கு (!?) கொண்டுவந்து ஆசி (!?) பெறுவது
13)
திருமண தம்பதிகளை
அழைத்து வந்து ஆசி பெறுவது.
14)
சந்தனக்குடம், கொடிக்கெட்டு, உண்டியல் போன்றவைகள்
15)
அனைத்துக்கும்
மேலாக இஸ்லாமிய கடமையான ஹஜ்ஜை நிறைவேற்ற அல்லாஹ்வின் “புனித ஹரமை” நோக்கி பயணப்படுவதற்கு
கூட அவுலியாவின் ஆசி (!?) பெறுவதும், திரும்பி வரும்போது நேராக சந்நிதானத்தில் வந்து "ஹஜ்ஜை
நிறைவேற்றிட அருள் புரிந்த" (அச்தஹ்பிர் அல்லாஹ்) அவுலியாவுக்கு நன்றி செலுத்துவது.
இவை எல்லாம் தான் சியாரத்தா????? இப்படி தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
சியாரத்தை சொன்னார்களா???? யாரை ஏமாற்றுகிறீர்கள்???
இப்படி செய்வதை எதிர்த்தால் அவன் வெறுக்கப் படவேண்டியவனா????
சிந்தியுங்கள்...அல்லாஹ்வுக்கு பயப்படுங்கள்....
தர்காஹ் அனாசாரத்தை கைவிடுங்கள்! சுன்னத்தை உண்மையான வழியில்
பின்பற்றுங்கள் . இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்! வயிறுவளர்க்கும் மார்க்க அறிஞர்களிடம்
ஏமாந்துவிடாதீர்கள். வழிகேட்டில் உங்களை தள்ளிவிடுவார்! தூய இஸ்லாத்தில் முழுமையாக
நுழையுங்கள்.
அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே! அவனை மட்டுமே வணங்குங்கள்!
அல்லாஹ் போதுமானவன்.
ஸலாமுடன்....
என்று அன்பு சகோதரன்,
சுபுஹான் சுல்தான்
Comments
Post a Comment