"நோன்பு பிடிக்க சக்தியில்லாதவர்களுக்கு நோன்பு கடமையில்லை... எனவே, எந்த பரிகாரமும் செய்ய மார்க்க கட்டாயமில்லை!"
" நோன்பு பிடிக்க சக்தியில்லாதவர்களுக்கு நோன்பு கடமையில்லை... எனவே , எந்த பரிகாரமும் செய்ய மார்க்க கட்டாயமில்லை!" #TNTJ # ததஜ #நோன்பு #பரிகாரம் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்கத்துஹு அண்மையில் , தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் (ததஜ) தலைவர் சகோ. அல்தாபி அவர்களது "நோன்பு விட்டவர்கள் பரிகாரம் செய்வது ' பற்றிய ஒரு பதில் சமூக வலைதளங்களில் சர்ச்சையாக்கப்பட்டது. நோன்பு வைக்க சக்தியற்றவர்களுக்கு நோன்பு கடமையில்லை , எனவே பரிகாரமும் செய்யவேண்டியதில்லை என்னும் "புதிய" நிலைபாடு தனிப்பட்ட முறையில் என் மனதையும் உறுத்தி வந்தது. ஒரு சில ஆலிம்களின் விளக்கங்களும் ததஜ வின் நிலைபாடு தவறு என்பதை உணர்த்துவதாகவே எனக்கு பட்டது. என்றாலும் , என்னால் முடிந்த சில தகவல்களை ஆய்வு செய்ய முற்பட்டபோது ததஜ வின் நிலைபாடை சரி வைப்பதாகவே உள்ளது! முதலில்....எவை மார்க்க ஆதாரங்கள் என்ற என் நிலைபாடை எடுத்து வைத்துவிட்டு தொடர்கிறேன்.... 1) வஹீ மட்டுமே மார்க்க ஆதாரம். குரான் , மற்றும் குரானுக்கு முரண்படாத சஹிஹான நபி மொழிகள்! (அத...