எதனால் காசாவுக்கு ஆதரவு? இஸ்ரேலின் மீது கோபம்/வெறுப்பு? சிறிய விளக்கம்...
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்களின்மீதும் நம் அனைவரின்மீதும் உண்டாவதாக...
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்களின்மீதும் நம் அனைவரின்மீதும் உண்டாவதாக...
தங்களுக்கு வந்தால் மட்டுமே கவலைப்படுவோம், மற்றவர்களுக்கு வந்தால் "நடுநிலை" வேஷம் போடுவோம் என்பதுபோல், காசா மக்கள் சாவதற்கு ஹமாஸ் தானே காரணம், இவர்கள் ஏன் ஆயுதங்களை விட்டு இஸ்ரேலுக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர்? "போர் நிறுத்தம் செய்யவேண்டுமானால் காசாவாலிருந்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளை அகற்றி காசா மக்களுக்கு சுதந்திரமாக நடமாட வழிவகை செய்யவேண்டும், இது நடக்காமல் எங்கள் உரிமை மீட்பு போராட்டத்தை விடமாட்டோம், தொடர்ந்து எங்களில் கடைசி பாலஸ்தீனி உயிர்விடும்வரை செறுத்து நின்று போராடுவோம்" என்று நிபந்தனை வைப்பதால் அப்பாவி மக்கள் சாகின்றனரே, அது தவறுதானே??? - என்று கேள்வி கேட்கும் நடுநிலையாளர்களே (!?) உங்களுக்கு சிறு விளக்கம்! காசாவை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...
1■
1967 முதல் காசா இஸ்ரேலின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. அதாவது, இஸ்ரேல் வலுக்கட்டாயமாக காசாவை ஆக்கிரமத்துள்ளது.
2■
காசாவின் மூன்று புற எல்லைகள் இஸ்ரேலோடு, அவர்கள் அதை மூடியுள்ளனர்! காசாவின் மற்றொரு எல்லை எகிப்து நாட்டை ஒட்டியுள்ளது. இஸ்ரேலின் ஆசைக்கிணங்க அந்த எல்லையையும் எகிப்து அரசு அடைத்து காசாவை உலகின் மிகப்பெரிய திறந்தவெளி சிறைச்சாலை ஆக்கியுள்ளது!
3■
காசாவில் விமான நிலையம் இல்லை, கப்பல் துறைமுகங்கள் இல்லை, ரெயில் நிலையங்களும் இல்லை. இந்த போக்குவரத்து வசதிகள் எதுவும் காசவினருக்கு அனுமதிக்கவில்லை இஸ்ரேல்.
4■
காசாவினர் வேறு நாடுகளுக்கு போக முடியாது, கடவுசீட்டு (PASSPORT) இல்லை! எங்கு திரும்பினாலும் இஸ்ரேல் காவல்நிலையங்கள், தடுப்புகள்! மட்டுமல்ல, இஸ்ரேலின் அனுமதியில்லாமலோ, இஸ்ரேலின் விருப்பம் இல்லாமலோ, எவரும் காசாவுக்குள் நுழைந்துவிடமுடியாது!!!
5■
காசாவினுள் வரும் பால் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவுபொருட்களும் இஸ்ரேலின் அனுமதியுடன் அவர்கள் நிறுவியுள்ள காவல் தடுப்புகளை தாண்டியே வரமுடியும் . அவற்றுக்கும் மிக அதிக வரியை இஸ்ரேல் விதிக்கின்றனர்!
6■
காசாவின் உள்ளேயும் மிக அதிக அளவில் இஸ்ரேலின் காவல் தடுப்புகள் நிறுவப்பட்டு காசாவின் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மிக அதிக துன்பங்களையும் துயரங்களையும் எல்லா வகையிலும் விளைவிக்கின்றனர் இஸ்ரேலிய பாதுகாப்பு(!?) படையினர்!
7■
ஐநா சபையின் பாதுகாப்பு மன்றம் பலமுறை கேட்டுக்கொண்டும் (அல்லது கேட்டுக்கொள்வதுபோல் நடித்தும்) காசாவினுள் இயங்கும் காவல் தடுப்புகளை களைய இஸ்ரேல் தயாராகவில்லை! ஐம்பதுக்கும் அதிகமான ஐநா தீர்மானங்கள் இதுவரை பிறப்பித்தும், இஸ்ரேல் அவற்றுக்கு எந்த மதிப்பையும் அளிக்காமல், தூசி போல் தட்டிவிட்டுள்ளனர்! இதற்க்கெல்லாம் கூட்டாளி....உலக போலிஸ் என்று கருதும் அமெரிக்க அராஜக அரசு!
8■
காசாவினுள் கொண்டு வரும் உணவு பொருட்களையும், அத்தியாவசிய மருந்துகளையும் கூட இஸ்ரேல் வேண்டுமென்றே தாமதப்படுத்தும் அல்லது அனுமதிப்பதில்லை! குடிதண்ணீரும் மின்சாரமும் கூட இஸ்ரேலின் கட்டுபாட்டில் தான்! காசாவினுள் கிடைக்கும் தொண்ணூறு சதவிகித நீர் புழங்குவதற்கு ஏற்றதல்ல! இருந்தாலும் அந்த மக்கள் அதை அனுபவிக்கின்றனர்! மேலும், அதிக பட்சமாக ஒருநாளைக்கு 8 மணிநேரம் மட்டுமே மின்சாரமும் வழங்கப்படுகிறது! மீதிவேளைகளில் காசாவினர் கற்காலத்தில் வாழவேண்டும்! இருந்த ஒரே ஒரு மின் உற்பத்தி நிலையமும் கடந்த நாட்களில் இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதலால் அழிக்கப்பட்டுள்ளது. மின்வசதி குறைவால் இறந்த தாயின் வயிற்றிலிருந்து பிறந்த அதிசய (சுபுஹானல்லாஹ்) குழந்தையும் சிக்சிகிழ்சை தடைபட்டதால் வீர மரணம் அடைந்தது என்பதை நினைவுபடுத்துகிறேன்...
9■
காசாவில் நல்ல மருத்துவமனைகள் இல்லை! காயமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பவர்களை கூட இஸ்ரேல் காவல் தடுப்புகளில் அலைகழித்து திரும்ப அனுப்புவர்! வெளியில் சென்று மருத்துவம் பெற அனுமதி மறுப்பு! ஒன்றே சாவ வேண்டும், அல்லது வாழ்நாள் முழுவதும் குறைபட்டு வாழவேண்டும்...
10■
ஒரு காலத்தில் வந்தேறிகளான இஸ்ரேலிகளை வாழவைத்த இந்த ஜனம் இன்று நிர்மூலமாக்கப்பட்டு, தம் சொத்துக்களை , நிலபுலன்களை இழந்து, கேட்ப்பாரற்று அனாதைகள் போல, பிச்சைக்காரர்களை போல வாழ்கின்றனர் இஸ்ரேல் ஆக்கிரமிப்பில்! நாட்டில் அகதிகளைப்போல் வாழ்கின்றனர், பலர் சிறைகளிலும்!!!
11■ நல்ல பள்ளிக்கூடங்கள் இல்லை, நல்ல கல்லூரிகள் இல்லை. படிக்கும் வயதில் சிறுவர்கள் கூலி வேலைக்கு தள்ளப்படுகின்றனர்! ஒரு சிறந்த பல்கலைக்கழகம் காசாவில் இருந்தது, அதையும் கழிந்தவாரம் குண்டிட்டு அழித்துள்ளனர் பயங்கராவாத சயோனிச படை!
12■
கடந்த 13 வருடங்களில் மட்டும் 1700 க்கும் அதிகமான (இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு! உண்மை நிலவரம் இதற்க்கு மேல்!) பாலஸ்தீன் பிஞ்சுகளை இஸ்ரேல் பயங்கரவாத இராணுவம் கொன்று குவித்துள்ளனர்! அவற்றிக்கேல்லாம் உப்புக்கு சப்பில்லாத நொண்டி சாக்குகளையும் சொல்லிவருகின்றனர்!இன அழிப்பிற்கு காரணங்களையும் கூறி செய்கின்றனர்! உலகமமும் அவற்றை கேட்டு மவுனமாகிறது!
நம் அன்பு செல்ல குழந்தைக்கு ஒரு காய்ச்சல் என்றால் மனம் துடிக்கும் நாம், அநியாயமாக கொல்லப்படும் பச்சிளம் குழந்தைகளின் தாய் தந்தையரின் மன நிலையை சற்று சிந்தித்து பார்க்க வேண்டாமா??? இப்போது தம்முடன் இருக்கும் செல்ல குழந்தை விடியும் பொது உயிரோடு இருக்குமா என்ற பயம் ஒவ்வொரு பெற்றோரின் மனத்திலும் இருக்கும் அந்த கொடுமையை நினைத்தாலே கண்கள் குளமாகிறது!!!
நாதியில்லாத அங்குள்ள இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் ஒரே ஆயுதமான ஈமானின் பலத்தைக்கொண்டு ஒரு கல்லை எடுத்து எறிந்தாலும் அவர்கள் "தீவிரவாதிகள்" என்ற முத்திரை குத்தப்பட்டு இஸ்ரேல் இராணுவத்தால் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்! அல்லது, தாங்கள் ஆளும் நாட்டின்மீது உலக நாடுகளின் ஒத்தாசையுடன் இஸ்ரேல் அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கும் பயங்கரவாதத்திற்கு எதிராகவும், தங்கள் கண்முன்னே தங்கள் குழந்தைகளும் பெண்களும் அனுபவிக்கும் துன்பத்தை பொறுத்து கொள்ளாமலும் தங்களிடம் இருக்கும் சக்தி குறைந்த ராக்கெட்டுகளால் இஸ்ரேல் இராணுவ முகாம்களை நோக்கி செலுத்துகின்றனர் காசாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் ஆட்சியாளர்கள். தங்கள் நாட்டை காக்க, தங்கள் உரிமைகளை பெற்றிட, சுதந்திர காற்றை சுவாசிக்க, தங்கள் மக்கள் அனுபவித்துவரும் இந்த நெடிய கொடுமையை களைய இதை கூட ஒரு அரசு செய்யாதா??? தங்களை நம்பியுள்ள மக்களுக்கு இதைவிட எந்த விதத்தில் கைமாறு முடியும்?
போராடி செத்துப்போக துணிந்துவிட்ட ஒரு கூட்டத்தை தொடர்ந்து "தீவிரவாதிகள்" என்று முத்திரை குத்தி இன்பம் பெரும் "நடுநிலைவியாதிகள்" ஒரே ஒரு நாள் காசாவில் சென்று வாழ்ந்துகாட்ட தயாரா??? , தம் வாழ்நாளிலேயே ஒவ்வொரு இஸ்ரேலியனும் புழுத்து சாவதை காண விரும்புவான், தன்னை அறியாமலையே ....அல்லது நாமளே ஒரு அணுகுண்டு தயாரித்து இஸ்ரேலை உலக வரைபடத்தில் இருந்து மாய்த்துவிடவேண்டும் என்று எண்ணுவான்.....மனிதம் உடையவானாக இருந்தால்......
இந்தியாவில் வெள்ளையனுக்கு எதிராக படை திரட்டி போராடிய சுபாஷ் சந்திர போசை நாம் தீவிரவாதி என்று அழைப்பதில்லை! இதுபோல் உலகமெங்கும் சுதந்திர தாகத்துக்காக போராடியவர்கள் எவரையும் நாம் இன்று தீவிரவாதியாக அழைப்பதில்லை. ஆனால் இன அழிப்பை எதிர்த்து, வாழ்வுரிமைக்காக இந்த நூற்றாண்டிலும் ஒரு நாடு போராடுகிறது, வேடிக்கை மட்டும் பார்க்கும் நாம், நாளை நாம் உயிரோடு இருப்போமா, நம் பிள்ளைகள் அடுத்த நிமிடம் உயிரோடு இருக்குமா என்ற உணர்ச்சியால் போராடுபவர்களை "தீவிரவாதி" என்று அழைத்து கேவலப்படுத்துகிறோம்...வரலாறு நம்மை மன்னிக்குமா???
காசாவினருக்கு எதிராக...ஒட்டுமொத்த பாலஸ்தீனுக்கு எதிராக இஸ்ரேல் என்னும் ஹராம்-பிறந்த பயங்கரவாத அரசு செய்யும் ஈனத்தனமான அட்டூழியங்களுக்கு பதில் கிடைக்கும் நாள் வரத்தான் செய்யும்......வெகு விரைவில்...இன் ஷா அல்லாஹ்....நம்பிக்கையுடனும், பிரார்த்தனைகளுடனும் காத்திருக்கிறோம்.....
அன்புடன் சுபுகான் சுல்தான்
#GazaUnderAttack
#ISupportGaza
#FreePalestine
#AllahCurseIsrael
Comments
Post a Comment