Skip to main content

தேர்தல்களும் இஸ்லாமிய இயக்கமும் - ஒரு ​ப்ளாஷ்பாக்


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்கத்துஹு ....


தேர்தல்களும் இஸ்லாமிய இயக்கமும் - ஒரு  ​ப்ளாஷ்பாக்





 
(நான் அறிந்தவற்றை பகிர்கிறேன்; இதில் தவறுகள் இருக்குமேயானால் அல்லாஹ் பொறுத்துக்கொள்வானாக. சுட்டிக்காட்டும் போது பரிசீலித்து திருத்திக்கொள்கிறேன்...)
 
 
2006 சட்டமன்ற தேர்தல்!
 
 
2006 ஜனவரி மாதம் கும்பகோணத்தில் ததஜ இடஒதுக்கீடுக்கான போராட்டம் நடத்தியது. தொடர்ந்து, ஆளும் கட்சியான அதிமுக ஆணையம் அமைத்ததால்
2006 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ததஜ ஆதரவளித்தது!
அப்போது, ஜெயலலிதா கரசேவைக்கு ஆதரவானவரா, கரசேவைக்கு ஆள் அனுப்பினாரா இல்லையா, ஜெயா ஹிந்துத்துவா கொள்கையாலரா என்றெல்லாம் ஜெயாவும் பேசவே இல்லை! அவரை ஆதரித்த ததஜ வும் அவை எல்லாம் "பொய்யர்" கருணாநிதியின் இட்டுகட்டுதல்கள் என்றும் பேசவே இல்லை, அது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!... "பம்பரமாய் சுழன்று சுழன்று" வேலை செய்தும் அதிமுக வெற்றிபெறவில்லை! திமுக ஆட்சி வந்தது!
 
 
தேர்தலுக்கு பின்னர்.......
 
 
திமுக ஜெயா அமைத்த ஆணையத்தை "கலைத்துவிட்டு" நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் ஆணையம் அமைத்து அதன் பரிந்துரை படி முஸ்லிம்களுக்கு 3.5% இடஒதுக்கீடு வழங்கியது! ஆனால் இன்று ததஜ வினர் பலர் ஜெயா அமைத்த ஆணையத்தின் பரிந்துரையை தான் திமுக செயல்படுத்தியது என்று உண்மைக்கு புறம்பாக சொல்கின்றனர்! (அதிமுக ஆதரவு நிலைபாடு சமையத்தில் அவ்வாறு கூறினர், இப்போது மீண்டும் மாற்றியுள்ளனரா என்று தெரியவில்லை)
 
 
2011 சட்டமன்ற தேர்தல்!
 
 
முஸ்லிம்களுக்கு 2006 இல் அமைந்த திமுக அரசு தான் இட ஒதுக்கீடு அளித்தது என்பதற்காக 2011 தேர்தலில் ததஜ திமுகவுக்கு நன்றி விசுவாசம் காட்ட ஆதரவு அளித்தது. அதுவரை திமுக வில் இருந்த மமக அதிமுக அணியில் தாவியது, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடை அதிகப்படுத்தி தருவதாய் ஜெயா கூறியதால்...
திமுகவுக்கு ஆதரவு அளித்த் ததஜ அன்று வசதியாக மறந்தது - நம் உடன்பிறந்தவர்கள் கோவையில் துண்டாடப்பட்டபோது கைகட்டி வேடிக்கை பார்த்ததையும், குஜராத்தில் கொலைகாரன் மோடியின் கூலிப்படையினர் முஸ்லிம்களுக்கு எதிராக கோரதாண்டவம் ஆடியபோது மத்திய அரசில் பங்குபெற்றிருந்த திமுக கையாலாகத்தனத்தை வெளிப்படுத்தி பதவி ஆசையில் அமைதிகாத்தனர் என்பதனையும்....
"வழக்கம்போல" ததஜ "பம்பரமாய் சுழன்று சுழன்று" திமுகவுக்கு வேலை பார்த்தனர்! தேர்தலில் திமுக ஊத்திகிச்சு! அதிமுக அபார வெற்றியும் பெற்றது!!
 
 
தேர்தலுக்கு பின்னர்.......
 
 
2011 ல் ஆட்சிக்கு வந்தது முதல் இடஒதுக்கீடு அதிகரித்து அளிக்க முன்வந்தாரா ஜெயா??? இல்லவே இல்லை! மமக கோரிக்கை வைத்தது. மமக சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களது 14/06/2013 தேதியிட்ட இடஒதுக்கீடை அதிகரித்து தர வேண்டிய கோரிக்கை மனுவை அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் (BC. MBC & MINORITIES WELFARE DEPARTMENT) ​துணை செயலாளர் (DEPUTY SECRETARY),
தமிழ்நாடு பிர்ப்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் (TAMILNADU BACKWARD CLASSES COMMISSION) உறுப்பினர் செயலருக்கு (MEMBER SECRETARY) அனுப்பப்பட்டுள்ளதாக அரசின் துணை செயலாளரே (DEPUTY SECRETARY), ஒப்புதல் கடிதம் (ACKNOWLEDGEMENT LETTER) கோரிக்கையாலருக்கு (REQUESTER - MMK LEADER) அளித்துள்ளார்! (பார்க்க: இந்த பதிவின் முதல் கருத்து படத்தை)
 



 
 

ஒரு கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினரின் (MLA) கோரிக்கை மனுவை ஆணையத்துக்கு அனுப்புவது பரிசீலித்து (EXAMINE) பரிந்துரை (RECOMMENDATION) வழங்குவதற்க்காகவே அன்றி கிழித்து குப்பையில் போடுவதற்காக தான் என்று யாராவது நினைத்தாலோ, சொன்னாலோ, அவர்கள் ஒரு ஆணையத்தின் செயல்பாடுகளை அறியாதவர்காலகவே இருக்கமுடியும்!

ஆனால் ஆணையம் என்ன பரிந்துரை (RECOMMENDATION) அளித்தது என்று ஜெயா வெளிப்படுத்த் வில்லை! மாறாக, இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தினால் மற்ற சமுதாயத்தவர்களும் கேட்ப்பார்கள் போன்ற வெத்து வாதங்களை வைத்து இஸ்லாமியர்களுக்கு துரோகம் இழைத்தார். அதனை சொல்லி மமக வும் கூட்டணியை விட்டு வெளியேறியது!
 
 
2014 நாடாளுமன்ற தேர்தல்!
 
 
இப்படி இருக்கவே... நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது! ததஜ சமுதாய நலனை கருத்தில் கொண்டு இடஒதுக்கீடை அதிகரித்து தரும் கோரிக்கையை முன்வைத்து ஜனவரி 28 அன்று சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்தது! இதற்கிடையில்.....மமக தான்தோன்றித்தனமாக அவர்களே கூறிக்கொண்டு திரிந்த "ஒற்றுமை கோஷத்தை" காற்றில் பறக்கவிட்டுவிட்டு தன்னிச்சையாக திமுக கூட்டணி நிலைப்பாடு எடுத்து முஸ்லிம்களுக்கு அதிர்ச்சியளித்தது! இயக்க வித்தியாசம் கட்சி பாகுபாடு இல்லாமல் ஒட்டுமொத்த சமுதாயமும் ததஜ போராட்டத்தில் பங்களித்தனர்!. எழுச்சிமிக்க போராட்டத்தின் போது "முஸ்லிம்களுக்கு இனி வாக்குறுதிகள் தேவை இல்லை, மாநில அரசோ. மத்திய அரசோ இடஒதுக்கீடு அளித்து ஆணை பிறப்பிக்கவேண்டும். இடஒதுக்கீடு தந்தால் அதிமுகவுக்கு ஓட்டு, இல்லையேல் வேட்டு! அதுபோல் இடஒதுக்கீடு தந்தால் தோற்கும் என்று தெரிந்தாலும் காங்கிரசுக்கு சமுதாயம் ஒட்டு அளிக்கும்!" என்றெல்லாம் வீராவசனம் பேசினார் ததஜ தலைவர்களும் தொண்டர்களும், (ததஜ வை நம்பிய என்னைபோன்ற) இயக்கம் சாரா சகோதரர்களும்! எழுச்சிமிகு போராட்டம் வீரத்துடன் நடந்தேறியது.....ஆணவம் கொண்ட ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவே இல்லை முஸ்லிம்களின் வாழ்வாதார கோரிக்கையை!

 
தேர்தல் அறிவித்தபின்னர் இடஒதுக்கீடு அளிப்பது என்பது தேர்தல் விதிமுறைக்கு மாற்றமானது என்பதால் பெப்ருவரி 23 - ததஜ பொதுக்குழு கூடி ததஜ உறுப்பினர்களிடம் ஒப்புக்கு சப்பாக கருத்துகணிப்பு நடத்துகின்றனர்! நிலை மாற்றம் நடக்கிறது. பேசிய வீரவசனங்கள் எல்லாம் காற்றில் கரைந்து "ஆணையத்துக்கு பரிந்துரை செய்தால் அதிமுகவுக்கு ஓட்டு" என்று இவர்களே தங்களை ஏமாற்றுவதற்கு ஜெயாவுக்கு "டிப்ஸ்" கொடுத்தனர்! பெப்ருவரி 28 அன்று ததஜ கோரிக்கை மனு பரிந்துரை வேண்டி அனுப்பப்பட்டுள்ளதாக அரசின் வலைதளத்தில் வருகிறது! அதன் விபரத்தையும் அலசுவோம்..... (பார்க்க: இந்த பதிவின் இரண்டாம் கருத்து படத்தை)

 


 
 
வலைதளத்தில் உள்ள கடிதம் எதை சொல்கிறது??

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகரித்து அளிக்க வேண்டி தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் தலைவரின் பெப்ருவரி 25 தேதியிட்ட கோரிக்கை முனுவும், பெப்ருவரி 26 தேதியிட்ட இந்திய தௌஹீத் ஜமாஅத் தலைவரின் மனுவும் அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் (BC. MBC & MINORITIES WELFARE DEPARTMENT) ​முதன்மை செயலாளர் (PRINCIPAL SECRETARY), தமிழ்நாடு பிர்ப்படுத்தப்பட்டோர் ஆணையயத்தின் (TAMILNADU BACKWARD CLASSES COMMISSION) உறுப்பினர் செயலருக்கு (MEMBER SECRETARY) பெப்ருவரி 28 அன்று கடிதம் எண் #19 வாயிலாக பரிசீலனை (EXAMINE) செய்து பரிந்துரை வழங்குமாறு (RENDER RECOMMENDATIONS) அனுப்புகிறார், கோரிக்கையாளர்களுக்கு நகல் (COPY TO) வைத்து! இந்த "கடிதம்" தான் விஷமத்தனமாக அரசின் வலைத்தளத்தில் இடம்பெற்றுள்ளது. (பார்க்க: இந்த பதிவின் மூன்றாம் கருத்து படத்தை)

 
 

மமக க வுக்கு பரிசீலனைக்கு கிடைத்ததாக ஒப்புதல் கடிதம் கிடைத்தது ததஜ வுக்கு ஒப்புதல் கடிதம் கூட கிடைக்கவில்லை! கடிதத்தை "உத்தரவு" என நம்புகின்றனர் ததஜவினர், அல்லது அவ்வாறு நம்பவைக்கப்படுகின்றனர்!.
 
 
"அரசு ஒரு ஆணையத்துக்கு உத்தரவு போட முடியாது, கோரிக்கையை பரிசீலிக்க "வேண்டி" அனுப்பினால், ஆணையம் அந்த மனுவை பரிசீலித்து அரசுக்கு பரிந்துரை செய்யும் அதனடிப்படையில் அரசு "ஆணை" பிறப்பிக்கலாம், பிரப்பிக்காமலும் இருக்கலாம், அது பரிந்துரையை பொருத்தது! இது தான் மமக விஷயத்திலும், ததஜ விஷயத்திலும் நடந்துள்ளது! ஆனால் ததஜ உண்மைக்கு புறம்பாக "அரசு ஆணை" பிறப்பதனால் அதிமுக வுக்கு ஆதரவு என்று தங்கள் உறுப்பினர்களை நம்ப வைத்தனர்...


ஒரு ஒப்பீடு....



 
இந்த அரசியல் சறுக்கல் அடுத்தடுத்து ததஜவினரை தடுமாற வைத்தது. அதிமுக ஆதரவு என்னும் நிலைப்பாடு எடுத்ததால், ஜெயாவை பரிசுத்தமாக்க சிலர் களமிறங்கினர். இதற்குமுன் எப்போது சொல்லாதவைகளை இப்போது சொல்ல முன்வந்தனர்! கரசேவை விஷயத்தில் ஜெயாவுக்கு எதிரான குற்றசாட்டுக்கள் அவதூறுகள் என்றும், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கருணாநிதி அளித்ததற்கு காரணம் ஜெயா அமைத்த ஆணையம் என்றும் தவறான வாதங்களை வைத்தும், தாங்களே வசதியாக மறந்து போயிருந்த கருணாநிதியின் இஸ்லாமிய துரோகங்களை இப்போது முன்வைத்தும் தங்கள் சந்தர்ப்பவாத அரசியலை வெளிக்காட்டினர்! பாஜகவோ, மோடியோ ஒரு பொருட்டே அல்ல, பாஜக ஆட்சிக்கு வருவதில் முஸ்லிம்கள் கவலை கொள்ள தேவை இல்லை என்று கூட சொல்லியது ததஜ தலைமை. அதிமுக ஆதரவு நிலைபாடிர்க்காக....


ஆனால், இந்நிலை நீடிக்கவில்லை, தொடர்ந்து பல தளத்திலும் எதிர்வலைகள் கிளம்பியது, முகநூல், இந்த அரசியல் சறுக்கலை எதிர்ப்பதில் பெரும்பங்காற்றியது. ததஜவின் உறுப்பினர்களில் பலரும்கூட தங்கள் அதிருப்தியை தலைமைக்கு எடுத்து சொல்லியிருக்ககூடும்....அதே வேளையில், அதுவரை மோடிக்கு எதிராகவோ, பாஜகவுக்கு எதிராகவோ பேச துணியாத திமுக தலைவர்கள் பாஜக வின் தேர்தல் அறிக்கையை தீவிரமாக எதிர்த்து பேசினர், ஆனால் ஜெயா வாய் திறக்கவில்லை. இந்த தருணத்தை பயன்படுத்தி, ததஜ நிலைபாடை மாற்றியது, அல்ஹம்துலில்லாஹ். தன தவறை திருத்திக்கொண்டது. பெரும்பாலான முஸ்லிம்கள் தங்கள் அதிமுக ஆதரவை விரும்பவில்லை என்றும் சகோதரர் பீஜே அவர்கள் நிலைப்பாடு மாற்றத்திற்கு காரணங்களில் ஒன்றாக சொன்னார் என்பதை நினைவில் கொள்ளவும்!. எப்படியோ, நிலைப்பாடு மாற்றப்பட்டு, பாஜக, அதிமுக மற்றும் மமக (!?!?!)வுக்கு எதிரான நிலைபாடை ததஜ எடுத்தது

​மமக ​விஷயத்தில் "குற்ற சம்மதம் பத்திரம்"(ததஜ வுக்கு எதிராக கூறப்படும் குற்றசாட்டுகளுக்கு வருத்தம் தெரிவிக்கும் கடிதம்) மற்றும் "அடிமை சாசனம்"(இனி ததஜ வுக்கு எதிராக எதுவும் தவறாக செய்யமாட்டோம் என்ற வாக்குறுதி!) கிடைக்காததால் ஆதரவு இல்லை என்ற நிலைபாட்டை எடுத்துள்ளனர்! அதை தாங்கள் மமகவுக்கு ஆதரவளிக்க தயாராகி தியாகம் செய்து கொள்ள இருந்தது போலவும், மமக இவர்கள் கேட்டது போன்ற கடிதங்களை அளிக்காததால் தான் ஆதரவு அளிக்கவில்லை என்றும் கூறுகின்றனர்!

இனி தேர்தலில் தெரியும் முஸ்லிம் இயக்கங்களின் தாக்கம் எவ்வாறு இருந்தது என்று....காத்திருப்போம்...நம்பிக்கையுடன்!
பிரார்த்திப்போம்....முஸ்லிம்களின் வாழ்வுக்கும், வாழ்வுரிமைக்கும் நல்வழியை அல்லாஹ் காட்டுவான் என்று!!!!
 
 

Comments

  1. இந்த தேர்தல் பல படிப்பினைகளை இஸ்லாமிய இயக்கங்களுக்கு தந்துள்ளது .... Result வந்ததும் பல தெளிவுகளும் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ் .... ஆக வரவிருக்கின்ற சட்ட மன்ற தேர்தலையாவது முறையாக எதிர் கொள்ள முன் வருவார்களா ?!....

    ReplyDelete
  2. மக்களவை தேர்தல் முடிவுகள், பின்னர் நடைபெற்ற பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய பாடத்தை தந்துள்ளது எனலாம். ஒருவருக்கொருவர் குழிவெட்டிக்கொண்டிருந்தால் ஒட்டுமொத்த சமுதாயமும் படுகுழியில் விழவேண்டிவரும் என்பது தெள்ளத்தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. ஆனாலும் முஸ்லிம் சமுதாயம் பாடம் கற்றுக்கொண்டதாய் தெரியவில்லை. பல கூறுகளாக பிரிந்து கிடக்கின்றனர். பெரும்பாலான பிரிவுகளுக்கு கொள்கை காரணமல்ல, ஈகோ மட்டுமே காரணம். கொள்கை ரீதியாக பிரிந்திருந்தால் கூட அதில் ஒரு நியாயம் உள்ளது. கொள்கை மறந்து "போலி" ஒற்றுமை தேவை இல்லை. ஆனால் பிரிந்து இருப்பதற்காகவே கொள்கை வேற்றுமைகளை புனைந்தெடுப்பது நடைபெறுகிறது என்பது வேதனைக்குரியது! "நீ அப்படி செய்தால் நான் உனக்கு மாறு செய்வேன்", என்பது போல் நடந்து கொள்கின்றனர்! "ஒற்றுமைக்கு பாடுபடுகிறோம்", என்று சொன்னவர்கள் கூட ஒன்றாக இனணைந்து செயல்படமுடியவில்லை என்பது மிகவும் மோசமானது! இந்நிலை தொடர்ந்தால் வரும் சட்டமன்ற தேர்தலிலும் முஸ்லிம்கள் செல்லா காசாகவே மதிக்கப்படுவர்!


    முஸ்லிம் அரசியல் கட்சிகளை எதிர்த்து "அரசியல் இல்லை" என்று சொல்லும் கட்சிகள் "அரசியல்" செய்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும்! அரசியல் செய்பவர்களும் முஸ்லிம்களின் நலனை கருத்தில் கொண்டு ஏனைய முஸ்லிம் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு வைத்தாவது கூட்டணி அமைக்கவேண்டும் குறைந்தபட்சம்! இல்லை என்றால் பிரித்தாளும் சூழ்ச்சியை அழகாக கையாண்டு பாசிச சக்திகள் தமிழகத்தில் காலூன்ற முஸ்லிம்களே காரணமாகிவிடுவோம்! என்றும் திராவிட கட்சிகளின் அடிமைகளாகவே இருக்கபோகிறோமா?? சிந்திக்க கடமை பட்டுள்ளோம்...


    முஸ்லிம்களின் சக்தி இந்திய நாட்டில் இன்னும் உண்டு என்பதற்கு அழகிய உதாரணம் "ஹைதராபாத் சிங்கம்" ஒவைசி!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

திருமண துஆ

# திருமண _ துஆ   //அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன ஆதம வஹவ்வா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன நூஹிவ் வஃபாரிஸா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன இப்ராஹீம வஸாரத்த அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன மூஸா வஸஃப்ஃபூரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அய்யூப் வரஹீமா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன யூசுஃப் வசுலைஹா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன முஹம்மதின் வஹதீஜதுல் குரா , வஆயிஷத்தத் துஹ்ரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அலிய்யின் வஃபாதிமத அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம்   அல்லாஹும்மா பாரிக் லஹுமா பிர்ரிபாயி வல் பனீன் //   * பொருள்:     ***அல்லாஹ்வே   ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா ( அலை) ஆகியோருக்கு மத்தியில் இணைப்பை...

ஹஜ்ஜத்துல் விதா உரை - Prophet Muhammad's (PBUH) Farewell Sermon

ஹஜ்ஜத்துல் விதா உரை மக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா! என்று எனக்குத் தெரியாது. மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதத்தையும், இந்த (பிறை 9ஆம்) நாளையும், இந்த (மக்கா) நகரையும் புனிதமாகக் கருதுவதுபோல் உங்களில் ஒருவர் மற்றவன் உயிரையும் பொருளையும் மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள். ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவருக்கே வழங்கப்படும் அவரது உறவினருக்கு அல்ல. தந்தை தன் பிள்ளைக்கு அநியாயம் செய்ய வேண்டாம் பிள்ளையும் தன் தந்தைக்கு அநியாயம் செய்ய வேண்டாம். தந்தையின் குற்றத்திற்காகப் பிள்ளையை அல்லது பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையை தண்டிக்கப்பட மாட்டாது. அறிந்துகொள்ளுங்கள்! அறியாமைக் காலத்தின் அனைத்து செயல்களையும் நான் எனது கால்களுக்குக் கீழ் புதைத்து அழித்து விட்டேன். அறியாமைக் காலக் கொலைகளுக்குப் பழி வாங்குவதை விட்டுவிட வேண்டும். முதலாவதாக, எங்கள் குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட ரபீஆ இப்னு ஹாரிஸின் மகனுக்காகப் பழிவாங்குவதை நான் விட்டு விடுகிறேன். அறியாமைக் கால வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டது. முதலாவதாக நான் என...

இத்தா

இத்தா " இத்தா" (காத்திருத்தல்) என்பது விவாகரத்து பெற்ற மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு இஸ்லாம் அறிவுறுத்தும் பாதுகாப்பு வளையமாகும்.   விவாகரத்து பெற்ற பெண்கள் மூன்று மாதங்களும் , கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் , கர்ப்பமான பெண்கள் விவாகரத்து பெற்றாலோ , கணவனை இழந்தாலோ   குழந்தையை ஈன்றேடுக்கும்வரை மறுமணம் புரியாமல் “இத்தா” இருக்கவேண்டும் என இஸ்லாம் அறிவுறுத்துகிறது....     // திருகுரான் சூரத்துல் தலாக் 65:4 - மேலும் , உங்கள் பெண்களில் , எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால் , அப்பெண்களுக்கும் , மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும் , ´ இத்தா ´ ( வின் தவணை) மூன்று மாதங்களாகவும் , தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய ( ´ இத்தா ´ வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும் , மேலும் , எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான். //   விவாகரத்து பெற்ற பெண்ணிற்கு மூன்று மாதங்களை அறிவுறுத்துவது அவள் குழந்தை பேறு ப...