Skip to main content

சஹாபாக்களை "பின்பற்றுவது" மார்க்க கட்டாயமா?

சஹாபாக்களை "பின்பற்றுவது" மார்க்க கட்டாயமா?
 
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்கத்துஹு...
 
 
 
அன்பு சகோதரர்களே....
 
அல்லாஹ்வின் வேதத்தையும் ரசூல்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களையும் பற்றிப்பிடித்துகொள்ளும்வரை நாம் வழிதவற மாட்டோம் என்பதில் ஒவ்வொரு முஸ்லிமும் ஈமான் கொண்டுள்ளோம்.
 
குரான் மட்டும்போதும், ஹதீஸ்கள் தேவை இல்லை என்போர் நிச்சயம் வழிகேட்டிலேயே சென்று சேருவர்! ஏனென்றால், ரசூல்(ஸல்) அவர்கள் குரானாகவே வாழ்ந்தார், குரானை சரியாக விளங்கிக்கொள்ள ரசூல்(ஸல்) அவர்களின் வழிமுறை இன்றியமையாதது! எனவே குரானும், நபிவழியும் வஹியே!!
 
எப்படி குரான் என்னும் அல்லாஹ்வின் வேதம் ரசூல்(ஸல்) அவர்களின் வழியாக உலகில் இறக்கப்பட்டு சகாபாக்கள் வழியே நமக்கு கிடைக்கப்பெற்றதோ, அதுபோலவே நபி வழியும் கிடைக்கபெற்றுள்ளன! இரண்டையும் பின்பற்றத்தக்கது என்று நம்பாதவன் முஸ்லிமாக இருக்கமுடியாது!
 
குரான் மட்டும் போதும், ஹதீஸ்கள் தேவை இல்லை என்று சொல்லும் வழிகேடர்கள் ஒருபுறம், குரான் ஹதீஸ் மட்டும் போதாது....முன்னோர்களின் தரீக்காக்களும் வேண்டும் நேர்வழிபெற என்று நம்பி இஸ்லாமிய அடிப்படைகளிலேயே குழம்பியுள்ள கூட்டம் மறுபுறம்...இதற்கிடையில் சஹாபாக்கள் எப்படி மார்க்கத்தை விளங்கியிருந்தனரோ, அப்படி தான் நாமும் விளங்கவேண்டும் என்று இஸ்லாம் சொல்லாத வழிமுறையை செயல்படுத்தும் வேறொரு கூட்டமும் நிலவில் உள்ளது. சஹாபாக்களும் மனிதர்களே....அவர்களை மதிக்கவேண்டும், அவர்களில் ஏற்றத்தாழ்வு காட்ட கூடாது, அவர்களின் தியாகங்களில் நாம் பாடம் கற்றுக்கொள்ளலாமே அல்லாமல், அவர்களை பின்பற்றவா இஸ்லாம் நமக்கு சொல்லியுள்ளது??? சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
 
​எல்லா நபிமொழிகளும் நபிவழிகளும் சஹாபாக்கள் மூலமாகவே நமக்கு கிடைக்கபெற்றுள்ளது. யாரும் மாற்றுக்கருத்து கொள்ள இயலாது. சஹாபாக்கள் நபி(ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள், என்ன செய்தார்கள், எவற்றையெல்லாம் அங்கீகரித்தார்கள், எவற்றையெல்லாம் தடுத்தார்கள், எவற்றை எல்லாம் பற்றி மவுனம் காத்து மக்களே முடிவு செய்துகொள்ள விட்டார்கள் போன்ற செய்திகளை சஹாபாக்கள் அடுத்த தலைமுறையினருக்கு பகிர்ந்தனர், தாபிஈன்கள், தபாதாபீஈன்கள் வழி நமக்கு கிடைத்துள்ளன இந்த அரும் தகவல்கள். அவற்றை ஆராய்ந்து குரானுக்கு முரண்படமால் இருந்தால் அதை நாம் பின்பற்றவேண்டும்...
 
அல்லாமல், ரசூல்(ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்ததால் மட்டுமே...சஹாபாக்கள் என்னவெல்லாம் செய்தார்களோ அவற்றை போலவே நாமும் செய்யவேண்டும் என்பது மார்க்க கட்டளையல்ல! அவர்களின் புரிதல்கள் மனிதர்கள் என்ற அடிப்படையில் பல வேளைகளில் தவறாக கூட இருந்துள்ளது என்பதை வரலாறு நமக்கு சொல்லி காட்டுகிறது. ஒரு எடுத்துக்காட்டு - "தமத்ஊ ஹஜ்" பற்றிய கருத்து நபிவழிக்கு மாற்றமாக உமர் (ரலி) மற்றும் உஸ்மான் (ரலி) அவர்களுக்கும் கூட இருந்துள்ளது. சரியான புரிதல் இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு இருந்துள்ளது. சஹாபாக்களுக்கு கூட ஹதீஸ்களை விளங்குவதில் தவறுகள் ஏற்பட்டிருக்கலாம் என்பது நிதர்சனமான உண்மை! எனவே புரிதல்கள் விஷயத்தில் சஹாபாக்களை பின்பற்றவேண்டும் என்பது அர்த்தமற்ற வாதம்!
 
இல்லை சஹாபாக்கள் மூலம் நமக்கு கிடைக்கபெற்ற செய்திகளை நம்பும்போது, அவர்களின் புரிதல்களையும் பின்பற்றித்தான் ஆகவேண்டும் என்று சொன்னால், தாபிஈன்கள், தபாதாபீஈன்கள் ஆகியோரையும் நாம் பின்பற்றவேண்டிவரும். ரசூல்(ஸல்) அவர்களுடன் வாழ்ந்த சஹாபாக்களை ஓட்டிவந்த தாபிஈன்கள் சஹாபாக்கள் எப்படி ஹதீஸ்களை விளங்கியிருந்தனர் என்று நேரடியாக அறிந்திருந்தனர். அதுபோலவே, தாபிஈன்கள் சஹாபாக்களை பின்பற்றி வந்திருந்தால், அவர்களுடன் அடுத்து தொடர்புடைய தபாதாபீஈன்கள் கூட தாபிஈன்களை அப்படியே பின்பற்றியிருப்பர். அப்படியானால் சஹாபாக்களுடன் தாபிஈன்கள், தபாதாபீஈன்கள் ஆகியோரையும் பின்பற்றவேண்டும், அவர்கள் சொன்ன வியாக்கியானங்களையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்வது அறிவுடைமையாகுமா???
 
செய்தியை ஏற்றுக்கொள்வோம், அவை ரசூல்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள்! ஆனால், ரசூல்(ஸல்) அவர்களுடையது அல்லாத வியாக்கியானங்களை பின்பற்றவேண்டியதில்லை! அப்படி நமக்கு கட்டளையும் இல்லை! அல்லாஹ் ஒவ்வொரு முஸ்லிமையும் சிந்தித்து... ஆராய்ந்து மார்க்கத்தை எற்றுக்கொளவும் பின்பற்றவுமே ஏவியுள்ளான்! பகுத்தறிவை போற்றும் மார்க்கம் இஸ்லாம்!
 
சிந்தித்தும் தெளிவில்லாதவர்கள்...."தற்காலத்தில்" வாழும் அறிஞர்களின் உதவியை பெற்று, புரியாததை கேட்டு விளங்கிகொள்ளலாமே அல்லது முடிவு செய்யலாமே அல்லாமல், முன்னோர்களின் கருத்துக்களை "தக்லீது" செய்ய கூடாது, அது சஹாபாக்கள் ஆனாலும்!!!
 
அல்லாஹ்வின் பாதையில் மார்க்கத்தை உயர்த்திய சத்திய சஹாபாக்கள், தாபிஈன்கள், தபாதாபீஈன்கள், இமாம்கள், மற்றும் இறைநேசர்களாகிய நம்மனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக.....
 
வஸ்ஸலாம்
 
என்றும் அன்பு சகோதரன்,
 
சுபுகான் சுல்தான்

Comments

Popular posts from this blog

திருமண துஆ

# திருமண _ துஆ   //அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன ஆதம வஹவ்வா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன நூஹிவ் வஃபாரிஸா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன இப்ராஹீம வஸாரத்த அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன மூஸா வஸஃப்ஃபூரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அய்யூப் வரஹீமா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன யூசுஃப் வசுலைஹா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன முஹம்மதின் வஹதீஜதுல் குரா , வஆயிஷத்தத் துஹ்ரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அலிய்யின் வஃபாதிமத அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம்   அல்லாஹும்மா பாரிக் லஹுமா பிர்ரிபாயி வல் பனீன் //   * பொருள்:     ***அல்லாஹ்வே   ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா ( அலை) ஆகியோருக்கு மத்தியில் இணைப்பை...

ஹஜ்ஜத்துல் விதா உரை - Prophet Muhammad's (PBUH) Farewell Sermon

ஹஜ்ஜத்துல் விதா உரை மக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா! என்று எனக்குத் தெரியாது. மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதத்தையும், இந்த (பிறை 9ஆம்) நாளையும், இந்த (மக்கா) நகரையும் புனிதமாகக் கருதுவதுபோல் உங்களில் ஒருவர் மற்றவன் உயிரையும் பொருளையும் மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள். ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவருக்கே வழங்கப்படும் அவரது உறவினருக்கு அல்ல. தந்தை தன் பிள்ளைக்கு அநியாயம் செய்ய வேண்டாம் பிள்ளையும் தன் தந்தைக்கு அநியாயம் செய்ய வேண்டாம். தந்தையின் குற்றத்திற்காகப் பிள்ளையை அல்லது பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையை தண்டிக்கப்பட மாட்டாது. அறிந்துகொள்ளுங்கள்! அறியாமைக் காலத்தின் அனைத்து செயல்களையும் நான் எனது கால்களுக்குக் கீழ் புதைத்து அழித்து விட்டேன். அறியாமைக் காலக் கொலைகளுக்குப் பழி வாங்குவதை விட்டுவிட வேண்டும். முதலாவதாக, எங்கள் குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட ரபீஆ இப்னு ஹாரிஸின் மகனுக்காகப் பழிவாங்குவதை நான் விட்டு விடுகிறேன். அறியாமைக் கால வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டது. முதலாவதாக நான் என...

தீபாவளி வாழ்த்துக்கள்! ​ஒரு பார்வை...

தீபாவளி வாழ்த்துக்கள்! ​ ஒரு பார்வை .....       இந்திய நாடு மதசார்பற்ற ஜனநாயக நாடு. இங்கே வாழும் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவதும் ஒதுக்கப்படுவதும் உலகறிந்ததே....   அதற்க்கு ஒரு காரணம் சிலபல ​ முஸ்லிம்களிடம் இல்லாத சகிப்புத்தன்மை, நல்லிணக்கம், நட்புணர்வு போன்றவைகளே...   முஸ்லிம்களுக்கு இரு திருவிழாக்கள் மட்டுமே உள்ளன, மார்க்க அடிப்படையில். நோன்புப்பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப்பெருநாள்! இவை தவிர கந்தூரி விழாக்கள், மிலாது விழாக்கள், தர்காஹ்க்களில் நடைபெறும் ஆண்டுவிழாக்கள், நல்லடியார்கள் என்போருக்கான நினைவு பெருநாட்கள் அனைத்துமே மார்க்க அடிப்படையில் வழிகேடுகளே!!! இப்படி நம்புவதும் அதன் அடிப்படையில் நடப்பதும் ஈமான் கொண்ட முஸ்லிம்களின் மீது கடமையாகும்! ஏனென்றால் மார்க்கம் ​பரிபூர்ணமாக்கப்பட்டுவிட்டது!​ ​ ​​ திருகுரான் 5:3 . ....இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்......   அதுபோலவே, பிற சகோதரர் மதத்தவர்களின் மத அடிப்படையிலான விழாக்களையோ, பண்டிகைகளை​யோ நாமும் கொண்டாட...