இஸ்லாம் கூறும் நல்லடியார்கள்! அன்பு சொந்தங்களே , அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்கத்துஹு கிறிஸ்தவர்கள் கடவுளர்களாக வழிபடும் ஏசு கிறிஸ்து மற்றும் அவரது தாயாரான " கன்னி மாதா" மேரி அவர்களையும் பற்றி அவர்களது புனித நூலான பைபிளைவிடவும் மிக அதிகமாக நமது இறை வேதம் திருகுர்ஆன் சிறப்பித்து கூறுகிறது. திருகுர்ஆன் சிறப்புமிக்க நபிமார்களாக நமக்கு எடுத்து காட்டுபவர்களுள் மிக முக்கியமானவர்கள் நபி ஈசா ( அலை) அவர்கள். நபி ஈசா ( அலை) அவர்களை குரானின் பல இடங்களில் சிறப்பித்துள்ளான். ஒரு கன்னியின் வயிற்றில் கருவாய் பிறந்த அவர்களது பிறப்பை ஆதம் ( அலை) அவர்களது படைப்புக்கு நிகராக சொல்லிகாட்டுகிறான் அல்லாஹ். கன்னியான மரியம் ( அலை) அவர்களிடத்தில் நன்மாராயம் கூறுகையில் அல்லாஹ் எப்படி கூறியுள்ளான் பாருங்கள்.... // திருகுர்ஆன் , சூரா ஆலே இம்ரான் - 3:42 ( நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள் ; மர்யமே! நி...
IN THE NAME OF ALLAH, THE MOST MERCIFUL, THE MOST BENEFICENT...