Skip to main content

HADEETHS OF THE DAY


நூல்:  ஸஹீஹ்  புஹாரி

 

7049. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நான் உங்களுக்கு முன்பே (மறுமை நாளில் 'அல்கவ்ஸர்') தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அப்போது உங்களில் சிலர் என்னிடம் கொண்டுவரப்படுவார்கள். நான் அவர்களுக்கு (தடாகத்திலிருந்து தண்ணீர்) வழங்க முற்படும்போது அவர்கள் என்னிடமிருந்து விலக்கிவைக்கப்படுவார்கள். உடனே நான், 'என் இறைவா! இவர்கள் என் தோழர்கள்' என்று கூறுவேன். அதற்கு அல்லாஹ், 'இவர்கள் உமக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன (குழப்பங்களை) உருவாக்கினார்கள் என்று உமக்குத் தெரியாது' என்று கூறுவான்.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.4
Volume :7 Book :92

 

6921. 'இறைத்தூதர் அவர்களே! 'நாங்கள் அறியாமைக் காலத்தில் செய்த(த)வற்றிற்காக (மறுமையில்) தண்டிக்கப்படுவோமா?' என ஒருவர் கேட்டதற்கு, 'இஸ்லாத்தில் இணைந்து நன்மை புரிகிறவர் அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளுக்காகத் தண்டிக்கப்படமாட்டார். இஸ்லாத்தில் இணைந்த பிறகு (மீண்டும் இறைமறுப்பு எனும்) தீமையைப் புரிகிறவர் (அறியாமைக் காலத்தில் செய்த) முந்திய தவறுகளுக்காகவும், (இஸ்லாத்தை ஏற்றபின் செய்த இந்தப்) பிந்திய தவறுகளுக்காகவும் தண்டிக்கப்படுவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
Volume :7 Book :௮௮

 

6937. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
'
யார் இறைநம்பிக்கை கொண்டு பிறகு தம் நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடவில்லையோ அவர்களுக்கே உண்மையில் அமைதி உண்டு' எனும் (திருக்குர்ஆன் 06:82 வது) இறைவசனம் அருளப்பெற்றபோது நபித்தோழர்களுக்கு அது சிரமமாக இருந்தது. மேலும், அவர்கள் 'எங்களில் யார் தாம் தமக்குத்தாமே அநீதியிழைக்காதவர்?' என்று கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அநீதி என்பதற்கு நீங்கள் நினைக்கிற அர்த்தமில்லை. லுக்மான் அவர்கள் தம் புதல்வருக்குக் கூறியதைப் போன்றே இங்கு பொருள்கொள்ளவேண்டும். 'என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காதே! நிச்சயமாக! இணை கற்பிப்பதே மிகப்பெரும் அநீதியாகும்' என்று கூறினார். (திருக்குர்ஆன் 31:13)24
Volume :7 Book :88

 

6229. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
(
ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிர்த்து விடுங்கள்' என்று கூறினார்கள். அப்போது மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அங்கு அமராமல் இருக்க இயலாது. அங்கு (அமர்ந்துதான் பல விஷயங்களை) நாங்கள் அங்கு அமராமல் இருக்க இயலாது. அங்கு (அமர்ந்துதான் பல விஷயங்களை) நாங்கள் பேசிக்கொள்கிறோம்' என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(அங்கு) நீங்கள் அமர்ந்துதான் ஆகவேண்டும் என்றிருந்தால், சாலைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்' என்று கூறினார்கள். மக்கள், 'சாலையின் உரிமை என்ன? இறைத்தூதர் அவர்களே!' என்று வினவினர். நபி(ஸல்) அவர்கள், '(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், (பாதசாரிகளுக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும் படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்' என்று பதிலளித்தார்கள்.6
Volume :6 Book :௭௯

 

6231. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் (முகமன்) சொல்லட்டும்.
10
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Volume :6 Book :79

 

6235. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். (அவையாவன:)
1.
நோயாளிகளை நலம் விசாரிப்பது. 2. ஜனாஸாக்களைப் பின்தொடர்ந்து செல்வது. 3. தும்மியவர் 'அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால் அவருக்காக 'யர்ஹமுக்கல்லாஹ்' (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று மறுமொழி கூறுவது. 4. நலிந்தவருக்கு உதவுவது. 5. அநீதியிழைக்கப்பட்டவருக்கு ஒத்தாசை செய்வது. 6. (மக்களிடையே) சலாமைப் பரப்புவது. 7. சத்தியம் செய்தவர் அதை நிறைவேற்ற உதவுவது.
(
பின்வருவனவற்றைச் செய்யக் கூடாதென) தடைசெய்தார்கள்.
1.
வெள்ளிப் பாத்திரத்தில் பருகுவது. 2. (ஆண்கள்) தங்கமோதிரம் அணிவது. 3. மென்பட்டுத் திண்டில் அமர்வது. 4. சாதாரணப் பட்டு அணிவது. 5. அலங்காரப் பட்டு அணிவது. 6. எம்ப்திய பட்டு அணிவது. 7. தடித்த பட்டு அணிவது.11
Volume :6 Book :௭௯

 

6236. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், '(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதுமாகும்' என்று பதிலளித்தார்கள்.12
Volume :6 Book :௭௯

 

6237. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒரு முஸ்லிம் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து இவரைவிட்டும் அவரும், அவரைவிட்டு இவரும் முகம் திருப்பிக்கொள்வர். (இவ்விதம் செய்யலாகாது.) இவர்கள் இருவரில் சலாமை முதலில் சொல்பவரே சிறந்தவராவார்.
என அபூ அய்யூப் அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்.13
(
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இதை நான் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அவர்களிடமிருந்து மூன்று முறை செவியேற்றுள்ளேன்.
Volume :6 Book :79



 

Comments

Popular posts from this blog

திருமண துஆ

# திருமண _ துஆ   //அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன ஆதம வஹவ்வா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன நூஹிவ் வஃபாரிஸா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன இப்ராஹீம வஸாரத்த அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன மூஸா வஸஃப்ஃபூரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அய்யூப் வரஹீமா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன யூசுஃப் வசுலைஹா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன முஹம்மதின் வஹதீஜதுல் குரா , வஆயிஷத்தத் துஹ்ரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அலிய்யின் வஃபாதிமத அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம்   அல்லாஹும்மா பாரிக் லஹுமா பிர்ரிபாயி வல் பனீன் //   * பொருள்:     ***அல்லாஹ்வே   ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா ( அலை) ஆகியோருக்கு மத்தியில் இணைப்பை...

ஹஜ்ஜத்துல் விதா உரை - Prophet Muhammad's (PBUH) Farewell Sermon

ஹஜ்ஜத்துல் விதா உரை மக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா! என்று எனக்குத் தெரியாது. மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதத்தையும், இந்த (பிறை 9ஆம்) நாளையும், இந்த (மக்கா) நகரையும் புனிதமாகக் கருதுவதுபோல் உங்களில் ஒருவர் மற்றவன் உயிரையும் பொருளையும் மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள். ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவருக்கே வழங்கப்படும் அவரது உறவினருக்கு அல்ல. தந்தை தன் பிள்ளைக்கு அநியாயம் செய்ய வேண்டாம் பிள்ளையும் தன் தந்தைக்கு அநியாயம் செய்ய வேண்டாம். தந்தையின் குற்றத்திற்காகப் பிள்ளையை அல்லது பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையை தண்டிக்கப்பட மாட்டாது. அறிந்துகொள்ளுங்கள்! அறியாமைக் காலத்தின் அனைத்து செயல்களையும் நான் எனது கால்களுக்குக் கீழ் புதைத்து அழித்து விட்டேன். அறியாமைக் காலக் கொலைகளுக்குப் பழி வாங்குவதை விட்டுவிட வேண்டும். முதலாவதாக, எங்கள் குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட ரபீஆ இப்னு ஹாரிஸின் மகனுக்காகப் பழிவாங்குவதை நான் விட்டு விடுகிறேன். அறியாமைக் கால வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டது. முதலாவதாக நான் என...

தீபாவளி வாழ்த்துக்கள்! ​ஒரு பார்வை...

தீபாவளி வாழ்த்துக்கள்! ​ ஒரு பார்வை .....       இந்திய நாடு மதசார்பற்ற ஜனநாயக நாடு. இங்கே வாழும் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவதும் ஒதுக்கப்படுவதும் உலகறிந்ததே....   அதற்க்கு ஒரு காரணம் சிலபல ​ முஸ்லிம்களிடம் இல்லாத சகிப்புத்தன்மை, நல்லிணக்கம், நட்புணர்வு போன்றவைகளே...   முஸ்லிம்களுக்கு இரு திருவிழாக்கள் மட்டுமே உள்ளன, மார்க்க அடிப்படையில். நோன்புப்பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப்பெருநாள்! இவை தவிர கந்தூரி விழாக்கள், மிலாது விழாக்கள், தர்காஹ்க்களில் நடைபெறும் ஆண்டுவிழாக்கள், நல்லடியார்கள் என்போருக்கான நினைவு பெருநாட்கள் அனைத்துமே மார்க்க அடிப்படையில் வழிகேடுகளே!!! இப்படி நம்புவதும் அதன் அடிப்படையில் நடப்பதும் ஈமான் கொண்ட முஸ்லிம்களின் மீது கடமையாகும்! ஏனென்றால் மார்க்கம் ​பரிபூர்ணமாக்கப்பட்டுவிட்டது!​ ​ ​​ திருகுரான் 5:3 . ....இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்......   அதுபோலவே, பிற சகோதரர் மதத்தவர்களின் மத அடிப்படையிலான விழாக்களையோ, பண்டிகைகளை​யோ நாமும் கொண்டாட...