இஸ்லாமியர்களுக்கு முதல் முதல் அடைக்கலம் அளித்த அபிசீனிய மன்னர் நஜ்ஜாஷி அவர்கள் ......ஒரு கிருஸ்தவர்! அல் அமீனாக விளங்கிய முகம்மதை இறைத்தூதர் என்று உறுதிசெய்த பெரியவர் வரஹா ......ஒரு கிருஸ்தவர்! நம்மோடு உறவோடு வாழும் நல்லுள்ளம் கொண்ட கிருஸ்தவ சகோதரர்களை "அவர்களின் நம்பிக்கைப்படி" "அவர்கள்" கொண்டாடும் திருநாளில் வாழ்த்த மனமில்லையென்றாலும் புண்படுத்தாமல் இருக்கலாமே???? தஃவா என்பது குற்றம்சுமத்தி புண்படுத்துவதல்ல, அழகிய முறையில் தீய்மையை தடுத்து நன்மையை ஏவுவதாகும். அழகிய தாஃவா செய்ய முதலில் நம்மை அவர்கள் மதிக்கும் பொருட்டு நடந்திட வேண்டும். மாற்றுமத கொண்டாட்டங்களுக்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பதால் எந்த நஷ்டமும் ஏற்படுவதில்லை, வாழ்த்து சொல்வதால் “மட்டுமே” மதநல்லிணக்கம் வளர்ந்துவிடும் என்றும் நம்பவுமில்லை. வாழ்த்துவதும் வாழ்த்தாமல் இருப்பதும் அவரவர் விருப்பம் சார்ந்தது. எப்படி வாழ்த்துவது கட்டாயமில்லையோ , அதுபோலவே "வாழ்த்தவே கூடாது" என்று சொல்வதிலும் அர்த்தமில்லை. பல இமாம்கள் வாழ்த்துவதற்கு எதிராக பத்வாக்கள் வழங்கினாலும், குரானையும் ஹதீஸையும் "...
IN THE NAME OF ALLAH, THE MOST MERCIFUL, THE MOST BENEFICENT...