Skip to main content

Posts

எதனால் காசாவுக்கு ஆதரவு? இஸ்ரேலின் மீது கோபம்/வெறுப்பு?​ சிறிய விளக்கம்...

எதனால் காசாவுக்கு ஆதரவு? இஸ்ரேலின் மீது கோபம்/வெறுப்பு?​ சிறிய விளக்கம்... எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்களின்மீதும் நம் அனைவரின்மீதும் உண்டாவதாக...   தங்களுக்கு வந்தால் மட்டுமே கவலைப்படுவோம், மற்றவர்களுக்கு வந்தால் "நடுநிலை" வேஷம் போடுவோம் என்பதுபோல், காசா மக்கள் சாவதற்கு ஹமாஸ் தானே காரணம், இவர்கள் ஏன் ஆயுதங்களை விட்டு இஸ்ரேலுக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர்? "போர் நிறுத்தம் செய்யவேண்டுமானால் காசாவாலிருந்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளை அகற்றி காசா மக்களுக்கு சுதந்திரமாக நடமாட வழிவகை செய்யவேண்டும், இது நடக்காமல் எங்கள் உரிமை மீட்பு போராட்டத்தை விடமாட்டோம், தொடர்ந்து எங்களில் கடைசி பாலஸ்தீனி உயிர்விடும்வரை செறுத்து நின்று போராடுவோம்" என்று நிபந்தனை வைப்பதால் அப்பாவி மக்கள் சாகின்றனரே, அது தவறுதானே??? - என்று கேள்வி கேட்கும் நடுநிலையாளர்களே (!?) உங்களுக்கு சிறு விளக்கம்! காசாவை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...         1■ 1967 முதல் காசா இஸ்ரேலின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. அதாவது, இஸ்ரேல் வலுக்கட்டாயமாக காசாவை ஆக்கிரமத...

அல்லாஹ்வின் நேசர்கள் எத்தகையோர்?

அல்லாஹ்வின் நேசர்கள் எத்தகையோர்? அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு இஸ்லாமிய சகோதரர்களே...   ​ திருகுரான் சூரா யூனுஸ்   ​ 10 :62   ( முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள் ; நிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை ; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். 10 :63   அ ​ வர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்.   இந்த இரு இறைவசனங்கள் , இறைவனின் நேசத்தை பெறுபவர்கள் எப்படி பட்டவர்கள் என்று நமக்கு அறிவிக்கின்றன! இந்த வசனங்களை வைத்து கொண்டு தான் "தர்காஹ் நேசர்கள் " அவுலியாக்களை வணங்குவதற்கு வழி தேடுகின்றனர்! அந்த வசனங்களை நிதானத்துடன் , உண்மையறியும் பொருட்டு , திறந்த மனதுடன் சிந்தித்தாலே மனம் திருந்தி தர்காஹ்க்களை புறம் தள்ளி விடும் நிலை வந்து விடுமே...!   இந்த அழகிய வசனங்கள் என்ன சொல்கின்றன! ??? 1 ) அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித பயமும் இல்லை ! "பயம்" என்பது மனதினுள் இருக்கும் ஒரு குணம் , அதை அல்லாஹ் மட்டுமே அறியமுடியும்!!! 2 ) அவர்கள் எதைபற்றியும் துக்கப்பட மாட்டார்கள் ! ...

"கப்ர் சியாரத்" என்னும் அழகிய சுன்னத்!

"கப்ர் சியாரத்" என்னும் அழகிய சுன்னத் ! அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு இஸ்லாமிய சகோதரர்களே....   தர்காஹ்க்களை எதிர்க்கும் போதெல்லாம் "அவுலி யா பக்தர்கள்" வஹ்ஹாபி கோஷம் எழுப்பி திசை திருப்பி தப்பி விடலாம் என்று கனவு கண்டு வருகின்றனர்! இங்கே எந்த அறிஞரின் கருத்தையோ, ஏன் ஒரு வார்த்தையோ கூட குறிப்பிடாமல் வெறும் குரான் வசனங்கள் மற்றும் ஹதீஸ்களை தொகுத்தளித்துள்ளேன்...இப்போது என்ன சொல்ல போகிறார்கள் தர்காஹ் விசுவாசிகள்!??? இந்த ஆதாரங்களை மறுக்க போகிறார்களா??? இவற்றை நிராகரித்துவிட்டு ஷிர்க்கில் மூழ்கப்போகிரார்களா??? இஸ்லாத் தை வைத்து வயிறுவளர்க்க நினைத்தவர்கள் எழுதி வைத்த கித்தாபுகளை தூக்கி எறிந்து விட்டு, குரான் ஹதீஸை ஏற்று கொள்ளும் மனப்பக்குவத்தை காட்டுவார்களா...பொறுத்திருந்து பார்ப்போம்.....இன்ஷா அல்லாஹ்....   கப்று ஸியாரத் செய்யலாமா? அதன் நோக்கம் என்ன? சியாரத் செய்வது எப்படி!?   நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் (முதலில்) கப்றுகளுக்கு ஸியாரத் செய்வதைத் தடுத்து வந்தேன். (இப்போது) ஸியாரத் செய்யுங்கள். அது மரணத்தை நினைவு படுத்தும் . ( அறிவிப்பவர்:...

"ததஜ வுக்கும் வினவுக்கும் இடையேயான விவாத" விஷயத்தில் என்னுடைய தனிப்பட்ட கருத்து!

    "ததஜ வுக்கும் வினவுக்கும் இடையேயான விவாத" விஷயத்தில் என்னுடைய தனிப்பட்ட கருத்து!     ததஜ (தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத்) வினர் சிலர் "வினவு" அலுவலகத்தில் சென்று அவர்களுடன் நடத்திய உரையாடலின் பதிவுகளை வெளியிட்டதற்கு "வினவும் தன்னுடைய "தகுதியை வெளிப்படுத்தி பதிவிட்டார்கள், தற்போது, "செங்கொடி"யும் அதை ஆயுதமென கையில் எடுத்துள்ளது!     ததஜ என்னும் இஸ்லாமிய அமைப்பின் மீதுள்ள, சொல்லப்போனால் இஸ்லாத்தின் மீதுள்ள வெறுப்பை உமிழ்ந்ததாகவே கருதுகிறேன். இத்தகைய கடவுள் மறுப்பாளர்கள் (நாத்திகர்கள்), தங்கள் அறிவுகெட்ட வெறுப்பு அரசியலை நிலைநாட்டிட, தங்களின் வாழ்வுரிமையை  அளித்திடாத ஹிந்துமத உயர்சாதியினரை பழிவாங்க கடவுள் மறுப்பு கொள்கை என்னும் மறைவில் இருந்துகொண்டு ஹிந்துக்களை திட்டி தீர்த்தனர். அதற்க்கு ஆதரவு வேண்டும் என்பதற்காகவே முஸ்லிம்களுக்கு நண்பர்களாக நடித்தும், முஸ்லிம்களின் மீது அக்கறையுள் ளவர்களாக காட்டிக்கொண்டும் வரு கின்றனர்!. என்றாலும்கூட சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லா ம் தம் ...

2014 LOKSABHA ELECTION RESULTS AND VOTE SHARE OF MAJOR PARTIES

2014 LOKSABHA ELECTION RESULTS AND VOTE SHARE OF MAJOR PARTIES  

வேற்றுமையில் ஒற்றுமையும், பிரதமர் மோடியும்!

  வேற்றுமையில் ஒற்றுமையும், பிரதமர் மோடியும்! உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் இந்தியா!!! தன்னகத்தே பல்வேறு மதம், இனம், ஜாதி, மொழி, கலாசாரம் உள்ளடக்கிய நாடுகளில் சகிப்புத்தன்மைக்கும், மதசார்பின்மைக்கும், "வேற்றுமையில் ஒற்றுமை" என்னும் உயரிய பண்பிற்கும் உலகி ன் தலைசிறந்த நாடுகளில் முதன்மையானது இந்தியா என்றால் அதுவும் மிகையில்லை!!!!   பல்லாண்டுகாலங்க ​ளா க ஒற்றுமையாய் வாழ்ந்து வந்த அனைத்து இந்திய குடிமக்களையும் தற்போது நடந்து முடிந்த தேர்தல் பிரித்துள்ளது என்றே தோன்றுகிறது! எவ்வாறு ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டார்களோ, அதே போலவே தேச விரோத சங்க்பரிவார கும்பல் இந்திய மக்களை மததுவேஷத்தை செலுத்தி பிரித்தாண்டு இப்போது தேர்தல் வெற்றியையும் சுவைத்துள்ளனர்!   பத்தாண்டுகால காங்கிரஸ் ஆட்சியில், கூட்டணி கட்சிகள் சேர்ந்து போட்ட கொள்ளையையும், மந்தமான செயல்பாடையும் பூதரகரமாக பெரிதாக்கி, அதே வேளையில் காங்கிரஸ் ​ஆட்சியின் நல்லவற்றை அடியோடு மறைத்து, உலகமே பொருளாதார மந்தநிலையில் தத்தளித்தபோதும் இந்தியா தலைநிமிர்ந்து நின்றது என்னும் மிகமுக்க...