அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சொந்தங்களே.... பாரமானதா குர்பானி ??? ## அல் குர்ஆன் 108 : 1-2 ( முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம். எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக! ## அல் குர்ஆன் 6:162 எனது தொழுகை , எனது வணக்க முறை , எனது வாழ்வு , எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன ; அவனுக்கு நிகரானவன் இல்லை ; இவ்வாறே கட்டளையிடப்பட்டுள்ளேன் ; முஸ்லிம்களில் நான் முதலாமவன் '' என்றும் கூறுவீராக! புனித ஹஜ்ஜை முன்னிட்டு வசதிவாய்ப்புள்ளவர்கள் மீது " உழுஹிய்யா" (குர்பானி) என்னும் அறுத்து பலி இடுதல் கடமையாகும். குர்பானி தியாகத்தை வலியுறுத்தும் ஒரு இறைவழிபாடாகும் (இபாதத்) **குர்பானி கொடுப்பது முஸ்லிம்களின் வழிமுறையாக அல்லாஹ்வால் ஆக்கப்பட்டுள்ளது. இதை நிறைவேற்றுபவர் முஸ்லிம்களின் வழியில் நடந்தவர் ஆவார். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்னால் (பிராணியை) அறுக்கின்றாரோ அவர் தம் (சொந்த தேவைக்காகவே) அறுத்தவர் ஆவார். யார் தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறாரோ அவரது ...
IN THE NAME OF ALLAH, THE MOST MERCIFUL, THE MOST BENEFICENT...