திடீர் "இருதய துடிப்பு முடக்கம்" (SUDDEN "CARDIAC ARREST" - கார்டியாக் அர்ரஸ்ட்) க்கு இருதய இயக்க மீட்பு CPR (CPR – CARDIO PULMONARY RESUSCITATION) முதலுதவி முறை!
திடீர் "இருதய துடிப்பு முடக்கம்" (SUDDEN "CARDIAC ARREST" - கார்டியாக் அர்ரஸ்ட்) க்கு இருதய இயக்க மீட்பு CPR (CPR – CARDIO PULMONARY RESUSCITATION) முதலுதவி முறை! மாரடைப்பு (HEART ATTACK - ஹார்ட் அட்டாக்) என்பது இருதயத்தின் இரத்த ஓட்டம் (CIRCULATION) தடைபடுவதால் வருவது , திடீர் "இருதய துடிப்பு முடக்கம்" (SUDDEN "CARDIAC ARREST" - கார்டியாக் அர்ரஸ்ட் ) என்பது இருதயத்தின் மின்சார (ELECTRICITY) செயல்திறன் நிர்ப்பதனால் வருவது , இரண்டும் வெவ்வேறு. மாரடைப்பு (HEART ATTACK) இருதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களில் (Veins/Arteries) கொழுப்புப் படிந்து , ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும்போது , மாரடைப்பு ( Heart Attack) உருவாகிறது. அதாவது , ரத்தம் ஓட்டம் தடைப்படுவதால் அல்லது ரத்தம் ஓட்டம் இல்லாமல் போவதால் இருதயத்துக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் , ரத்த செல்கள் அழியத் தொடங்கும். இதனால் , இருதயம் பாதிக்கப்பட்டு , தனது துடிப்பை நிறுத்திக்கொள்வதே மாரடைப்பு...