Skip to main content

Posts

பாரமானதா குர்பானி???

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சொந்தங்களே....   பாரமானதா குர்பானி ???             ## அல் குர்ஆன் 108 : 1-2   ( முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம். எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக! ## அல் குர்ஆன் 6:162 எனது தொழுகை , எனது வணக்க முறை , எனது வாழ்வு , எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன ; அவனுக்கு நிகரானவன் இல்லை ; இவ்வாறே கட்டளையிடப்பட்டுள்ளேன் ; முஸ்லிம்களில் நான் முதலாமவன் '' என்றும் கூறுவீராக!   புனித ஹஜ்ஜை முன்னிட்டு வசதிவாய்ப்புள்ளவர்கள் மீது " உழுஹிய்யா" (குர்பானி) என்னும் அறுத்து பலி இடுதல் கடமையாகும். குர்பானி தியாகத்தை வலியுறுத்தும் ஒரு இறைவழிபாடாகும் (இபாதத்)   **குர்பானி கொடுப்பது முஸ்லிம்களின் வழிமுறையாக அல்லாஹ்வால் ஆக்கப்பட்டுள்ளது. இதை நிறைவேற்றுபவர் முஸ்லிம்களின் வழியில் நடந்தவர் ஆவார். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்னால் (பிராணியை) அறுக்கின்றாரோ அவர் தம் (சொந்த தேவைக்காகவே) அறுத்தவர் ஆவார். யார் தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறாரோ அவரது ...

இஸ்லாம் கூறும் நல்லடியார்கள்!

இஸ்லாம் கூறும் நல்லடியார்கள்! அன்பு சொந்தங்களே , அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்கத்துஹு             கிறிஸ்தவர்கள் கடவுளர்களாக வழிபடும் ஏசு கிறிஸ்து மற்றும் அவரது தாயாரான  " கன்னி மாதா" மேரி அவர்களையும் பற்றி அவர்களது புனித நூலான பைபிளைவிடவும் மிக அதிகமாக நமது இறை வேதம் திருகுர்ஆன் சிறப்பித்து கூறுகிறது.   திருகுர்ஆன்   சிறப்புமிக்க நபிமார்களாக நமக்கு எடுத்து   காட்டுபவர்களுள் மிக முக்கியமானவர்கள் நபி ஈசா  ( அலை) அவர்கள். நபி ஈசா  ( அலை) அவர்களை குரானின் பல    இடங்களில்   சிறப்பித்துள்ளான். ஒரு கன்னியின் வயிற்றில் கருவாய் பிறந்த   அவர்களது பிறப்பை ஆதம்  ( அலை) அவர்களது படைப்புக்கு நிகராக சொல்லிகாட்டுகிறான் அல்லாஹ். கன்னியான மரியம்  ( அலை) அவர்களிடத்தில் நன்மாராயம் கூறுகையில் அல்லாஹ்   எப்படி கூறியுள்ளான் பாருங்கள்....   // திருகுர்ஆன் , சூரா   ஆலே இம்ரான்  -   3:42   ( நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள் ; மர்யமே! நி...