Skip to main content

Posts

"நோன்பு பிடிக்க சக்தியில்லாதவர்களுக்கு நோன்பு கடமையில்லை... எனவே, எந்த பரிகாரமும் செய்ய மார்க்க கட்டாயமில்லை!"

" நோன்பு பிடிக்க சக்தியில்லாதவர்களுக்கு நோன்பு கடமையில்லை... எனவே , எந்த பரிகாரமும் செய்ய மார்க்க கட்டாயமில்லை!"   #TNTJ # ததஜ #நோன்பு #பரிகாரம்     அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்கத்துஹு     அண்மையில் , தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் (ததஜ) தலைவர் சகோ. அல்தாபி அவர்களது "நோன்பு விட்டவர்கள் பரிகாரம் செய்வது ' பற்றிய ஒரு பதில் சமூக வலைதளங்களில் சர்ச்சையாக்கப்பட்டது.   நோன்பு வைக்க சக்தியற்றவர்களுக்கு நோன்பு கடமையில்லை , எனவே பரிகாரமும் செய்யவேண்டியதில்லை என்னும் "புதிய" நிலைபாடு தனிப்பட்ட முறையில் என் மனதையும் உறுத்தி வந்தது. ஒரு சில ஆலிம்களின் விளக்கங்களும் ததஜ வின் நிலைபாடு தவறு என்பதை உணர்த்துவதாகவே எனக்கு பட்டது. என்றாலும் , என்னால் முடிந்த சில தகவல்களை ஆய்வு செய்ய முற்பட்டபோது ததஜ வின் நிலைபாடை சரி வைப்பதாகவே உள்ளது!   முதலில்....எவை மார்க்க ஆதாரங்கள் என்ற என் நிலைபாடை எடுத்து வைத்துவிட்டு தொடர்கிறேன்....   1) வஹீ மட்டுமே மார்க்க ஆதாரம். குரான் , மற்றும் குரானுக்கு முரண்படாத சஹிஹான நபி மொழிகள்! (அத...

ஒரு எதார்த்தமான கற்பனை உரையாடல்.....

ஒரு எதார்த்தமான கற்பனை உரையாடல்.....       நபர் 1: அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்கத்துஹு...   நபர் 2: வலைக்கும் அஸ்ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்கத்துஹு...   நபர் 1: ஏன்பா மௌலீத் ஓதுறியே , அது இஸ்லாத்துல உண்டா ?   நபர் 2: பின்னே ? நம் முன்னோர்கள் தொன்றுதொட்டே ஓதுறாங்களே ? இஸ்லாத்துல இல்லாமலா ஓதுறாங்க ?   நபர் 1: அதில்லேப்பா , இஸ்லாத்துல இருக்கணும்ன்னா அது அல்லாஹ்வோ , அவனுடைய இறுதி நபி (ஸல்) அவர்களோ காட்டி தந்ததாக   தானே இருக்கணும் , அப்படி ஏதாவது குரான்லையோ சஹிஹ் ஹதீஸ்லையோ   ஆதாரம் இருக்கா ???   நபர் 2: ஒஹ்ஹ்ஹ் ......"அவனா" நீ ? நீ குரான்   ஹதீஸ் பார்ட்டியா ? " ஆதாரம்" எல்லாம் வேற கேக்குறே!! நீ "அவனே" தான்....   நபர் 1: புரியலையே....   நபர் 2: புரியாது புரியாது....நீ விதண்டாவாதம் செய்யும் "வஹ்ஹாபி" தானே ? உன் கூடவெல்லாம் பேசவே கூடாது....   நபர் 1: வஹ்ஹாபி!! ???? குரான் ஹதீஸில் இருந்து ஆதாரம் கேட்பவன் வஹ்ஹாப...