அல்லாஹ்வின் நேசர்கள் எத்தகையோர்? அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு இஸ்லாமிய சகோதரர்களே... திருகுரான் சூரா யூனுஸ் 10 :62 ( முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள் ; நிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை ; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். 10 :63 அ வர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள். இந்த இரு இறைவசனங்கள் , இறைவனின் நேசத்தை பெறுபவர்கள் எப்படி பட்டவர்கள் என்று நமக்கு அறிவிக்கின்றன! இந்த வசனங்களை வைத்து கொண்டு தான் "தர்காஹ் நேசர்கள் " அவுலியாக்களை வணங்குவதற்கு வழி தேடுகின்றனர்! அந்த வசனங்களை நிதானத்துடன் , உண்மையறியும் பொருட்டு , திறந்த மனதுடன் சிந்தித்தாலே மனம் திருந்தி தர்காஹ்க்களை புறம் தள்ளி விடும் நிலை வந்து விடுமே...! இந்த அழகிய வசனங்கள் என்ன சொல்கின்றன! ??? 1 ) அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித பயமும் இல்லை ! "பயம்" என்பது மனதினுள் இருக்கும் ஒரு குணம் , அதை அல்லாஹ் மட்டுமே அறியமுடியும்!!! 2 ) அவர்கள் எதைபற்றியும் துக்கப்பட மாட்டார்கள் ! ...
IN THE NAME OF ALLAH, THE MOST MERCIFUL, THE MOST BENEFICENT...